சேஷுக்கு மருத்துவமனையில் நடந்தது இதுதான்! வதந்தி பரப்பாதீங்க! லொள்ளு சபா பழனியப்பன் ஆவேசம்
சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் சேஷு சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த நிலையில் அவருடைய மரணம் குறித்து சிலர் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் பழனியப்பன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் பழனியப்பன் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சேஷுவோடு சில எபிசோடுகளில் நடித்திருக்கிறார். அதே நேரத்தில் இப்போது சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு இந்த சீரியலில் அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பழனியப்பன் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சேஷுவின் மறைவிற்கு பிறகு அவர் பற்றிய சில வீடியோக்களை அடிக்கடி பழனியப்பன் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதை நேரத்தில் இன்று பழனியப்பன் வெளியிட்ட வீடியோவில் எல்லோருக்கும் வணக்கம் நான் இப்போ எதுக்காக இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறேன் என்றால் சேஷு அண்ணாவோட மரணத்தை பற்றி தான் பேசப்போகிறேன்.
சேஷு அண்ணனுடைய மரணம் எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏன்னா நாங்க எல்லாருமே 20 வருஷத்துக்கு மேல டிராவல் பண்ணிட்டு இருக்கோம். இப்போ அவருடைய இறப்பு பற்றி ஒரு சில ஊடகங்கள் சரியாக எழுதி இருக்கின்றனர். ஆனால் ஒரு சில ஊடகங்கள் சிலர் தவறாக பேசுவதை வைத்து தவறாக எழுதி வருகிறார்கள். சேஷு அண்ணாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட தங்களுக்கு மைக் கிடைத்துவிட்டது என்று கண்டமேனிக்கு பேசியிருக்கிறார்கள்.
சேஷு அண்ணாவுக்கு 10 லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு இல்லாததால் தான் அவர் மரணம் அடைந்து விட்டார் என்று சிலர் பேசியிருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, அவருக்கு பலருடைய உதவிகள் கிடைக்கதான் செய்திருந்தது. ஆனால் சில நடிகர்கள், ஏன் அந்த நடிகர்கள் உதவி செய்யவில்லை இந்த இயக்குனர் உதவி செய்யவில்லை என்று சிலரை குறிப்பிட்டு பேசி கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் உதவி செய்யவில்லை என்று யாருக்காவது தெரியுமா? எல்லோரும் தங்களால் முடிந்ததை செய்யத்தான் செய்திருந்தார்கள். ஆனால் அதை தெரியாத ஒரு சிலர் தங்களுடைய பிரபலத்துக்காக இந்த மாதிரி தவறான தகவல்களை பேசி இருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் நடந்தது கிடையாது. சேஷு அண்ணாவிற்கு அவருடைய நெருங்கிய வட்டாரத்திலிருந்து ரசிகர்களாகவோ அதிகமான உதவிகள் செய்திருந்தார்கள்.
ஆனாலும் அவருடைய இறப்பு வந்துவிட்டது. அது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். ஆனால் நடிகர் சந்தானம் இயக்குனர் ராஜ் போன்றோர் உதவவில்லை என்று தவறாக பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் பழனியப்பன் பேசியிருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் சேஷு இறந்த அன்று நடிகர் டெலிபோன் ராஜ், சேஷுவுக்கு 10 லட்சம் பணம் கொடுத்து யாரும் உதவி செய்யாததால் தான் அதனால் அவர் இறந்துவிட்டார் என்று சொன்னார். அவரை தான் பழனியப்பன் பேசி இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
Blast Day 1 Collection: அர்ஜுனின் பிளாஸ்ட் படத்திற்கு முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா? -
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications