Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மீண்டும் அண்ணாமலை வீட்டுக்கு வந்த மீனா! ரோகிணிக்கு வந்த புது பிரச்சனை! விஜயா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு போன மீனா மீண்டும் முத்து வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு புது பிரச்சனையும் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாமா?

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்ததும் முத்துவிடம் மறைக்க முடியாமல் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய் இருக்கிறார். அதுவும் சும்மா போகல முத்து குடிப்பதால அவர்கிட்ட சண்டை போட்டுட்டு போயிருக்கிறார். அதனால முத்து மீனாவை சமாதானம் செய்வதற்கு ஐயப்ப சாமி கோவிலுக்கு மாலை போட்டு இருந்தார். அதனால் முத்து கோவிலுக்கு போவதற்கான பூஜைக்கு மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் கூப்பிட்டு இருந்த நிலையில் நேற்று அவர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

Siragadikka aasai serial vijay tv

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து தன்னுடைய மாமியாரையே விளக்கு ஏற்ற சொல்லுகிறார். அதற்கு மீனாவின் அம்மா வேண்டாம் என்று மறுத்தாலும் முத்து சொன்னதால் விளக்கு ஏற்றி வைக்கிறார். பிறகு அங்க பூஜை செய்து கொண்டிருக்கும் போது முத்து மீது எதிர்பாராத விதமாக குங்குமம் கொட்டி விடுகிறது. உடனே பதறிப்போன மீனா அதை ஓடி வந்து துடைக்கிறார்.

அப்போது முத்து கோயிலுக்கு போகும்போது நீ வந்து அனுப்பி வைக்கணும்னு நினைச்சேன் அதேபோல இப்போ நீ மனசு மாறிட்ட. எனக்கு ஒன்னுனா உன்னால தாங்க முடியாது என்று எனக்கு தெரியும். இனி நான் குடிக்கவே மாட்டேன்னு சொல்ல உடனே மீனாவும் சிரிக்கிறார். மறுபக்கத்தில் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டில் ரெண்டு யூடியூபர்ஸ் சாப்பிட்டு பார்த்துவிட்டு சாப்பாடு நன்றாகவே இல்லை என்று ரிவ்யூ செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எல்லாரும் அதிர்ச்சியாகுகிறார்கள்.

சாப்பாடு நல்லா தானே இருந்து இவங்க ஏன் இப்படி பேசிட்டு இருக்காங்கன்னு யோசிச்சிட்டு இருக்கிறாங்க. அப்போது ரிவ்யூவர்ஸை ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கும் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டே இருக்கிறார். கடைசியில் ஸ்ருதி நீங்க நீத்து சொல்லி தானே இங்க வந்துங்கன்னு எனக்கு தெரியும். நீங்க படத்தை வாங்கிட்டு நெகட்டிவா ரிவ்யூ சொல்லுறீங்க. நீங்க முதலில் நீங்க சாப்பிட்டது, இப்போ ரிவ்யூ சொன்னது எல்லாத்தையும் நாங்களும் வீடியோ எடுத்து வைத்திருக்கிறோம், உங்கள் வீடியோ வெளியே வந்துச்சுன்னா நாங்க இந்த வீடியோவை வெளியிடுறோம் என்று மிரட்ட அவர்கள் பதறிப்போய் இனி நாங்கள் உங்க பக்கமே வரமாட்டோம்னு சொல்லிட்டு கிளம்புறாங்க.

உடனே ஸ்ருதி நீத்துக்கு போன் செய்து நீ அனுப்புன ஆட்களுடைய வீடியோ வரலைன்னு எதிர்பாத்துட்டு இருக்கியா? உன்னால என்னுடைய பிசினஸை எதுவும் செய்ய முடியாது. உன்ன பத்தி தெரியாம ரவி நம்பிட்டு இருக்கான் ஆனா சீக்கிரமா உன்னை புரிஞ்சுக்குவான் என்று சவால் விடுகிறார். அந்த நேரத்தில் ரவி வந்து நீத்துவிடம் என்னாச்சு என்று கேட்டு அதற்கு நீத்து உண்மையை சொல்லாமல் ஏமாற்றுகிறார்.

அடுத்ததாக மீனா அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். வந்ததும் முதலில் விஜயா எதுக்கு வந்தா என்று சத்தம் போடுகிறார். பிறகு மீனா போயிட்டா நல்ல சாப்பாடு சாப்பிட முடியாது என்று அவரை வீட்டுக்குள்ள வர சொல்லுறார். மீனா வீட்டுக்குள்ள வந்ததும் ரோகிணி அடுத்து என்ன நடக்குமோனு யோசிச்சுட்டே இருக்குறாங்க.

கடைசியாக மனோஜ் ஷோரூமில் இருக்கும்போது அவருடைய பி ஏ லேட் ஆக வர ரோகிணியும் மனோஜியும் ஏன் இவ்வளவு லேட்டுன்னு கேக்குறாங்க. அதற்கு அந்த பொண்ணு உறவினரின் கல்யாண வீட்டுக்கு போயிட்டு அவங்க கிட்ட கல்யாணத்துக்கான சீர்வரிசை செய்ய நம்ம கடையிலேயே வாங்க ஆர்டர் எடுத்துட்டு வந்து இருக்கிறேன், அதேபோல இன்னொரு பிளானும் வைத்திருக்கிறேன் என்று சொல்றாங்க.

என்ன பிளான் என்று விசாரிக்கும் போது, நாம கல்யாணத்திற்கு பேக்கேஜ் ஆஃபர் போடலாம் கல்யாணத்திற்கு தேவையான மொத்த பொருட்களையும் நாம கொடுக்கலாம்னு சொல்ல, இது நல்ல ஐடியாவாக இருக்குனு ரோகிணியும் பாராட்டுகிறார். ஆனால் இதில் ஏதோ பிரச்சனை இருப்பது போலவே தெரிகிறது. ஆனால் இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+