சிறகடிக்க ஆசையில் இனி பரம்பரை சொத்து மனோஜ்க்கு தானா? பாட்டிக்காக கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தேவா அந்த சீரியலில் பாட்டியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையை கொல்லிமலை அருவிக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி இந்த சீரியலில் ஒருமுறை கூட மாட்டவே இல்லையே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை ரோகிணி மறைத்திருக்கிறார். இதோடு அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அந்த குழந்தை கிரிஷ் பலமுறை முத்து மற்றும் மீனாவோடு வீட்டிற்கு வந்திருந்தாலும் இது என்னுடைய குழந்தை தான் என்று ரோகிணி இதுவரைக்கும் சொல்லவில்லை.

அதுபோல தன்னுடைய தந்தை வெளிநாட்டில் மலேசியாவில் இருக்கிறார் என்றும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது போதாது என்று தனக்கு அம்மா இல்லை என்றும் ரோகிணி அடுக்கடுக்கான பல பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ரோகிணி மட்டும் ஒரு முறையும் மாட்டாமல் முத்து மட்டும் மீனாவிற்கு தான் பிரச்சனை மேல பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இப்போது ரோகிணி தன்னுடைய மகன் பிறந்த நாளுக்காக செல்ல இருக்கிறார்.
ரோகிணி துணிக்கடையில் துணி வாங்கும் போது உங்களுடைய பையனுக்கு இந்த டிரஸ் சரியாக இருக்கும் என்று கடைக்காரர் சொன்னதை அங்கு வந்த விஜயா கேட்டு பிரச்சனை செய்கிறார். அப்போது விஜயா ரோகிணியிடம் என்ன சொல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. வழக்கம்போல இந்த முறையும் சமாளித்து விடுவாரா? அல்லது இந்த முறை விஜயாவிற்கு சந்தேகம் வருமா என்ற கோணத்தில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் மனோஜாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தேவா இந்த சீரியலில் பாட்டியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகையோடு கொல்லிமலைக்கு சென்று இருக்கிறார். அப்போது அந்த பாட்டி நான் இதுவரைக்கும் இந்த கொல்லிமலைக்கு வந்ததே கிடையாது. நீதான் எனக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருக்க என்று மனோஜிடம் சொல்ல, மனோஜ் அப்போ நான் தான் உங்களுக்கு பெரிய கிப்ட் கொடுத்திருக்கிறேனா? அப்போ அந்த ஸ்பெஷல் கிப்ட் இனி எனக்கு தானா என்று கேட்க பாட்டியும் அதற்கு கலகலப்பாக சிரித்திருக்கிறார். கொல்லிமலை அருவியில் குளித்தபடி ஸ்ரீதேவா வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு பாட்டி தன்னுடைய பேரன்கள் எல்லோருக்கும் ஒரு போட்டி வைத்திருந்தார். தன்னுடைய பிறந்த நாளில் யார் என்னுடைய மனதை கவரும் வகையில் பரிசு தருகிறார்களோ அவர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் தருவேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல முத்து தான் பாட்டிக்கு பிடித்த மாதிரி அவருடைய பழைய தோழிகளை கூட்டிட்டு வந்திருந்தார். அதனால் அவருக்கு பரம்பரை நகையை கொடுத்து இருக்கிறார். அதை வைத்து தான் இப்போது ஸ்ரீ தேவா மற்றும் பாட்டி இப்படி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications