சிறகடிக்க ஆசை: முத்துவிடம் வசமாக சிக்கும் அருண்- ரோகிணி! அடுத்தடுத்து பெரிய சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், மனோஜ் மற்றும் ரோகினி சந்திக்கும் புதிய பிரச்சனை, மற்றும் முத்து தனது சகோதரர்களுக்குள் உள்ள பிரச்சனையைத் தீர்க்க எடுக்கும் முயற்சிகள் என இன்றைய எபிசோட் பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பானது.

Siragadikka aasai serial vijay tv

மனோஜை மிரட்டிய ராஜா - ராணி

எபிசோடின் தொடக்கத்தில், மனோஜ் கடைக்கு வந்த ராஜா மற்றும் ராணி, மிரட்டும் தொனியில் டிவியும், பிரிட்ஜும் கேட்டனர். மனோஜ் இதனை மறுத்து, "செய்யாத தப்புக்கு நான் எதுக்கு பொருள் கொடுக்கணும்?" என்று போலீஸுக்கு போன் செய்ய முயல்கிறார். ஆனால், ரோகினி அவரைத் தனியாக அழைத்துச் செல்கிறார்.

அப்போது ரோகினி, "இப்போதைக்கு போலீசுக்கு போன் பண்ண வேண்டாம். ஒரு பையன் உண்மை சொல்வதை விட, ஒரு பொண்ணு மிஸ்-பிகேவ் பண்ணதா சொன்னா, அந்தப் பொண்ணுக்குதான் சப்போர்ட் பண்ணுவாங்க. நம்ம கடையின் பெயரும் கெட்டுவிடும். இப்போதைக்கு ஒரு பொருளைக் கொடுத்து அனுப்பி விடுவோம்" என்று அறிவுரை சொல்கிறார். முதலில் மனோஜ் மறுத்தாலும், ரோகினியின் கட்டாயத்தால் சம்மதிக்கிறார்.

பின்னர், அவர்கள் சின்ன டிவி மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று மனோஜ் கூற, அவர்கள், "எங்களுக்கு 55 இன்ச் டிவிதான் வேண்டும், அதோடு பிரிட்ஜும் வேண்டும்" என்று கேட்கின்றனர். "எதுக்கு பிரிட்ஜ்?" என்று மனோஜ் கேட்க, ராணி, "டிவி பார்த்துக்கிட்டு ஜில்லுன்னு ஐஸ் வாட்டர் குடிச்சா நல்லா இருக்கும்ல, அதுக்குதான்!" என்று கிண்டலாகப் பதில் சொல்கிறார். வேறு வழியில்லாமல் மனோஜும், ரோகினியும் அதற்கு சம்மதிக்கிறார்கள். தான் செய்தது தவறு என்று ரோகினி வருத்தப்படுகிறார்.

முத்துவின் சமாதான முயற்சி

இதனிடையே, முத்து மருத்துவமனையில் சீதாவைச் சந்தித்துப் பேசுகிறார். "நீ உன் புருஷனை நம்பும் விஷயத்தில் நான் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கும் அருணுக்கும் பிரச்சனை இருந்தது உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் அதைப்பற்றிப் பேசுவது தவறு. நீ எதுக்கு உங்க அக்காவிடம் பேசாம இருக்க? நீங்க ரெண்டு பேரும் பிறந்ததுல இருந்து ஒண்ணா வளர்ந்திருக்கீங்க, உங்க அக்காவை பத்தி உனக்குத் தெரியாதா? உங்க அக்கா உடைந்து போய் இருக்கா. தயவுசெஞ்சு அவள்கிட்ட பேசு. நீங்க ரெண்டு பேரும் சண்டை போடக்கூடாது. நானும் அவனும் நேற்று வந்தவங்க, ஆனால் நீங்க ரெண்டு பேரும் கூட பிறந்தவங்க. மீனா உன்னோட இரண்டாவது அம்மா. இத நான் உனக்கு நிறைய வாட்டி சொல்லி இருக்கேன். நான் எந்த இடத்துல தப்பு நடந்துச்சுன்னு உனக்கு நிரூபிக்கிறேன். ஆனா அருணை ஆள் வச்சு அடிக்கல அதுதான் உண்மை" என்று சொல்லி, "அக்காவோடு பேசாமல் மட்டும் இருக்காதே" என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.

புதிய திட்டம்

மறுபக்கம், மனோஜ் வீட்டுக்கு வெளியில் நின்று ராஜா, ராணி செய்த அட்டூழியத்தை ஸ்ருதியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஸ்ருதி, "தப்பு பண்ணாம நீங்க எதுக்கு பொருளையும் பணத்தையும் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க? போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே?" என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், "அதைத்தான் நானும் சொன்னேன், ஆனா ரோகினிதான் கேட்கல" என்று சொல்கிறார். ரோகினி தனது கணவரின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அப்படிச் செய்ததாகச் சொல்கிறாஐடியா

முத்துக்கு வந்த ஐடியா

அப்போது முத்துவும் மீனாவும் அங்கு வர, அவர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்கின்றனர். முத்து, "உன்னால இப்படி யோசிக்க முடியுமா?" என்று கோபத்துடன் மனோஜிடம் கேட்கிறார். பிறகு முத்துவிற்கு ஒரு புதிய யோசனை தோன்றுகிறது. "அவர்கள் இன்னொரு வாட்டி வரும்போது ஒரு கேமராவை செட் பண்ணி வையுங்கள். அவர்களைப் போர்ஸ் செய்து அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழையுங்கள். அதை வைத்து அவர்களைக் கடைக்குள் வராமல் பண்ணிவிடலாம்" என்று முத்து யோசனை சொல்கிறார். இது நல்ல ஐடியா என்று ரோகினியும் இதை பின்பற்றலாம் என்று கூறுகிறார்.

பின்னர், முத்து, மீனாவிடம், "இந்த மனோஜ்க்கு ஐடியா கொடுத்து அருண் விஷயத்துல எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கு. நான் எந்தத் தப்பும் பண்ணலன்னு நிரூபிக்க எனக்கு ஒரு விஷயம் கிடைச்சிருக்கு" என்று சொல்ல, "என்ன விஷயம்?" என்று மீனா கேட்கிறார். "அதை நீயே பார்ப்பா" என்று சொல்லி, முத்து அருண் வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்கிறார்.

உண்மை உடைந்தது

முத்துவை பார்த்ததும் அருண் நக்கல் சிரிப்பு சிரிக்கிறார். எதுக்காக இப்ப இங்க வந்த என்று அருண் கேட்க, நீ எதற்காக என்னுடைய பிரண்டு செல்வத்தின் மச்சானை அடிச்சா? என்று கேட்கிறார். அவன் எனக்கு லஞ்சம் கொடுக்க பார்த்தான் அதான் அடிச்சேன் என்று அருண் சொல்ல, அதற்கு முத்து அது போகட்டும் நான் உன்னை ஆள் வச்சு அடிக்கலைங்குறது உனக்கு தெரியும்? உன்னை காப்பாத்த தான் நான் வந்தேன்.

எனக்கு நீ ஒரு நன்றி கூட சொல்லல. ஆனா குடும்பத்துக்குள் பிரச்சனை வர வச்சிருக்க என்று கேட்க, அதற்கு அருண் சிரித்துக் கொண்டு நீ ஆள் வைத்து அடிக்கலங்குறது எனக்கு தெரியும் உன் மேல சீதாவுக்கு நல்ல மரியாதை இருக்கு அதை கெடுக்க தான் இப்படி செஞ்சேன். இப்ப நான் சொன்னதை சீதா நம்பிட்டா என்று சொன்னதும் முத்து சிரித்துக் கொண்டு இருக்க அதை பார்த்து அருண் குழம்புகிறார். இப்போ உண்மையாவே உன்னை அடிக்க ஆள் கூட்டிட்டு தான் வந்திருக்கிறேன் என்று முத்து சொன்னதும் அருண் அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+