சிறகடிக்க ஆசை: கிருஷ் அம்மா பற்றி மகேஸ்வரி சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் விஜயா! ரோகிணி போட்ட பிளான்
சென்னை: (Siragadikka Aasai serial Episode) விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலான 'சிறகடிக்க ஆசை' எபிசோடுகள் நாளுக்கு நாள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. நேற்றைய எபிசோடில் கிரிஷ் என்ற பையன் காரில் ஒளிந்து கொண்டதும், அவனை முத்துவும் மீனாவும் வீட்டில் தங்க வைக்கப் பிளான் போடுவதும் காட்டப்பட்டது. இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம் வாங்க!

கிரிஷ்ஷைக் காப்பாற்றும் முத்து - மீனா
முத்துவும் மீனாவும் கிரிஷ்ஷை வீட்டில் உட்கார வைத்துப் பேசுகின்றனர். அப்போது கிருஷ் படிக்கும் ஸ்கூலை பற்றி சொன்னதும் மீனா, "நான் ஏற்கனவே ஒருமுறை உங்க ஸ்கூலுக்கு வந்திருக்கேன் கிரிஷ், ஆனா நீ இந்த ஸ்கூல்லதான் படிக்கிறேன்னு எனக்குத் தெரியாது" எனச் சொல்ல, கிரிஷ் "நான் உங்களைப் பார்த்தேன்" என்று சொல்கிறான்.
"கூப்பிட வேண்டியதுதானே?" என்று மீனா கேட்க, "நான் கூப்பிட்டேன், உங்களுக்குக் கேட்கவே இல்லை" என்று கிரிஷ் சொல்கிறான். "கவனிச்சிருக்க மாட்டேன்" என மீனா சொல்கிறார். உடனே முத்து, "என்னோட நம்பர் உன்கிட்ட இருக்கு, எனக்குப் போன் பண்ணி இருக்கலாமே?" என்று கேட்கிறார். அதற்கு கிரிஷ், "ஸ்கூல்ல பேரண்ட்ஸையும், கார்டியன் கிட்டயும் மட்டும்தான் பேசணும்னு சொல்லிட்டாங்க" என்று பதில் சொல்கிறான்.
கிரிஷ் பயந்திருப்பதைக் கண்ட முத்து, "இந்த நேரத்துல இவனை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனா, எங்க அம்மா சும்மா இருக்க மாட்டாங்க. அதனால இவன் இங்கே இருக்கட்டும், கொஞ்சம் பார்த்துக்கோங்க" என்று சொல்ல, சந்திராவும் "எங்க வீட்டு குழந்தையாப் பார்த்துக்கிறோம்" எனச் சொல்கிறார்.
ரோகிணி-மகேஸ்வரி கூட்டணி
கிரிஷ் ஸ்கூலில் இருந்து காணாமல் போனதாகத் தேடினால், ஸ்கூல் நிர்வாகம் போலீசில் புகார் கொடுக்காதா என சீதா கேட்கிறார். அதற்கு மீனா, "ஆமாங்க, எனக்கு அந்த மேனேஜர் தெரியும், நம்ம நேர்ல போய் என்ன நடந்தது, ஏன் கிரிஷ் இப்படிப் பண்ணான்ற விஷயத்தைத் தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லி, முத்துவுடன் கிளம்பிச் செல்கிறார்.
முத்துவும் மீனாவும் காரில் கிளம்பும்போது, ரோகினியும் மகேஸ்வரியும் ஸ்கூலுக்கு வெளியிலேயே காத்திருக்கின்றனர். முத்து-மீனாவின் காரைப் பார்த்ததும் இருவரும் மறைந்து கொள்கின்றனர். பின்னர், முத்து உள்ளே சென்று மேனேஜரை சந்தித்து கிரிஷ் தங்களிடம் இருப்பதைச் சொல்கிறார். அதற்கு மேனேஜர், "நீங்க இங்க கூட்டிட்டு வந்திருக்கலாமே?" என்று கேட்க, முத்து, "அவன் ரொம்பப் பயந்து இருக்கான், நாங்க நாளைக்குக் கூட்டிட்டு வருவோம்" என்று சொல்கிறார். மேனேஜர், மகேஸ்வரிக்கு போன் போட்டு, கிரிஷ் கிடைத்த விஷயத்தைச் சொல்ல, மகேஸ்வரி சந்தோஷப்படுகிறார். பிறகு மேனேஜர் அவர்களை உடனே வரச் சொல்ல, மகேஸ்வரியும் வந்து மேனேஜரை சந்திக்கிறார்.
ரோகிணியின் அடுத்த சதி
மகேஸ்வரி உள்ளே வந்தவுடன் மீனா, "நீங்க வித்யாவோட ஃப்ரண்டு தானே?" என்று கேட்க, மகேஸ்வரி "நான் கிரிஷ்ஷோட அம்மாவுக்கும் ஃப்ரண்டுதாங்க" என்று சொல்கிறார். கிரிஷ் காரின் டிக்கியில் ஒளிந்துகொண்ட விஷயத்தைச் சொல்ல, மகேஸ்வரி "நீங்க கிரிஷ்ஷை இங்க கூட்டிட்டு வர வேண்டியதுதானே?" என்று கேட்கிறார். "அவன் ரொம்ப பயந்து இருக்கான், நாளைக்குக் கூட்டிட்டு வருவோம்" என்று முத்து சொல்ல, "சரி நான் கிரிஷ்ஷோட அம்மாகிட்ட பேசிட்டு வரேன்" என்று சொல்லி ரோகிணிக்கு போன் போடுகிறார். "நாளைக்குக் கூட்டிட்டு வர்றதா சொல்றாங்க" என்று மகேஸ்வரி சொல்ல, "சரி அப்படியே கூட்டிட்டு வரட்டும், நான் வேற ஏதாவது யோசிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ரோகினி போனை வைக்கிறார்.
பையனைவிட வேலைதான் முக்கியமா என்று முத்து கோபப்பட, மகேஸ்வரி, "வர மாதிரிதான் இருந்தது, திடீர்னு வேலை வந்துருச்சு" எனச் சமாளிக்கிறார். பிறகு மேனேஜர் முத்துவின் விவரங்களை வாங்க, மீனா மகேஸ்வரியிடம் கிரிஷ், அவனது அம்மா, பாட்டி பற்றி விசாரிக்கிறார். "அம்மா நம்பர் குடுங்க" என்று மீனா கேட்க, "அவங்களுக்குக் கேட்காமல் கொடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டு மகேஸ்வரி சென்றுவிடுகிறார்.
உடனே, ரோகிணி, கிரிஷ்ஷை அங்கிருந்து கூட்டிட்டு வர ஏதாவது பண்ணணுமே என யோசித்தபடி, வித்யாவிடம் போனில் பேசுவது போல ஹாலுக்கு வருகிறார். அங்கே அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, ரோகிணி "கிரிஷ்ஷோட கார்டியன் என்னோட ஃப்ரண்டு மகேஸ்வரிதான். முத்துவும் மீனாவும் கிரிஷ்ஷைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. இதனால் கிரிஷ்ஷோட அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க, ஆக்ஷன் எடுக்கப் போறதா சொன்னாங்க" எனச் சொல்கிறார். இதைக்கேட்ட விஜயா "அவ பெத்த பிள்ளைக்கு இவங்க சொந்தம் கொண்டாடுனா எப்படி சும்மா இருப்பாங்க?" எனப் பேசுகிறார். இதற்கிடையில், முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வருகின்றனர். முத்து கிரிஷ் பற்றிப் பேச ஆரம்பிக்க, அண்ணாமலை சைகை காட்டி அமைதியாக இருக்கச் சொல்லி, "கிரிஷ் இப்போ எங்க இருக்கான்?" என்று கேட்கிறார். "மீனா அம்மாவீட்டில் இருக்கான்" என்று முத்து சொல்ல, நடந்த விஷயங்களை எல்லாம் அண்ணாமலையிடம் கூறுகிறார்.
அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications