சிறகடிக்க ஆசையில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவம்! சீதா போட்ட வெடி! கொதித்த மீனா! முத்து தான் சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், டிராஃபிக் போலீஸ் அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், இப்போது அண்ணன்-தம்பி சண்டையைத் தாண்டி, மீனாவுக்கும் சீதாவுக்கும் இடையே ஒரு பெரிய மோதலாக வெடித்திருக்கிறது!

Siragadikka aasai serial vijay tv

முத்து மீது பழி போட்ட அருண்

டிராஃபிக் போலீஸ் அருண், அண்ணா நகரில் பணியில் இருந்தபோது, பைக்கில் வேகமாக வந்த இளைஞன் ஒரு பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றான். அப்போது, அடிபட்ட பெண்ணை கண்டுகொள்ளாமல், விதிமீறலைச் செய்தவனைப் பிடிக்க அருண் துரத்திச் சென்றார்.

அதே நேரத்தில், அங்கு அடிபட்டுக் கிடந்த பெண்ணை முத்து காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால், முத்து ஹீரோவாகி பலரின் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால், தன் கடமையைச் செய்த அருணோ, அடிபட்டவளைக் கவனிக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வேலை பறிபோனதைவிட, முத்துவிற்குக் கிடைத்த பாராட்டை அருணால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "முத்துவால் தான் இப்படி ஆனது" என்று அருண் சீதாவிடம் ஆவேசமாகக் கொட்டுகிறார்.

சீதா vs மீனா

அருண் சஸ்பெண்ட் ஆன ஆத்திரத்தில், சீதா நேராகத் தன்னுடைய அம்மா வீட்டிற்குப் போகிறார். அங்கு இருந்த மீனாவிடம் சண்டைக்குப் போகிறார்: "அருண் சஸ்பெண்ட் ஆனது மாமாவால் தான்! என் புருஷனைப் பற்றி சோசியல் மீடியாவில் தப்பா பரப்பி விட்ருக்காங்க" என்று சீதா சத்தம் போடுகிறார். மாமா வேண்டுமென்றேதான் அப்படிச் செய்திருக்கிறார், அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீதா சீறுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனாவின் பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்த மீனா, "முத்துவுக்கு அந்த நேரத்துல அந்த பெண்ணோட உயிர் தான் பெருசா தெரிஞ்சிருக்கு. இதுல உன் புருஷனை எப்படி கேவலப்படுத்தலாம்னு அவர் சத்தியமா நினைக்கவே இல்லை. அந்த மாதிரி ஆளும் அவர் கிடையாது. அதனால் மன்னிப்புக் கேட்க முடியாது" என்று கறாராகச் சொல்லிவிடுகிறார்.

மீனாவின் இந்த மறுப்பு, அண்ணன் - தம்பி குடும்பங்களுக்கு இடையிலான மோதலை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. அருணின் வேலையும், முத்துவின் மனிதாபிமானமும் சேர்ந்து, இப்போது குடும்பத்துக்குள் மேலும் ஒரு விரிசலை ஏற்படுத்தியுள்ளது! இனி இந்த மோதல் என்ன ஆகும் என்பதைக் காத்திருந்து பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+