சிறகடிக்க ஆசை: சத்யா கேட்ட கேள்வி, முத்துவுக்கு வந்த சந்தேகம்! ரோகிணிக்கு வைத்த செக், இன்றைய அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 25ஆம் தேதிக்கான இன்றைய காட்சிகள் ரொம்ப பரபரப்பாக போயிருக்கு. மீனா வீட்டை விட்டுப் போனதால, குடும்பத்தில் என்னென்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

சத்யாவுக்கு யோசனை
முத்து கூட சண்டைபோட்டு வீட்டை விட்டுப் போன மீனா தன் அம்மா வீட்டுக்கு போகிறார். அங்க, அவரது அம்மாவும், தம்பி சத்யாவும் என்னப் பிரச்சனைன்னு கேட்குறாங்க. "மாமா கூடச் சண்டைபோட்டு வந்துட்டியா" என்று கேட்டதும் மீனா கண்ணீர் விட்டு அழத் தொடங்குகிறாள். அதனால அம்மா அவளை சமாதானப்படுத்தி, "நீ எதுவும் சொல்ல வேண்டாம்" என்று சொல்றாங்க. ஆனா, மீனா எந்த உண்மையையும் சொல்லலையா, இல்லையான்னு தெரியல.
ரேகாவின் உதவி
பின்னர் சத்யா அலுவலகத்திற்கு போகும்போது வருத்தமா இருக்கதை பார்க்கும் அவரது பாஸ் ரேகா, அவன்கிட்ட என்ன பிரச்சனைன்னு கேட்குறாங்க. குடும்பத்தில் பிரச்சனைன்னு சத்யா சொல்ல, அந்த பிரச்சனையை எப்படிச் சரி செய்வதுன்னு சத்யாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார் ரேகா. பிறகு சத்யா, முத்துவை சந்திக்க போறான்.
முத்துவுக்கு வந்த சந்தேகம்
சத்யா முத்துவை பார்த்து பேசும்போது, முத்து நடந்ததெல்லாம் சொல்றார். முத்து, "நான் குடிச்சுட்டு வந்ததால் தான் அவ கோபிச்சுட்டு போனாள் என்பதை என்னால ஏத்துக்கவே முடியல" என்று சத்யாவிடம் புலம்புறார். "கண்டிப்பாக அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது, அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும்" என்று முத்து தீர்மானமாச் சொல்றார்.
மறுபுறம், வீட்டில் மீனா இல்லாததால, ரோகிணி எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுச் செய்கிறார். வீடு துடைத்துவிட்டு, அண்ணாமலைக்கு காப்பி போட்டுக் கொடுக்கிறாள். அந்த காப்பி மோசமாக இருந்ததால அண்ணாமலை சமிக்ஞை கொடுக்க, மற்றவர்கள் உஷாராகி "எங்களுக்குக் காப்பி வேண்டாம்" என்று சொல்றாங்க.
முத்துவின் எச்சரிக்கை:
அடுத்ததா காலை டிபன் செய்கிறேன் என ரோகிணி சொல்ல, ஸ்ருதி, ரவி ஆகியோர் "தாங்கள் வெளியே சாப்பிட்டுக் கொள்வதாக" சொல்லிட்டுப் போறாங்க. ரோகிணி இப்படி அதிகமாக வீட்டு வேலை செய்வதை பார்த்த முத்து, அவளை பார்த்து சந்தேகமா கேட்குறார்: இனி மீனா இந்த வீட்டுக்கு வரவே கூடாதுங்குறதுக்காக நீ இதெல்லாம் பண்ணுறியா" என்று கேட்கிறார்.
இதையடுத்து என்ன ஆனது? முத்து-மீனா சண்டை முடிவுக்கு வருமா? மீனா உண்மையைச் சொல்லுவாளா? ரோகிணி சிக்குவாளா, மாட்டாளா என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications