அப்பா விஷயத்தில் நடித்த ரோகிணிக்கு விஜயா வைத்த ஆப்பு.. மாட்டிகிட்டே பங்கு.. மாஸ் காட்டிய மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் பதினொன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகினியின் அப்பா இருக்கிறாரா? இல்லையா? கண்டிப்பா அவர் இந்த வீட்டுக்கு வந்தே ஆகணும் என்று விஜயா மிரட்டி இருந்த நிலையில் மீண்டும் கறி கடைக்காரரை விஜயா வீட்டுக்கு வரவைத்த ரோகிணி அப்பா விஷயத்தில் புது பிளான் போட்டு இருக்கிறார்.

ஆனால் ரோகிணி மீது உள்ள கோபத்தை விஜயா மீனாவிடம் காட்ட அதற்கு மீனா பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial April 11th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி வித்யாவிடம் விஜயா மிரட்டிய விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வித்யா ஒரு பொய்யை சொல்லிட்டு இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் அதுக்காக பயந்துட்டு இருக்க போற? பேசாம உண்மையை சொல்லிடு என்று சொல்ல, அதற்கு ரோகிணி அப்படி சொன்னால் என்னை வீட்டை விட்டு துரத்திடுவாங்க. அதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்.

முதலில் மனோஜை என்னுடைய வழிக்கு கொண்டு வர வேண்டும். நான் என்ன சொன்னாலும் மனோஜ் கேட்குற மாதிரி பண்ணனும். அதற்குப் பிறகுதான் உண்மையை சொல்லணும். ஒருவேளை நான் உண்மையை சொல்லும்போது எனக்காக மனோஜ் தான் இருக்கிற மாதிரி பண்ணனும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு வித்யா அப்போ இப்போதைக்கு ஒரே வழி தான் இருக்கு. அந்த பிரவுன் மணி (கறிக்கடைக்காரரை) திரும்பவும் வர வச்சி புது கதை சொல்ல வேண்டியதுதான் என்று ரோகிணி அவருக்கு போன் போட்டு வர சொல்கிறார்.

Siragadikka aasai serial April 11th promo and episode full update

இதை தொடர்ந்து பிரவுன் மணி விஜய் வீட்டுக்கு வந்து இந்த முறை நல்லா நடிச்சு மணிரத்தினம் படத்தில் வாய்ப்பு வாங்கிடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வருகிறார். பிறகு வீட்டிற்குள் வந்ததும் ரோகிணி பாப்பா ரோகிணி பாப்பா என்று கூப்பிட விஜயா வெளியே வந்து பார்த்து நீங்களா எப்போ வந்தீங்க என்று நல்ல விசாரித்து ரோகிணி கூப்பிடுகிறார். ரோகிணி பிரவுன் மணியை பார்த்ததும் எதுக்கு இப்ப வந்தீங்க! என்கிட்ட பேசாதீங்க? உங்களுக்கு நான் எத்தனை முறை ஃபோன் பண்ணுனேன்.

நீங்க போனை எடுக்கவே இல்ல இந்த வீட்ல இருக்கிறவங்க உங்க அப்பா எங்கன்னு என்னை தினம் தினம் கேட்டுக்கொண்டே இருக்காங்க என்று கத்தி கொண்டு இருக்க அதற்கு பிரவுன் மணி உங்க அப்பாவை போலீஸ் கைது பண்ணிட்டாங்க. அவருடைய பார்ட்னர்கள் எல்லாரும் சேர்ந்து மோசடி பண்ணி பழியை தூக்கி உங்க அப்பா மேல போட்டுட்டாங்க. அவரே இப்போ மலேசியா ஜெயில்ல இருக்காரு என்று சொல்ல எல்லாத்தையும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ரோகிணி என்ன சொல்றீங்க என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா அப்போ சொத்து எல்லாம் போச்சா? என்று கேட்க இல்லை இப்போதைக்கு சொத்தை முடக்கி வச்சிருக்காங்க அவர் மீது தப்பில்லை என்று நிருபணம் ஆச்சுன்னா சொத்த கொடுத்துடுவாங்க என்று சொல்கிறார். அதற்கு விஜயா அப்போ மனோஜ் மற்றும் ரோகிணியை மலேசியாவுக்கு கூட்டிட்டு போய் அப்பா வெளியே எடுக்கிறதுக்கு உதவி செய்ய எளிமையாக இருக்கும் என்று சொல்ல, அதற்கு பிரவுன் மணி வேண்டாம் எல்லா லாயர் பார்த்துப்பாங்க.

இப்ப மாப்பிள்ளை வந்தா மாப்பிள்ளையை பிடிச்சு ஜெயில்ல போட்டுவிடுவார்கள் என்று சொன்னதும் மனோஜ் பயந்து போய் அந்த லாயர் பாத்துக்குறேன்னு சொல்றாங்க, அங்கிள் வெளியே வந்ததும் போய் பாத்துட்டு வரலாம் என்று சொல்கிறார். இதை எடுத்து பிரவுன் மணி ஊருக்கு கிளம்ப முத்துக்கு இதுல ஏதோ சந்தேகம் இருக்கு என்று சொல்ல, அதற்கு மீனா உங்களுக்கு எல்லாத்திலையும் சந்தேகம்தான்.

Siragadikka aasai serial April 11th promo and episode full update

ரோகிணியை பார்க்கும்போது எனக்கே கஷ்டமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து விஜயா பயங்கர கோபத்தில் இருக்கும்போது மீனா காபி கொண்டு வந்து கொடுக்க, விஜயா அதை தட்டி விட்டு விட்டு இந்த வீட்டு மகாலட்சுமி அம்மா வீட்டுக்கு போயிட்டா, வெளிநாட்டிலிருந்து வந்த குபேரனை கைது பண்ணிட்டாங்க ஒன்னும் இல்லாதவ தான் எங்க வீட்டுல இருக்கா என்று கோபப்படுகிறார்.

அதற்கு முத்து ஸ்ருதி இடம் அப்போ உங்க அப்பா பேரு குபேரனா என்று கேட்டு நக்கல் பண்ணுகிறார். பிறகு மீனா ஜாடை மடையா என்னை தானே சொல்றீங்க என்று விஜயாவிடம் கோபப்பட, அதற்கு விஜயா ஆமாண்டி உன்ன பற்றி தான் சொல்ற, என்ன செய்வ என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+