Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: முக்கியமான விஷயத்தை சொல்லி மிரட்டும் சுதா! ரோகிணி எடுத்த புது முடிவு! கோபத்தில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், கடந்த எபிசோடில் ரோகிணி ஷோரூமிலிருந்து கொண்டு வந்த பையில் வந்த பாம்பால் வீட்டில் பெரும் கலவரம் ஏற்பட்டது. முத்துவின் சாமர்த்தியத்தால் பாம்பு வெளியேற்றப்பட்டாலும், அந்தச் சம்பவம் விஜயாவை ஆழமாகப் பாதித்துள்ளது. இன்று நடந்த எபிசோட், விஜயாவின் கவலையும், ரோகிணிக்கு வந்த அடுத்தத் தலைவலியும் தான்!

Siragadikka aasai serial vijay tv

விஜயாவின் பதற்றம்

விஜயாவின் ரூமுக்குள் பாம்பு வந்தச் சம்பவத்தால், விஜயா மற்றும் மனோஜ் இருவரும் பேயடித்தது போல் ஆகிப் போனார்கள். ரோகிணி செய்த அசட்டுத்தனத்தால் தான் இந்தச் சிக்கல் வந்தது. மறுநாள் தனது யோகா கிளாசுக்குச் சென்ற விஜயா, அங்கே சிந்தாமணியை சந்திக்கிறார். அவரிடம் தனது ரூமுக்குள் பாம்பு வந்த விஷயத்தைச் சொல்ல, சிந்தாமணி அதைக் கேட்டதும் விஜயாவை இன்னும் அதிகப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறார்.

"பாம்பு வந்தால் வீட்டிற்கு நல்லதல்ல" என்று கூறி, "இதுபோல் தனது உறவினரின் வீட்டுக்கு பாம்பு வந்த பின்னர், அவர்களின் வீடே எறிந்து நாசமானது" என்று சொல்லி விஜயாவுக்கு அச்சமூட்டுகிறார் சிந்தாமணி. பதற்றமடைந்த விஜயா, இதற்குக் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று வீட்டில் வந்து அனைவரிடமும் விவரிக்கிறார். அப்போதுதான் முத்து, "அந்தச் சிந்தாமணியே ஒரு பாம்பு, அவங்க சொன்னதெல்லாம் நம்புறீங்களா?" என்று பதிலடி கொடுக்கிறார்.

தீபாவளி ட்விஸ்ட்

விஜயா கவலையுடன் இருக்க, அருகில் இருந்த அண்ணாமலை, "நானும் என்னோட அம்மாகிட்ட இந்தப் விஷயத்தைப் பத்திப் பேசினேன். அவங்களும் குலதெய்வம் கோவிலுக்கு வந்துட்டு போகச் சொன்னாங்க. அதனால் நாம எல்லாரும் ஒன்றாக குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருவோம்" என்று சொல்கிறார்.

மனோஜின் மறுப்பு

அதுமட்டுமின்றி, தீபாவளியையும் அங்கு கொண்டாடிவிட்டு வருவோம் என்று அவர் கூறுகிறார். அனைவரும் சம்மதம் தெரிவிக்க, மனோஜ் மட்டும் முடியாது என மறுக்கிறார். ஷோரூமில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்பதால், தன்னால் வர முடியாது என மனோஜ் சொல்கிறார். பாம்பு விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, ரோகிணிக்கு அடுத்த சிக்கல் ஆரம்பமாகிறது.

சுதாவின் மிரட்டல்

ரோகிணிக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்தப் பக்கம் பேசிய ஸ்ருதியின் அம்மா சுதா, தன்னிடம் வாங்கிய 2 லட்சத்தை உடனே திருப்பித் தருமாறு கேட்கிறார். பணம் அப்படியே கொடுக்காமல் விட்றலாம்னு நினைக்கிறியா? என்று ஆவேசமாகக் கேட்ட சுதா, ரோகிணியை நோக்கி, "நீ என்கிட்ட வாங்குன பணத்தை கொடுக்கலேனா உன்னோட மாமியாருக்கு (விஜயாவுக்கு) போன் பண்ணி, நீ கடன் வாங்குன விஷயத்தை சொல்லிடுவேன்" என்று அப்பட்டமாக பிளாக்மெயில் செய்கிறார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகிணி, இந்தப் பணத்தை அடைப்பதற்காக, அடுத்த திருட்டுத் திட்டத்திற்குத் தயாராவது போலத் தெரிகிறது. சுதா பிளாக்மெயில் செய்வது விஜயாவுக்குத் தெரிந்தால், ரோகிணியின் நிலை என்னவாகும் என்றக் கேள்வியுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் புதிய ரெஸ்டாரண்டுக்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். அதில் ஒருவரிடம் தான் விஜயா அவார்ட் வாங்குவதற்காக நடித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது மீனா அங்கு வந்து தான் புதியதாக தொடங்கி இருக்கும் பொக்கேவை வைக்க அதை பார்த்தது அது பற்றி அந்தப் பெண் விசாரிக்க, உடனே ஸ்ருதி மீனாவின் புது பிசினஸ் பற்றி சொல்கிறார். அதற்கு அந்த பெண் தான் புதியதாக கட்டி இருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு நீதான் என்னை பூ கொடுக்கணும் என்று சொல்கிறார்.

பிறகு அதற்கு ஹோம் அப்ளையன்ஸ் வாங்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, மீனா ரோகிணியின் ஷோரூமில் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சரி என்று சொல்லிவிடுகிறார். பிறகு ஸ்ருதி மீனாவிடம் உங்களைப் போல யாராலும் இருக்க முடியாது என்று பாராட்டுகிறார். இனி வரும் எபிசோடுகளில் நிச்சயம் செம ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+