வீட்டிற்கு வந்த ஸ்ருதி.. வார்த்தையை விட்டு ரோகிணி வசமா சிக்கிட்டாரே.. விஜயாவுக்கு கிடைத்த அவமானம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் மே 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீண்டும் வீட்டிற்கு வந்த ரவி மற்றும் ஸ்ருதியிடம் முத்து பற்றி பேசி ரோகிணி அவமானப்படுகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் பிச்சைக்கார வேடத்தில் வந்திருப்பதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைய, அதற்கு மனோஜ் அம்மாவும் பணம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்ல, மனோஜை ரோகிணி தன்னுடைய அறைக்கு கூட்டிட்டு போய் எதுக்காக மனோஜ் இப்படி பண்ணுற என்று போட்டு அடிக்கிறார்.

அதோடு நான் உனக்கு இப்போதைக்கு தான் பணம் தர முடியாது என்று சொன்னேன். ஆனால் உன்னை இப்படியே விட்டு விடனும் என்று நான் நினைக்கவே இல்ல என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக சுதா ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பி போனதால் அப்செட்டாக இருக்க, வாசுதேவன் இதெல்லாம் நடக்கும் என்று எனக்கு முன்னாடியே தெரியும். ஸ்ருதி என்னைக்குமே ஒரே மாதிரி இருக்கமாட்டா, இன்னைக்கு பிடிக்கலைன்னு சொல்றதை திடீர்னு பிடிக்குதுன்னு சொல்லுவா திடீர்னு. ஏற்கனவே வேண்டாம்னு சொன்னது இப்போ வேணும்னு சொல்லுவா. அவ எப்பவுமே இப்படித்தானே என்று சொல்கிறார்.
அதோடு இதை விடு வேற வாய்ப்பு கிடைக்காமலா போகும்? நம்ம வேற பிளான் போடுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ரவியை பார்க்க ஓட்டலுக்கு வந்த ஸ்ருதி வா வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, ரவி நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்ல அதற்கு ஸ்ருதி நான் உங்க வீட்டுக்கு தான் கூப்பிடுறேன் என்று சொன்னதும் ரவி ஷாக் ஆகுறார்.

அதோடு முத்து தனக்கு செய்த உதவியை பற்றி சொல்கிறார். இருந்தாலும் உங்க அண்ணன் மேல எனக்கு கோபம் எல்லாம் போகல. அதற்காக இப்படியே இருக்க முடியாது இல்ல, என்று சொல்ல ரவியும் சரி என்று கிளம்புகிறார். பிறகு ரவி மட்டும் வீட்டில் தனியாக வந்து நிற்க அண்ணாமலை நீ மட்டும் தனியாவா வந்த என்று கேட்க, பின்னாடியே ஸ்ருதியும் வந்து நிற்க அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.
அதோடு விஜயாவை கூப்பிட்டு ரவியையும், ஸ்ருதியையும் பார்க்க சொல்ல விஜயாவும் சந்தோஷப்படுகிறார். அதோடு விஜயா எனக்கு தெரியும் நீங்க வந்துடுவீங்கன்னு.. என் புள்ள என்னை விட்டு இருக்க மாட்டான் என்று விஜயா சந்தோஷப்பட ஸ்ருதி வந்ததை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இவங்க என்ன வீட்டுக்கு வந்துட்டாங்க இவங்க பிரச்சனை முடிஞ்சா என்னை பிடிச்சுக்குவாங்களே என்று ரோகிணி பதறுகிறார்.

அதனால் ரோகிணி ஸ்ருதியிடம் இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க. அதுக்குள்ள நடந்தது எல்லாம் மறந்துட்டீங்களா? நீங்க வந்தது எனக்கு சந்தோஷம்தான். இருந்தாலும் உங்க அப்பாவுக்கு இந்த வீட்டில் இருக்கிறவர்களால் பெரிய அவமானம் நடந்திருக்கு என்று கொளுத்தி போட ஸ்ருதி பாஸ்ட் இஸ் பாஸ்ட் நடந்ததை திரும்பி பேசி ஒன்றும் ஆகப்போறது இல்லை என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்ததால் கேக் வெட்டி ரவிக்கு ஊட்டி விட, ரவி ஸ்ருதிக்கு ஊட்டி விடுகிறார். அதைத் தொடர்ந்து ரோகிணியிடம் கேக்கை கொடுத்து மனோஜ்க்கு ஊட்டி விட சொல்கிறார். பிறகு மனோஜ் ரோகிணிக்கு ஊட்டி விடுகிறார். அடுத்ததாக மீனாவிடம் முத்துவுக்கு ஊட்டிவிட சொல்கிறார்.
அண்ணாமலை இதையெல்லாம் பார்த்து ஒரு சண்டை முடிஞ்சு திரும்பி ஒன்று சேரும்போது எப்படி பேசுறது என்று யோசனை இருக்கும். ஆனால் அது எதுவுமே இல்லாம ஸ்ருதி இப்படி பண்ணிட்டா என்று சந்தோஷப்படுகிறார். அப்போது விஜயா கையில் கேக்கை கொடுத்து ஸ்ருதி அண்ணாமலைக்கு ஊட்டி விட சொல்கிறார். பிறகு ரவி மற்றும் மனோஜ் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது மனோஜ் மாமியார் மாமனார் உன்கிட்ட நல்லா பேசுறாங்களா என்று கேட்கிறார்.
அதற்கு ரவி ஆமா அவங்க எல்லாம் நல்லபடியா தான் பேசிட்டு இருக்காங்க என்று சொல்ல, அதற்கு மனோஜ் என் மாமனார் ஜெயில்ல இருக்காரு. அவரு எப்ப வெளியே வந்து எப்ப எனக்கு உதவி பண்ண போறாருன்னு தெரியல என்று புலம்புகிறார். அப்படியே பேசிக் கொண்டிருக்கும்போது கல்யாணத்துக்கு முன்னாடி லைப் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. ஆனா இப்போ அப்படி இல்ல என்று ரவி புலம்ப,
மனோஜும் சேர்ந்து புலம்பி கொண்டிருக்கும்போது முத்து வந்து கல்யாணத்துக்கு முன்னாடி கல்யாணம் கல்யாணம்னு அவசரப்பட வேண்டியது. அப்புறம் போர் அடிக்குது என்று புலம்ப வேண்டியது என்று சொல்ல, திரும்பவும் மண்டபத்தில் நடந்தது பற்றி பேச்சு வர மனோஜ் இனி அதை பற்றி பேச வேண்டாம் என்று ரவியை கூட்டி செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications