சிறகடிக்க ஆசை: ரோகிணி பார்லரில் மனோஜிடம் சிக்கிய ஜீவா.. முத்து சொன்ன வார்த்தை.. அதிரடி காட்டிய விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 25ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விரதம் இருக்கும் ரோகிணியை விஜயா முத்துவின் பேச்சை கேட்டு பாடாய்படுத்தி எடுக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ரோகிணிக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்கும்படி மீனாவிடம் சொல்ல, அப்போது வந்த முத்து நீங்க சொன்னதை நீங்களே மறந்துட்டீங்களா? விரதம் முடிக்கிற வரைக்கும் பார்லர் அம்மா தான் அவங்களே சமைச்சு சாப்பிடணும் என்று சொன்னிங்களே? என்று ஞாபகப்படுத்த அதற்கு விஜயா ஆமா நானே மறந்துட்டேன்.

நீ தான் பாத்திரத்தை கழுவி சாப்பாடு செஞ்சு சாப்பிடணும். அதுவும் உப்பு இல்லாம தான் சாப்பிடணும் என்று சொல்லி அனுப்புகிறார். மறுநாள் காலையில் மீனா கோலம் போடப்போக விஜயா வீட்டுக்குள் போகிறார். அண்ணாமலை அந்த நேரத்தில் வந்து என்ன ஆச்சு என் கோலம் போடாம நிற்கிறா என்று கேட்க, அதற்கு மீனா அத்தை தான் கோலம் போட வேண்டாம்னு சொல்லிட்டு உள்ளே போயிருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோகிணியை கூட்டிட்டு வந்து விரதம் முடிகிற வரைக்கும் நீ தான் கோலம் போடணும் என்று விஜயா சொல்கிறார்.
அதற்கு ரோகிணி எனக்கு கோலம் போடத் தெரியாது என்று சொல்ல, அதற்கு விஜயா உனக்கு எப்படி கோலம் போட வருகிறதோ அப்படி போடு என்று டார்ச்சர் செய்கிறார். பிறகு ரோகிணி கோலமாவை வாங்கி கண்டபடி கிறுக்கி வைக்கிறார். அடுத்ததாக மீனா பூரி மசாலா செய்து வைத்திருக்க எல்லாரும் ரசித்து சாப்பிடுகின்றனர். மனோஜும் எங்களை கூப்பிடாம விட்டுட்டீங்களே என்று ரோகிணியை கூட்டிக்கொண்டு வந்து சாப்பிட உட்காருகிறார்.

அப்போது முத்து பார்லர் அம்மா விரதம் இருக்கு அதுவும் ஒரு நேரம் தான் சாப்பிடணும்னு சொல்லி இருக்காங்கறது.. மறந்து போச்சா? பொண்டாட்டி விரதம் இருக்கும் போது புருஷன் மட்டும் சாப்பிடலாமா? நான் எல்லாம் மீனா விரதம் இருந்தா ஒரு நேரம் தான் நானும் சாப்பிடுவேன் என்று மனோஜ் மற்றும் ரோகிணியை முத்து எழுப்பி விடுகிறார். இதனால் கோபமான ரோகினி முத்துவை முறைக்கிறார்.

அதற்கு முத்து ஏம்மா என்னை முறைக்கிற, அப்புறம் பரிகாரம் நல்லபடியா நடக்காம போச்சுன்னா உங்க அப்பா எப்படி வெளியே வருவாரு என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் ஜீவா முத்துவுக்கு போன் போட்டு வெளியே போகணும் என்று கூப்பிட முத்து கிளம்பி போகிறார். பிறகு ஜீவா டிராவல் ஏஜென்சிக்கு வந்து டிக்கெட் ரெடி ஆகிடுச்சா என்று கேட்டுக் கொண்டிருக்க அவரும் ரெடியாயிடுச்சு என்று டிக்கெட்டை எடுத்துக் கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை: மாட்டியது ஜீவா இல்ல ரோகிணி தான்.. முத்து கொடுத்த டுவிஸ்ட்.. ஸ்ருதியால் வந்த பிரச்சனை
அதோடு உங்கள தேடி ரெண்டு பேரு கணவன் மனைவியா வந்தாங்க. உங்க பாட்டி இறந்து போயிட்டாங்க என்று பொய் சொல்லி விசாரிச்சாங்க என்று சொல்ல அதற்கு பதறிப்போன ஜீவா நான் சென்னைக்கு வந்திருக்கிற விஷயத்தை சொல்லிட்டியா? என்று கேட்க, இல்ல நாங்க சொல்லல என்று அந்த பெண் சொல்கிறார். அதற்கு ஜீவா வந்தவங்க யாரு என்று விசாரிக்க, வந்தவர் பெயர் மனோஜ் என்று சொன்னார் என்று சொல்ல ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்து வெளியான ப்ரோமோவில் ரோகிணியின் பார்லருக்கு ஜீவா வந்திருக்க ஜீவாவை பார்த்ததும் ரோகிணி மனோஜ்க்கு போன் போட்டு நீ உடனே கிளம்பி பார்லருக்கு வா என்று கூப்பிட, மனோஜ் எதற்கு என்று விசாரிக்கிறார். அதற்கு ரோகிணி ஜீவா பார்லருக்கு வந்திருக்கும் விஷயத்தை சொல்ல மனோஜ் அங்கு வந்து நின்று ஜீவாவிற்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.












Click it and Unblock the Notifications