சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி மீனாவிடம் உளறிய அம்மா! முத்துவுக்கு வந்த சந்தேகம்! ஸ்ருதி பிடித்த பாய்ண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், உறவுகளுக்குள் நிலவும் விரிசல்களையும், தவறான புரிதல்களையும் மையமாக வைத்து பரபரப்பாக இருந்தது. கிரீஷின் பாட்டி முத்துவை ரவுடி என்று கூறியது, ரோகிணியின் சுயநலப் போக்கு, மற்றும் முத்துவின் மனக்கஷ்டங்கள் எனப் பல உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைந்திருந்தன.

Siragadikka aasai serial vijay tv

முத்து, மீனா போராட்டம்

இன்றைய எபிசோடி ஆரம்பத்தில், கிரிஷின் பாட்டி முத்து மற்றும் மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்து, "கிரிஷ்ஷை என்னுடன் அனுப்பிவிடுங்கள். உங்களுடன் விடக்கூடாது என்று என் மகள் சொல்லி இருக்கிறாள்" எனக் கோபமாகப் பேசுகிறார். "முத்துவுடன் இருந்தால் கிரிஷும் ரவுடியாகிவிடுவான்" என்று அவர் கூற, முத்துவின் முகம் வருத்தத்தால் மாறுகிறது. உடனே மீனா, "அவரு ரவுடினு உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்க பேரனை எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் தெரியுமா? யாரோட காலில் எல்லாம் விழுந்து காப்பாற்றினார்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று சண்டை போடுகிறார்.

அதற்கு கிரிஷின் பாட்டி, "நீங்கள் செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. தயவுசெய்து கிரிஷை அனுப்புங்கள்" என்று மீண்டும் கோபப்படுகிறார். உடனே மீனா, "நீ இங்க இருக்கிறாயா அல்லது பாட்டியுடன் போகிறாயா?" என்று கிரிஷை கேட்க, "நான் இங்கேயே இருக்கேன்" என்று கிரிஷ் சொல்கிறான். பின்னர் முத்து, "நீ பாட்டியுடன் இருப்பது தான் நல்லது. அப்பொழுதுதான் உன் அம்மா உன்னை அடிக்கடி வந்து பார்ப்பாங்க" என்று சொல்லி, கிரிஷ் பாட்டியிடம், "உங்க மகளுக்கு பணம் சம்பாதிப்பதை விட குழந்தை கூட இருப்பதுதான் முக்கியம் என்று சொல்லுங்கள். தாய் பாசம் இல்லாமல் ஒரு குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்" என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

ரோகிணியின் சுயநலம்

மறுபக்கம், மகேஸ்வரி வீட்டில் இருக்கும் ரோகிணி, வித்யா மற்றும் கிரிஷின் பாட்டியிடம், "நான் அவ்வளவு பேசியதால், அந்தப் பிள்ளைகள் கிரிஷை அனுப்பி வைத்துவிட்டார்கள்"நான் இவளுக்காக பாவத்துக்கு மேல பாவம் செஞ்சுட்டே இருக்கிறேன் என்று வருத்தப்படுகிறார். அதற்கு ரோகினி நீ எனக்கு செஞ்ச பாவத்தை விட இது எல்லாம் பெரிய பாவம் கிடையாது என்று திமிராக பேசுகிறார்.

வித்யா, "முத்துவும் மீனாவும் நல்லவர்கள். அவர்களிடம் விஷயத்தைச் சொன்னால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்" என்று சொல்ல, ரோகிணி கோபப்படுகிறார்.

"முத்துவும், மீனாவும் ஒன்றும் நல்லவர்கள் கிடையாது. அவர்கள் நல்லவர்களாக இருந்திருந்தால், அந்த மலேசிய பணக்காரர் இல்லை என்று தெரிந்த உடனே, என்னிடம் தனியாகக் கூப்பிட்டு பேசி இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்த கறிக்கடைக்காரரை நேராக வீட்டுக்குக் கூட்டி வந்து என்னை அசிங்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால், என்னை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டுத் துரத்தி விடுவார்கள்" என்று ரோகிணி தவறாகப் பேசுகிறார். அப்போது ரோகிணியின் அம்மா உன்ன பத்தி விஷயத்தை உன் மாப்பிள்ளை கிட்டயாவது சொல்லிடு என்று சொல்ல அதற்கு நேரம் பார்த்து சீக்கிரமா சொல்லிடுவேன் என்று ரோகினி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முத்துக்கு சப்போர்ட்

பின்னர் வீட்டில் ரவி, முத்துவிடம், "கிரிஷின் பாட்டி வந்து அவனை அழைத்துச் சென்றுவிட்டார்" என்று கேட்கிறார். அதற்கு மீனா, "கிரிஷின் அம்மா சரியான லூஸாக இருப்பாள் என்று தோன்றுகிறது. பார்த்ததே இல்லை. ஆனால் அவர் ரவுடி என்று சொல்லியிருக்கிறார்" என்று கோபத்துடன் சொல்கிறார். அதற்கு மனோஜ், "அவர் ஒரு ரவுடி இல்லாமல் வேறு என்ன?" என்று கேட்க, ரவி, "முத்து ரவுடி கிடையாது. அவன் தப்பு செய்கிற இடத்தில் தட்டிக் கேட்பான், அவ்வளவுதான்" என்று கூறுகிறார். அதற்கு மனோஜ், "அதுக்கு பேருதான் ரவுடி" என்று மீண்டும் வாக்குவாதம் செய்கிறார்.

முத்துவின் பேச்சைக் கேட்டுதான் ராணியிடம் சிக்கிய விஷயத்தையும் ரவியிடம் சொல்கிறார். ரவி, முத்துவிடம், "மனோஜ் ஏதோ பெரிய பிரச்சனையில் மாட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. நீதான்டா அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்று சொல்ல, "அது அவனுக்குப் புரியலையே" என்று முத்து வருத்தத்துடன் சொல்கிறார்.

பின்னர் முத்து கார் ஷெட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க, செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் வருகின்றனர். அப்போது முத்து கிரிஷ் தன்னுடைய வீட்டில் இருக்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது, ஆனா இப்போ அந்த பையன் அவங்க பாட்டி கூட போயிட்டான் என்று வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருக்கும்போது செல்வம் அடுத்த வீட்டு பசங்க எப்போதும் அவங்க வீட்டுக்கு பொய்தானே ஆகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நண்பர், தான் அப்பாவாகப் போவதாக மகிழ்ச்சியுடன் சொல்ல, அதைக் கேட்டு முத்து சோகமாக உணருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+