Siragadikka Aasai : மீண்டும் கலகமூட்டும் சிந்தாமணி! விஜயாவை அடிக்க பாய்ந்த முத்து! நறுக்குன்னு கேட்ட ஸ்ருதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோட், வீட்டில் விஜயா செய்யும் அத்துமீறல்களால் பரபரப்பாக நடைபெற்றது. மீனாவின் மீது விஜயா கோபம்கொண்டு நடந்து கொண்டதால், முத்து மற்றும் அண்ணாமலை இருவரும் விஜயாவைக் கண்டிக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகின.

Siragadikka aasai serial vijay tv

யோகாவுக்கு வந்த சிந்தாமணி

இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், சிந்தாமணி யோகா கற்று கொடுப்பதற்காக பார்வதியின் வீட்டிற்கு வருகிறார். டான்ஸ் கிளாஸில் ஒரே நாளில் மாணவர்கள் வந்து சேர்ந்தது போல இப்போது யோகா கிளாஸ்சிலும் பலர் வந்து சேர்ந்திருக்கிறார்கள் அதில் இருக்கும் ஒரு நபர் பார்வதியை கிண்டல் செய்து சைட் அடித்துக் கொண்டே இருக்கிறார். அந்த ஆளின் நடவடிக்கையை பார்த்து பார்வதி கோபப்படுகிறார்.

சிந்தாமணி பிளான்

அந்த நேரத்தில் சிந்தாமணி கையில் பழத்தட்டுடன் பார்வதி வீட்டிற்கு வந்து நிற்கிறார். அவருக்கு யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா என்று பார்வதி கேட்கிறார். அதற்கு சிந்தாமணி எனக்கு யோகா செய்ய வேண்டும் என்ற அரசால் தான் நான் இங்கே வந்தேன் என்று சொல்லிவிட்டு மனதிற்குள் மீனாவுக்கு எதிராக ஒரு திட்டத்தை வகுக்கிறார். அதாவது, யோகா கற்றுக்கொள்வதுபோல் நடித்து, விஜயாவை பயன்படுத்தி மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.

விஜயாவின் கோபம்

அடுத்ததாக முத்து வீட்டிற்கு வருகிறார். மீனா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து என்ன ஆச்சு மீனாவுக்கு என்று யோசித்துக்கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில். விஜயா வீட்டிற்கு வருகிறார். அப்போது மீனா எதுவும் சமைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட விஜயா கோபமடைந்தார். உடனடியாக, தூங்கிக்கொண்டிருக்கும் மீனாவின் மீது தண்ணீர் ஊற்றி, அவரை எழுப்புகிறார். இதைக் கண்ட முத்து, விஜயா மீது கோபம் கொள்கிறார்.

அடிக்க பாய்ந்த முத்து

நான் விஜயா கையில் வைத்திருந்த ஜக்கை பிடுங்கி முத்து கோபமாக கீழே தூக்கிப் போடுகிறார். இதனால் விஜயா பதறிப்போய்விடுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வந்ததும் அண்ணாமலையிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். அதோடு அம்மா என்பதால் தான் இவங்களை சும்மா விட்டு வேற யாராவது இருந்தா கொன்னு போட்டு இருப்பேன் என்று முத்து மிரட்டுகிறார்.

ஸ்ருதியின் மிரட்டல்

மீனாவின் மீது தண்ணீர் ஊற்றிய விஜயாவை, அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ஸ்ருதி மீனா இடத்தில் நான் இருந்திருந்தால் கொதிக்கிற தண்ணியை கொண்டு வந்து உங்க முகத்தில் ஊற்றி இருப்பேன் நீங்க இப்ப பண்ணுனது கொடுமை என்று திட்டுகிறார். அப்போது முத்து விஜயாவிடம், மீனா வேலை செய்யவா இங்கு இருக்கிறார்? என்று கேட்கிறார். அதுமட்டுமின்றி, முத்து, விஜயாவையே சமைக்கும்படியும் கூறுகிறார். இதனால் கோபமடைந்த விஜயா, அறையை விட்டு வெளியேறுகிறார். ஆனால், அண்ணாமலை அவரைப் பின்தொடர்ந்து சென்று, "நீ செய்தது சரியா?" என்று கேட்கிறார். அதற்கு விஜயா, "நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் மீனா முன்பு என்னை ஏன் பேசினீர்கள்?" என்று கேட்கிறார். பின்னர், அண்ணாமலை விஜயாவுக்குப் பொறுமையின் முக்கியத்துவத்தை அறிவுரை கூறுகிறார். இப்படியாக, விஜயாவின் அராஜகத்தை முத்துவும், அண்ணாமலையும் கண்டித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+