வாசுதேவனை அடித்த முத்து.. வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொன்ன ஸ்ருதி.. அண்ணாமலை அதிரடி.. செம ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 1ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஸ்ருதியை அண்ணாமலை குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்திருந்த வாசுதேவனும் அவருடைய மனைவியும் மீனா மீது திருட்டு பழியை போட்டு தங்கள் பிளானை நிறைவேற்றுகின்றனர்.
அதே நேரத்தில் ஆரம்பத்திலிருந்து பல அவமானங்களிலும், பிரச்சனைகளிலும் அமைதியாக இருந்த முத்து கடைசியில் வாசுதேவனை அடிக்க அதனால் பிரச்சனை வெடித்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் வித்யாவும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வித்யா ரோகிணியிடம் மனோஜை சீக்கிரமாக தனி குடித்தனம் கூட்டிட்டு போய்விட வேண்டும் என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் அண்ணாமலை அவமானப்படுத்தி முத்துவை பிரச்சினைக்கு இழுக்க வேண்டும் என்பதற்காக வாசுதேவனின் மனைவி அனுப்பிய இரண்டு ஆட்கள் டைனிங் டேபிளுக்கு முத்துவையும் அண்ணாமலையும் கூட்டிட்டு வந்து சாப்பிட உட்கார வைக்கின்றனர்.
அந்த நேரத்தில் வாசுதேவன் ஸ்ருதியின் அம்மா சுதாவிடம் நீங்க அண்ணாமலையை அவமானப்படுத்துவதற்காக பெரிய பிளான்ட் போட போறேன்னு சொன்னியே என்ன பண்ணி இருக்க என்று திட்டிக் கொண்டு இருக்க அதற்கு சுதா நான் அனுப்பிய ஆள் அண்ணாமலையை பந்திக்கு உக்கார வச்சிருக்காங்க. இனி அவங்களே இன்னொரு விஐபி வந்திருக்காங்க நீங்க எந்திரிச்சு வெளியே போங்கன்னு அவமானப்படுத்துவாங்க.

அப்போ முத்து கோவப்பட்டு அவங்கள அடிப்பான். அதனால பிரச்சனை வரும் நாம இதை பெரிய பிரச்சனையா மாத்திடனும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வாசுதேவன் பந்தியை பார்க்க அங்கே முத்துவும் அண்ணாமலையும் சாப்பிடாமல் பந்தி பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். அதோடு குழந்தைகள் சாப்பிட வந்துட்டாங்க அதனால நாங்க எழுந்து விட்டோம் என்று சொல்ல, அதைக் கேட்டு வாசுதேவனும் சுதாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு ஸ்ருதி மற்றும் ரோகிணிக்கு ஆரத்தி எடுக்கின்றனர். அதோடு ஸ்ருதி நகைகளை தன்னுடைய தோழிகளுடன் பேசியபடியே கழட்டி போட்டுவிட்டு ரவியை கூட்டி கொண்டு வெளியே போகிறார். அப்போது ஸ்ருதி கழட்டி போட்ட மாலையில் செயின் ஒன்று சிக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் பார்வதி மீனாவை கூப்பிட்டு நீ போய் ஸ்ருதியை கூட்டிட்டு வா உன் மாமியார் எல்லோரும் கோவிலுக்கு போகணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல மீனா ஸ்ருதியை கூப்பிட ரூமுக்கு போகும்போது அங்கு மாலையில் செயின் மாட்டியிருப்பதை பார்த்து அதை எடுத்து கொண்டிருக்கும்போது அங்கே வரும் வாசுதேவன் ஸ்ருதியோட செயினை நீ திருடுறியா என்று பழி போடுகிறார்.
அதோடு வாசுதேவன் தன்னுடைய மனைவியை கூப்பிட்டு மீனா திருடுவதாக சொல்ல அவரும் சேர்ந்து மீனாவை திருடி என்று அவமானப்படுத்துகின்றனர். அப்போது விஜயாவை கூப்பிட்டு மீனா நகை திருடிவிட்டார் என்று சொல்ல விஜயா எந்த பதிலும் சொல்ல முடியாமல் நிற்கிறார். பிறகு மீனா அங்கிருந்து கண்ணீரோடு ஓடி வந்து முத்துவை கட்டி பிடித்துக் கொள்ள, என்ன நடந்துச்சு என்று முத்து கேட்க வாசுதேவன் அவருடைய மனைவியும் வந்து மீனா நகை திருடியதாக சொல்ல அண்ணாமலை எங்க மருமக அப்படி பண்ற ஆள் கிடையாது என்று மீனாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

அதோடு முத்து நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க என்று பொறுமையாக பேச அதற்கு அவர்கள் மீனா திருடியதை நாங்களே பார்த்தோம் என்று சொல்கின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளைக்கு என்று வெளியான வீடியோவில் வாசுதேவன் மீனாவை இப்படி திருடுவதற்கு பதிலா பிச்சை எடுக்கலாம் என்று கண்ட மேனிக்கு பேச, அதனால் கோபமான முத்து வாசுதேவனை போட்டு அடிக்க அந்த நேரத்தில் வெளியே போயிருந்த ஸ்ருதியும் ரவியும் உள்ளே வருகின்றனர். ஸ்ருதி தன்னுடைய அப்பாவை அடித்ததற்காக இனி உங்க வீட்டுக்கு நான் வரமாட்டேன் என்று அண்ணாமலை இடம் சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications