Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியாக போஸ்ட் போட்ட சிறகடிக்க ஆசை விஜயா! கணவர் இந்த பிரபலம் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா (Siragadikka Aasai serial Anila Sreekumar) என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் அணிலா ஸ்ரீகுமார் சமீபத்தில் தனது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார். அந்த தருணங்களில் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

சீரியலில் எப்போதும் கடுமையான முகபாவனையுடன், குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் தோன்றும் விஜயாவை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, நிஜ வாழ்க்கையில் அணிலா ஸ்ரீகுமார் மிகவும் எளிமையாகவும், குடும்பத்தை மையமாக வைத்த வாழ்க்கையை வாழ்ந்து வருவது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. "இதுதான் விஜயாவின் நிஜ குடும்பமா?", "சீரியலில் பார்க்கும் விஜயாவுக்கும் நிஜ வாழ்க்கை அணிலாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!" என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Anila Sreekumar Siragadikka Aasai serial Vijay TV

கணவர் - குழந்தைகளுடன் சந்தோஷ தருணம்

திருமண நாள் கொண்டாட்டத்தில் அணிலா ஸ்ரீகுமார் தனது கணவருடன் மட்டுமல்லாமல், மகன் மற்றும் மகளுடனும் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குடும்பமாக சேர்ந்து கேக் வெட்டி, சின்ன சின்ன தருணங்களை ரசித்த அந்த புகைப்படங்கள், ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக மாறியுள்ளது.

Anila Sreekumar Siragadikka Aasai serial Vijay TV

"உங்கள் குடும்பம் ரொம்ப அழகா இருக்கு", "இதே மாதிரி சந்தோஷமா எப்பவும் இருங்க" என்று ரசிகர்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் குவித்து வருகின்றனர். சிலர், "திரையில் அம்மா வேடத்தில் பார்த்து பழகினோம்... நிஜ வாழ்க்கையிலும் குடும்பத்தை எப்படி அழகா பார்த்துக்குறாங்க" என்று பாராட்டியும் வருகின்றனர்.

Anila Sreekumar Siragadikka Aasai serial Vijay TV

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம்

மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி உலகில் தொடர்ந்து நடித்து வரும் அணிலா ஸ்ரீகுமார், பெரும்பாலும் அம்மா வேடங்கள், குடும்பப் பாங்கான குணச்சித்திரங்கள், சில நேரங்களில் நெகட்டிவ் கேரக்டர் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் பெற்றவர்.

Anila Sreekumar Siragadikka Aasai serial Vijay TV

தமிழில் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டர் மூலம் தற்போது இளம் தலைமுறை ரசிகர்களிடமும் அதிக கவனம் பெற்றிருக்கிறார். அதேபோல் மலையாளத்தில் பவித்ரம் தொடரில் கமலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததும் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதற்கு முன்பு விஜய் டிவியில் சின்னத்தம்பி உட்பட ஒரு சில சீரியல்களிலும் அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

நிஜ வாழ்க்கையில் அமைதியான குடும்ப வாழ்க்கை

திரையில் எவ்வளவு நெகட்டிவான வேடங்களில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் அணிலா ஸ்ரீகுமார் மிகவும் அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவே அவரது சமூக வலைதளப் பதிவுகள் சொல்லுகின்றன. கணவர், மகன், மகளுடன் சேர்ந்து எளிமையாக கொண்டாடும் தருணங்களை அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவரின் தனிச்சிறப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் "விஜயா கேரக்டரை வெறுத்தாலும், அணிலா ஸ்ரீகுமாரை மனதார பிடிக்கும்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். திரையில் வில்லியாக தோன்றினாலும், நிஜ வாழ்க்கையில் ஒரு அன்பான மனைவி, தாய் என்ற முகத்தை பார்க்க முடிகிறது என்பதே இந்த புகைப்படங்கள் மூலம் மீண்டும் உறுதி ஆகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+