சிறகடிக்க ஆசை சீரியல்:மனோஜ்க்கு நடந்த ஆக்சிடென்ட்..முத்துவிற்காக மனம் மாறும் மீனா.. விஜயாவின் பிளான்
சென்னை: மனோஜ்க்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று விஜயா அருணாச்சலத்திடம் கூறுகிறார்.
முத்து தனக்கு தரவேண்டிய பணத்தை தர வேண்டும் என்று மனோஜிடம் மிரட்டுகிறார்.
மனோஜ் திடீரென்று ஆட்டோ மீது மோதி ஆக்சிடெண்டில் சிக்குகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் பார்வதியுடன் விஜயா கோவிலுக்கு சென்றிருக்கும் நிலையில் அங்கு முத்து மனோஜை பாடாய் படுத்துகிறார் என புலம்புகிறார். பிறகு கோவிலில் அர்ச்சனை செய்த போது வீட்டில் உள்ள அனைவருடைய பெயரையும் சொல்லும் விஜயா முத்துவின் பெயரை மட்டும் சொல்லாமல் விட்டு விடுகிறார்.
அப்போது பார்வதி இன்னொருத்தன் பெயரை சொல்லவில்லையே என்று கேட்க, விஜயா எனக்கு தேவையானவர்கள் பெயரை நான் சொல்லியாச்சு என்று கூறுகிறார். அதே நேரத்தில் கோவிலுக்கு வந்த மீனா இதை கேட்டுவிட்டு பிறகு முத்துவின் பெயரில் அர்ச்சனை செய்து என்னுடைய வாழ்க்கையை நல்லபடியாக மாற்றிக் கொடு என்று கடவுளிடம் வேண்டுகிறார்.

அடுத்து மீனா வீட்டிற்கு வந்து பூ கட்டிக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் முத்து நானும் பூ கட்டுகிறேன் என சொல்லி மீனாவை பூக்கட்டி தர சொல்ல முயற்சி செய்கிறார், ஆனால் கட்ட முடியாமல் போய்விடுகிறது. பிறகு மீனா அர்ச்சனை செய்ததாக சொல்லி முத்துவுக்கு விபூதி வைத்துவிட்டு உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும் என கேட்க பசிக்கும்போது என்ன சாப்பாடு கிடைக்கிறதோ அதுதான் பிடிக்கும் என்று கூறுகிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த விஜயா மனோஜ்க்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டும் என அண்ணாமலையிடம் சொல்ல, முதலில் அவன் ஒரு நல்ல வேலைக்கு போகட்டும் அப்புறம் முத்துக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்கட்டும். அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம் என சொல்ல, விஜயா முத்துவிற்கு கல்யாணம் ஆகி ஜோடியாக இருக்கும்போது இவன் மட்டும் தனியாக இருந்தால் நல்லா இருக்குமா? என்று கல்யாணத்தை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார்.

அப்போது அங்கு வரும் முத்து இவனுக்கு கல்யாணம் பண்ணுங்க, காதுகுத்து பண்ணுங்க எனக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்து வைங்க என சொல்ல, விஜயா அதெல்லாம் அவன் பணம் கொடுத்து விடுவான். அவன் பெரிய படிப்பு எல்லாம் படிச்சிருக்கான். உன்னை விட நிறைய அவன் தான் சம்பாதிப்பான் என்று மனோஜ்க்கு ஆதரவாக பேசுகிறார்.
அதற்கு முத்து இவன் எல்லாம் ஒரு அறிவாளியா? ஒரு பொண்ணு ஈசியா ஏமாத்திட்டு பணத்தை சுருட்டிட்டு போய்ட்டா இவனை அறிவாளின்னு சொல்லாதீங்க, தலைக்கு மேலே என்ன இருக்கோ அதுதான் உள்ளேயும் இருக்கு என்று வெறுப்பேத்த, மனோஜ் போதும் நிறுத்துங்க நானே ஒரு பொண்ணை நான் உண்மையா காதலிச்சு ஏமாந்து போயிருக்கேன். என் வலி உங்க யாருக்கும் புரியாது என சொல்ல, முத்து ஒரு பொண்ணை நீ ஏமாத்திட்டு போனியே அந்த வலி உனக்கு புரியுதா? அப்பாவோட வலி உனக்கு புரியுதா? என்று கேள்வி மேல் கேட்க மனோஜ் கோபமாக வீட்டில் இருந்து வெளியே போகிறார்.

பிறகு வெளியே போய்க்கொண்டிருக்கும்போது மீனா காபி கொடுக்க மாட்டேன் என்று சொன்னது, முத்து வெறுப்பேற்றியது எல்லாத்தையும் நினைத்துக் கொண்டே செல்லும்போது ஒரு ஆட்டோவில் அடிபட்டு கீழே விழுந்து விடுகிறார். அப்போது அந்த வழியாக வந்த ரோகினி மனோஜ்க்கு உதவ ஓடி வருகிறார். காலில் ரத்தத்தை பார்த்த மனோஜ் மயங்கி விழுந்து விட ரோகிணி அவரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். அதே நேரத்தில் மீனா முத்துவுக்காக துணி அயன் செய்து சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications