கோடைகானலில் “சிறகடிக்க ஆசை” சீரியல் பிரபலங்கள்.. அட விஷயமே இதுதானா? ரோகிணி இப்படி மாறிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். அதில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா மட்டும் மிஸ் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் இனி கோடைகானலில் சூட்டிங் நடைபெறுகிறதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரைக்கும் சீரியலில் பவ்யமாக வந்த ரோகிணி மற்றும் ஸ்ருதி கொடைக்கானலில் போட்ட டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் எந்த வாரத்தில் டாப் 10 சீரியல்களில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இது சின்னத்திரை ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியல் விறுவிறுப்பு காரணமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விரும்பப்பட்டு வருகிறது.
இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த சீரியல் பிரபலங்களே தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு க்ளூ கொடுத்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து கேரக்டரில் நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த், மனோஜ், ரோகிணி, ஸ்ருதி, ரவி என எல்லோரும் கொடைக்கானலில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.

இதை பார்த்ததும் ரசிகர்கள் சிறகடிக்க ஆசை சீரியலில் இனி வரும் எபிசோடுகள் கொடைக்கானலில் ஷூட் செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது சூட்டிங்கிற்காக போனது போல தெரியவில்லை. காரணம் இவர்களுடைய புகைப்படங்களுக்கு கீழே ட்ரக்கிங், சுற்றுலா என்றுதான் டேக் போட்டு இருக்கிறார்கள். எந்த இடத்திலும் சூட்டிங் என்று போடவில்லை.
அதே நேரத்தில் இவர்களுடைய கூட்டணியில் மீனாவை காணவில்லை. இதனால் மீனா இல்லாமல் இந்த சீரியல் ஷூட்டிங் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் இவர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா போயிருக்கிறார்களா? என்றும் யோசிக்க வைக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு சில் பண்ணுவதற்காக இவர்கள் கொடைக்கானலில் என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விடுகிறார்கள்.

அதே நேரத்தில் மீனா மலையாள சிறகடிக்க ஆசை சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இவர்களோடு கொடைக்கானலுக்கு போகவில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் அமைதியாகவே தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கும் ரோகிணியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சல்மா தற்போது கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில் அதை பார்த்ததும் உங்களை பார்க்கும் போது இப்போ ஒரு போலீஸ் ஆபீஸர் போல இருக்கீங்களே என்று சிலர் கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.
அதுபோல சீரியலில் இப்போது விஜயாவின் பிளானால் மீனாவின் பூக்கடையை கார்ப்பரேஷன் ஆபிஸர்ஸ் தூக்கிக்கொண்டு போய் இருக்கின்றனர். இதனால் முத்து மீனாவுக்கு பைக் வாங்கி கொடுத்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து விஜயா இனி என்ன பிளான் பண்ணப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications