சிறகடிக்க ஆசை: விஜயா சொன்ன வார்த்தை! கதறி அழுத மீனா! உண்மையை கண்டுபிடித்த முத்து, அதிர்ச்சியில் ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடில் ஒரு பக்கம் குடும்பத்துக்குள்ள புது பிசினஸ் பேச்சு, இன்னொரு பக்கம் மீனாவுக்கு வந்த புது சிக்கல்னு எபிசோடு பரபரன்னு ஓடிச்சு. வாங்க, இன்னைக்கு என்னென்ன நடந்ததுனு டீடைலா பார்க்கலாம்!

மனோஜின் புதிய முயற்சி

வழக்கம் போல வீட்டுல ஒரு நல்ல விஷயம் பேச வந்தாலே, விஜயா அதைக் கெடுக்காம விட மாட்டாங்க. மனோஜ், மகேஸ்வரியோட கணவரோட சேர்ந்து புதுசா ஒரு ஷோரூம் ஆரம்பிக்கப் போறதா சொன்னார். "அவர் ஷோரூம் வாங்குறாரு, நான் சும்மா டீலருக்காக சப்போர்ட் பண்ணப் போறேன்"னு மனோஜ் சொல்ல, ரோகிணி உடனே "நான் தான் இதையெல்லாம் பிளான் பண்ணிப் பேசி இருக்கேன்!"னு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

Siragadikka aasai serial vijay tv

இதைக் கேட்ட விஜயா, ரோகிணியை அவமானப்படுத்துற மாதிரி, "நீ ஒன்னும் இல்லாம தானே வந்த... இதெல்லாம் பண்ண வேண்டியது தான்"னு நக்கலாப் பேச, அண்ணாமலைக்கு செம கோபம் வந்துடுச்சு. "ஒருத்தர் நல்ல விஷயம் சொல்லும்போது அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரிதான் பேசுவியா?"னு விஜயாவை அண்ணாமலை பயங்கரமாத் திட்டினார்.

மீனாவுக்கு அடுத்த சோதனை

அண்ணாமலை பேசிட்டிருக்கும்போதே, மீனா வீட்டுக்கு வராங்க. "என்ன ஆச்சுமா? எல்லாம் ஓகேவா?"னு அண்ணாமலை கேட்க, மீனா, "கடையை வெளிய எடுக்கறதுக்கான எல்லா முயற்சியும் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம் மாமா. சீக்கிரமா வெளிய எடுத்துடலாம்"னு சொல்றாங்க. ஆனா, மீனா முகத்துல ஏதோ ஒரு கவலை தெரிஞ்சதால, முத்து மீனாவிடம், "என்ன ஆச்சு? வேற ஏதாவது ப்ராப்ளமா?"னு கேட்குறார்.

உடனே மீனா, கண்ணீருடன் "ஆமாங்க... என்னோட வண்டியைக் காணோம்!"னு சொல்றாங்க. "எங்க விட்ட?"னு கேட்டதுக்கு, "கோயில் வாசலில் தான் விட்டேன், ஆனா காணும்"னு சொன்னாங்க. இதைக் கேட்ட விஜயாவுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருச்சு. "இவளுக்கு எப்ப பாத்தாலும் எதையாவது ஒன்னு தொலைக்கறது தான் வேலை! முதல்ல பணத்தைத் தொலைச்சிட்டு வந்து நின்னா. இப்போ வண்டியைத் தொலைச்சிட்டு வந்து நிக்கிறா!"னு மீனாவுக்கு ராசி இல்லாதவள்னு பேர் வச்சு திட்ட ஆரம்பிச்சாங்க.

விஜயா நக்கலாப் பேச, முத்து உடனே, "தேவ இல்லாம அவளை பேசாதீங்க"னு சொல்லி சப்போர்ட் பண்ண, அண்ணாமலை, "உனக்கு எந்த நேரத்துல எது பேசணும்னு தெரியாதா?"னு விஜய் அவை கேட்கிறார்.

ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு வர, "மீனா உங்க வண்டி கீழ இல்லையே?"னு ரவி கேட்க, ரோகிணி வண்டி தொலைஞ்சிடுச்சுனு சொல்லிடுறாங்க. ரவி "தொழில் எதிரி யாராவது ஏதாவது பண்ணி இருப்பாங்க"னு ஆறுதல் சொல்ல, மனோஜ், "இவங்க செய்யறதுக்கு பேரு தொழிலா எதிரி? திருட்டுப் பசங்க தான் எடுத்துட்டு போயிருப்பாங்க!"னு நக்கலடிக்க, முத்து டென்ஷன் ஆகி, "நீ கரெக்டா தான்டா சொல்லுவ. நீயே காசு திருடிட்டு போனவன் தானே? அமைதியா இருந்துடு!"னு மனோஜை ஒரே வார்த்தையில் அடக்கினார். உடனே ரோகிணி மனோஜை இழுத்துட்டுப் போயிடுறாங்க. ஸ்ருதி, "கவலைப்படாதீங்க மீனா வண்டி கெடச்சிடும். இல்லன்னா புது வண்டி கூட வாங்கிக்கலாம்"னு ஆறுதல் சொல்றாங்க.

முத்துவின் மாஸ் பிளான்

மீனா கிச்சனுக்கு வந்து வண்டியை நினைச்சு வருத்தப்பட, முத்து ஆறுதல் சொல்றார். இதற்கிடையில், கடையை மீட்க ஒரு மாஸ் பிளான் போடுறார் முத்து. மறுநாள் காலையில, முத்து, கார்பரேஷன் ஆபீஸரை அழைச்சிட்டு வந்து வழக்கம் போல அந்த டீக்கடையில் செல்வத்திடம் பேச வைத்து பணத்தைக் கொடுக்க சொல்றார். இதைக் கார்பரேஷன் ஆபீஸர் கவனிச்சிடுறார்.

ஆஃபீஸர், செல்வத்திடம் வந்து, "எதுக்காக இப்போ அவர்கிட்ட இருந்து ஒரு கவர் வாங்கினீங்க?"னு கேட்க, செல்வம் நாடகம் போட்டு டாக்குமென்ட் பேப்பர்னு சொல்ல, ஆஃபீஸர் அதைப் பிரிச்சுப் பார்க்க, உண்மை தெரிஞ்சுடுச்சு! இதற்கெல்லாம் காரணம் சிந்தாமணி தான் என்று கோயில் மேனேஜர் உண்மையைச் சொல்ல, ஆஃபீஸர் டென்ஷன் ஆகி, "யார் காசு கொடுத்தாலும் இப்படிப் பண்ணிடுவீங்களா? அப்புறம் எப்படி மக்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வரும்?"னு திட்டிவிட்டு, "உங்க மேல விசாரணை கமிஷன் கொடுக்கப் போறேன். நீங்க அங்க வந்து பதில் சொல்லிக்கோங்க"னு சொல்லி அனுப்பிடுறார்.

அப்புறம் முத்து கிட்ட வந்து, "நீ ரொம்ப நல்ல வேலை பண்ணியிருக்கப்பா! நீ வீட்டுக்கு வந்து இவர் மேல ஒரு கம்ப்ளைன்ட், கடையைத் திருப்பிக் கொடுக்கணும்ங்கிற மாதிரி ஒரு ரெப்ரிஸ் எழுதி கொடு. நான் உன் கடையைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்"னு சொன்னார். முத்துவும் செல்வமும் சந்தோஷப்படுறாங்க!

முத்துவின் விட்டு கொடுத்த குணம்

முத்து, கார்பரேஷன் ஆஃபீஸ் வீட்டுக்கு வர, அங்க ஒரு ட்விஸ்ட் காத்திருந்துச்சு. சீதாவின் கணவர் அருண் அங்க வராரு! அருண், வெளியில் இருந்த ஆஃபீஸரிடம் சிபாரிசு பண்ணி, "சீதாவின் அம்மா கடையை மீட்டெடுக்க இன்ஸ்பெக்டருடன் கதைத்து லெட்டர் கொடுக்கின்றார்." ஆனா, அந்த ஆஃபீஸர், "எனக்குச் சிபாரிசு பிடிக்காது"னு சொல்லிட்டார்.

இதையெல்லாம் உள்ளே இருந்து பார்த்த முத்து, "அவர் என்னுடைய மச்சான் தான்... ஆனா, சின்ன மனஸ்தாபம்... இந்த பூக்கடை அவர் முயற்சியால் வந்ததாகவே இருக்கட்டும்"னு சொல்லி, அருணின் கஷ்டத்தை மதித்து, அந்தக் கிரெடிட்டை அவருக்கு விட்டுக் கொடுக்கிறார். இதுதான் முத்து! மனுஷன் எவ்வளவு நல்லவர்னு இங்கதான் தெரியுது. கடைசியா, மீனா அம்மாவுடன் கோயிலுக்குச் சென்று வருத்தத்தோட சாமி கும்பிட போறாங்க.

இனி வண்டியை யார் எடுத்தது, மீனா கடை திரும்பக் கிடைக்குமா என்பதை அடுத்தடுத்த எபிசோடுல பார்க்கலாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+