சிறகடிக்க ஆசை: மனோஜின் காதலியை தேடி போன ரோகிணிக்கு கிடைத்த அதிர்ச்சி.. முத்து கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணி இடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த மனோஜிற்கு ரோகிணி புது ஐடியா கொடுத்திருக்கிறார் அதோடு மனோஜின் காதலியை தேடிப்போன ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
மறுபக்கத்தில் மீனாவின் பூக்கடையை விஜயா மற்றும் ரோகிணியின் சதியால் கார்ப்பரேஷன் ஆபீஸர்ஸ் தூக்கிக்கொண்டு போன நிலையில் முத்து மீனாவுக்கு புது பைக் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்து இருக்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து எல்லோருக்கும் போன் போட்டு கீழே வர சொல்ல, ஹாலில் நின்னு அண்ணாமலை இடம் விஜயா இப்ப எதுக்கு எல்லாரையும் கீழ வர சொல்லியிருக்கிறார் என்று கேட்க, அந்த மாதிரி தெரியல முத்து வர சொல்லி இருந்தா ஏதாவது விஷயம் இருக்கும் என்று சொல்லி எல்லாரையும் கூட்டிக்கொண்டு கீழே வருகிறார்.
பிறகு எல்லாரும் வீட்டிற்கு வெளியே வரும்போது முத்து கேட்டை பிடித்துக் கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டிருக்க விஜயா இவன் போஸ் கொடுக்குறதை பார்க்க தான் வர சொன்னானா என்று கோபப்படுகிறார். அதற்கு அண்ணாமலை எதுக்குடா கீழ வர சொன்னா என்று முத்துவை கேள்வி கேட்க முத்து கதவை திறந்து வண்டியை ஓபன் செய்ய சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

அண்ணாமலை இது என்ன புது வண்டி யாருடையது? எதற்காக? என்று கேள்வி மேலே கேள்வி கேட்க, அதற்கு முத்து இது நம்முடையது தான்பா. இனிமே இது தான் மீனாவோட பூக்கடை... நடமாடும் பூக்கடை, இனி யாரும் இந்த வண்டியை தூக்கிட்டு போக முடியாது. இங்க ஒரு பாக்ஸ் பிட் பண்ணிடுவோம். மீனா அதுல பூ வச்சு எங்க வேணாலும் கொண்டு போய் கொடுக்கலாம் என்று சொல்ல,
இந்த ஐடியா நல்லா இருக்கு என்று அண்ணாமலை பாராட்ட விஜயாவின் முகம் மாறி விடுகிறது. மீனா எதற்காக தேவை இல்லாத செலவு என்று கேட்க, மீனா சின்ன வயசுல இருந்து ஓடி ஓடி உழைச்சவ. அவளால சும்மா இருக்க முடியாது. அவ பூக்கடை போனதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டா அதனாலதான் இப்படி ஒரு ஏற்பாடு என்று முத்து சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.

அதோடு முத்து எல்லாரும் செய்த வேலையை விட நீ செய்கிற வேலை தான் உசத்தி என்று பாராட்டுகிறார். பிறகு மீனாவை ஒரு ரவுண்டு கூட்டிட்டு போக சொல்லும் முத்து உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா? என்று கேட்க, மீனா பின்னாடி உட்காருங்க தெரியும் என்று முத்துவை உட்கார வைத்து கூட்டிக்கொண்டு செல்கிறார். பிறகு மனோஜ் ரூமுக்கு வந்து ரோகிணியிடம் மீனாக்காக கார் வாங்கி கொடுத்திருக்கிறார். முத்து மீனாக்காக பைக் வாங்கி கொடுத்து இருக்கிறான்.
மனோஜ்க்கு சப்போர்ட் பண்றதுக்கு அவருடைய மாமனார் இருக்காரு. எனக்கு தான் சப்போர்ட் பண்ண யாரும் இல்ல என்று சொல்ல, அதற்கு ரோகிணி நீ முயற்சி பண்ணா நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் நீ மனசு வச்சா எனக்கு பிசினஸ் பண்ண வழி கிடைக்கும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி உனக்கு என்னை விட எங்க அப்பாவோட பணம் தான் முக்கியமா? அதற்காகத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணுனியா? என்று கேட்க,
அதற்கு மனோஜ் நான் உன்னை முதல் முறை பார்த்ததுமே எனக்கு பிடிச்சிருச்சு. அப்போ நீ யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது என்று வருத்தப்படுகிறார். அதற்கு ரோகிணி உன்னுடைய 27 லட்சம் பணத்தை எடுத்துட்டு போன அந்த பொண்ணை தேடி கண்டுபிடித்து அவகிட்ட இருந்து பார்த்த திரும்ப வாங்கணும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் அது எப்படி முடியும்? என்று கேட்கிறார்.
அதற்கு ரோகிணி அவ எப்படியோ ஒரு ஏஜென்சி மூலமாக தான போயிருக்கா. அங்க விசாரிச்சு கனடாவில் அவ இருக்கிற அட்ரஸை கண்டுபிடிச்சா நாம இங்கிருந்து கனடா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து அவளை புடிச்சு பணத்தை வாங்கிடலாம் என்று அட்வைஸ் கொடுக்கிறார். மறுபக்கத்தில் மீனாக்கு முத்து பைக் வாங்கி கொடுத்திருப்பதை பார்த்து மீனாவின் அம்மா, தங்கச்சி பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
சத்யா வழக்கம் போல இது பெரிய விஷயமா? அக்கா சம்பாதித்து தருவானு தான் வாங்கி கொடுத்திருப்பாரு என்று பேச, மீனா அவர் பணத்துக்கு ஆசைப்படுற ஆளு கிடையாது என்று பதிலடி கொடுக்கிறார். அப்போது மீனாவின் அம்மா ஊரு கண்ணு உன் மேல தான் இருக்கு என்று திருஷ்டி சுற்றி போடுகிறார். அடுத்த கட்டத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் பாஸ்போர்ட் ஏஜென்சிக்கு வந்து ஜீவா பற்றி விசாரிக்கின்றனர்.

அப்போது அவர்கள் ஜீவாவின் போட்டோவை கேட்க மனோஜ் தன்னுடைய ஃபோனில் இருக்கும் ஜீவாவின் போட்டோவை எடுத்துக்காட்டுகிறார். அதை பார்த்து கோபமான ரோகிணி இவ்வளவு நாளா நீ அந்த பொண்ணு போட்டோவ போன்ல தான் வெச்சிருக்கயா? என்று கோபப்பட்டு போனை வாங்கி பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications