சிறகடிக்க ஆசை: மாட்டியது ஜீவா இல்ல ரோகிணி தான்.. முத்து கொடுத்த டுவிஸ்ட்.. ஸ்ருதியால் வந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கோவிலில் முத்து குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்கு ஜீவா வந்திருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவா மாட்டாமல் தப்பித்து விட்டார்.
ஆனால் விஜயா ரோகிணியின் அப்பா ஜெயலில் இருந்து வெளியே வர வேண்டும் என்று ரோகிணியை கோவிலில் நேர்த்திகடன் செலுத்த வைத்து கொடுமைப்படுத்துகிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணிக்கு பட்டை போட்டு விட்ட விஜயா அவரை பிள்ளையார் சன்னதிக்கு அழைத்து சென்று சாமி கும்பிட வைத்து தோப்புக்கரணம் போட வைக்கிறார். அப்போது கோவிலுக்கு வரும் முத்து கோர்ட்டில் வாதாடாமல் இங்க வந்து பரிகாரம் பண்ணா பார்லர் அம்மாவின் அப்பா வெளியே வந்துடுவாரா? இதுல என்னையும் வர சொல்லி இருக்கீங்களே! நான் வரலன்னா சாமி மலேசியா சம்மந்தியை வெளியே விட மாட்டாரா? என்று கேட்க,
அதற்கு விஜயா, மீனா இது சாமி விஷயம். அவனை அமைதியா இருக்க சொல்லு என்று திட்டுகிறார். அடுத்ததாக ரோகிணி ஒரு தோப்புக்காரணம் போட்டுவிட்டு அவ்வளவுதானா? போலாமா? என்று கேட்க, அதற்கு விஜயா இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கு என்று அம்மன் சன்னதிக்கு கூட்டிட்டு போய் கையில் கற்பூரம் ஏற்றி சுற்ற வைக்க ரோகிணி வலியால் கதறுகிறார்.

அடுத்ததாக ரோகிணியை அங்கபிரதஷணம் செய்ய வைக்கிறார். மறுபக்கத்தில் காரில் இருக்கும் ஜீவா வெளியே வந்து நின்று கொண்டிருக்கும் போது மனோஜ்க்கு போன் வந்ததால் வெளியே வந்து கார் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க ஜீவா மனோஜை பார்த்து பயந்து போய் காருக்குள் முகத்தை மறைத்தபடி உட்கார்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் கோவிலில் முத்து மீனாவிடம் எங்க அம்மா உன்னை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு துரத்து வாங்கன்னு நெனச்சேன்.
ஆனால் இப்போ பார்லர் அம்மா வசமா மாட்டி இருக்கிற. இந்த கொடுமை தாங்காமல் அதுவே வீட்டை விட்டு ஓடிப் போயிரும் போல என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார். பிறகு வெளியே வந்த முத்து போன் பேசிக் கொண்டிருக்கும் மனோஜை காரை விட்டு விலகி நிற்க சொல்லி காரை எடுத்துக்கொண்டு கிளம்ப ஜீவா மனோஜ் கண்ணில் படாமல் தப்பிக்கிறார். அடுத்ததாக ரோகிணியை சாமி சன்னதிக்கு கூட்டிட்டு சென்று சாமி கும்பிட வைக்கின்றனர்.

அப்போது ஐயர் உங்க அப்பாவோட பெயர் என்ன என்று கேட்க ரோகிணி முழிக்கிறார். பிறகு "தனசேகர்" என்று சொல்கிறார். அதற்கு ஐயர் உங்க அப்பா ராசி மற்றும் நட்சத்திரம் கேட்க மேஷ ராசி, பரணி நட்சத்திரம் என்று ரோகிணி பொய் சொல்ல பிறகு மீனா அஸ்வினி நட்சத்திரம் இந்த மாதிரி தான் மூன்று நட்சத்திரம் வரும் என்று சொன்னதால் ரோகிணி, அஸ்வினி நட்சத்திரம் என்று சமாளிக்கிறார்.
அடுத்ததாக தன்னுடைய தோழி வித்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி புலம்புகிறார். சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வித்தியா இந்த விரதத்தை வைத்து உன் உடம்பையாவது குறைத்துக் கொள் என்று அட்வைஸ் கொடுக்க, தனக்கும் சிக்கன் வேண்டும் என்று ரோகிணி கேட்க வித்யா இது தெய்வ குத்தமாகிடும் என்று கொடுக்க மறுக்கிறார்.
பிறகு வீட்டிற்கு வந்த ரோகிணி கை கால் எல்லாம் வலிக்குது என்று டயர்டாக உட்கார்ந்திருக்க மனோஜ் கை கால் பிடித்து விட இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு விஜயா மனோஜை வெளியே துரத்துகிறார் அதோடு இன்னும் 48 நாட்களுக்கு ரோகிணி பக்கத்தில் நீ வரவே கூடாது என்று சொல்கிறார். அடுத்து ஸ்ருதி நான் சாப்பாடு ஆர்டர் செய்யப் போகிறேன் என்று சொல்ல, மீனா நான் நாளைக்கு உங்களுக்கு நான்வெஜ் செய்து தரேன் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா ரோகிணி விரதம் இருக்கும் போது இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார். வீட்டிற்கு வந்த முத்து ரோகிணியை கலாய்க்கிறார். அப்போது அண்ணாமலை ரோகிணிக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தியா என்று கேட்க விஜயா மீனாவை ரோகிணிக்கு பிடித்ததை சமைத்து கொடு என்று சொல்கிறார்.
அதற்கு முத்து அம்மா சொன்னதை அம்மாவே மறந்துட்டாங்க போல. அவங்களுக்கு தேவையானதை அவங்க தானே சமைத்து சாப்பிடணும் என்று ஞாபகப்படுத்த, அதற்கு விஜயா ஆமா நானும் மறந்துட்டேன். ரோகிணிக்கு உப்பு இல்லாமல் தான் சாப்பாடு போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications