புது திரைப்படத்தில் கதாநாயகியாக மாறும் “சிறகடிக்க ஆசை சீரியல்” நடிகை.. தலைப்பு என்னன்னு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தான் புதியதாக திரைப்படத்தில் கமிட் ஆகி இருப்பதாக புகைப்படத்தோடு ரசிகர்களிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். இணையத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். யார் அந்த நடிகை? எந்த திரைப்படம்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய அளவில் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் தமிழ் சீரியல் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருவது இந்த சீரியலுக்கு கிடைத்த வெற்றி தான். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர்.

அதனாலேயே இந்த சீரியலில் தமிழில் கதாநாயகி நடிக்கும் நடிகை கோமதிப்பிரியா மலையாளத்திலும் இந்த சீரியலின் ரீமேக்கில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் மாமியாராக நடிக்கும் நடிகை அணிலா ஸ்ரீ தெலுங்கு ரீமேக் சிறகடிக்க ஆசை சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் அவர் இப்போது இரண்டு சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீனாவின் தங்கை கேரக்டரில் சீதாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சங்கீதா லியோனிஸ், கதாநாயகி கோமதி பிரியாவிற்கு முன்பு திரை உலகில் நுழைந்து விட்டார்.

அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அந்த பூஜையில் எடுத்த புகைப்படங்களை சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் சங்கீதா லியோனி கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்திற்கு "குற்றம் புதிது" என்று டைட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ரஞ்சித் என்பவர் இயக்கியிருக்கிறார்.

அதுபோல இன்னும் ஒரு சில நாட்களில் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங் வேலைகள் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீதாவாக இந்த சீரியலில் பாவமான கேரக்டரில் பூ கட்டிக் கொண்டிருக்கும் சங்கீதா லியோனிஸ் பல் டாக்டருக்கு படித்து இருந்தாலும் கலைமீது உள்ள ஆர்வத்தின் காரணமாக சிறகடிக்க ஆசை சீரியல் உட்பட சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications