ரோகிணியிடம் ஏமாற்றும் மனோஜ்.. முத்து கொடுத்த ஷாக்.. கோபத்தைக் காட்டிய விஜயா.. பரபரப்பான தருணம்
சென்னை: காலில் அடிபட்டிருக்கும் மனோஜ் வீட்டிற்கு போகாததால் விஜயா தேடிக் கொண்டிருக்கிறார்.
மனோஜ் தனக்கு யாரும் இல்லை என்னை யாரும் தேட மாட்டார்கள் என்று ரோகிணியிடம் பொய் கூறிக் கொண்டிருக்கிறார்.
முத்து மேல் இருக்கும் கோபத்தை விஜயா மீனாவிடம் காட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ஏப்ரல் 28ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மீனா முத்துவுக்காக துணியை அயன் செய்து கொடுக்க, முத்து வழக்கம் போல கோபப்பட்டு என்னை நீ மாற்ற நினைக்காத என கசங்கி போன சட்டையை போட்டுக் கொண்டு வேலைக்கு கிளம்புகிறார்.
அதே நேரத்தில் மனோஜ் ஹாஸ்பிடலில் இருந்து கண்விழித்து பார்த்ததும் நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டு ரத்தத்தை பார்த்து பயப்படுகிறார். பிறகு டாக்டர்கள் கால் சுண்டு விரல் மீது ஆட்டோ டயர் ஏறி இறங்கியதால் சின்ன ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிகின்றனர். ரோகினி உங்க வீட்ல இருக்கவங்க யாரையாவது போன் பண்ணி வர சொல்லவா என சொல்ல மனோஜ் எனக்குன்னு யாரும் இல்ல, நான் வராட்டி கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க, செத்தா கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க என்று நாடகம் போடுகிறார்.

பிறகு ரோகிணி நான் உங்களோடு இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இந்த பக்கம் விஜயா மனோஜ் வரலையே என்று பதறியபடியே தேடிக் கொண்டிருக்க, அப்போது மீனா பால் கொண்டு வந்து கொடுக்க நான் என் பிள்ளையை காணாமல் கவலையா இருக்கேன் என்று விஜயா திட்டுகிறார். அங்கு வரும் முத்து வேனும்னா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கவா? இந்த மாதிரி மனோஜ் 25 லட்சத்தோட ஓடி போனான். திரும்ப வீட்டுக்கு வந்தான். இப்ப திரும்பி காணாமல் போயிட்டான். கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லலாம் என்று பதிலடி கொடுக்கிறார்.
பணத்தை எல்லாம் யார்கிட்டயும் ஏமாறல எங்கயாவது கொடுத்து வச்சிருப்பான். திரும்பவும் இந்த வீட்டுக்குள் வந்து சேர்ந்திடலாம் என்று நினைத்து தான் வந்திருப்பான்.. அது முடியலன்னு தெரிஞ்சதும் மீண்டும் ஓடிப்போயிட்டான். திரும்ப இனி வரமாட்டான் என்று முத்து சொல்ல அதைக் கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
அப்போது மீனா இந்த பாலை குடிங்க நீங்க சரியாக சாப்பிடல என சொல்ல, விஜயா கோபப்பட்டு பாலை தட்டி விட அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். முத்து அவங்களுக்கு என் மேல இருக்கிற கோவத்த அவ மேல காட்றாங்க. நீ இவங்களுக்கு எதுக்கு வேலை செய்ற உள்ள போ என்று மீனாவை அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் இவ்வளவு அழகா இருக்கீங்க உங்களுக்கு யாரும் ப்ரொபோஸ் பண்ணலையா என்று கேட்க, ரோகினி அதுக்காக நான் யாருக்கும் இடம் கொடுக்கல என்று சொல்கிறார். பிறகு ரோகினிக்கு ஒருவர் போன் செய்து வீட்டுக்கு வா என சொல்லி என்ன டிரஸ் போட்டுட்டு இருக்க என தவறாக பேச, ரோகிணி அந்த நபரை திட்டி விட்டு ரெஸ்ட் ரூம் செல்ல மீண்டும் அந்த ஆள் போன் பண்ண மனோஜ் நான் ரோகிணியின் ஹஸ்பண்ட் என சொல்லி அவரை திட்டி போனை வைக்கிறார்,
பிறகு ரோகிணியிடம் ஹஸ்பண்ட் என சொன்னதற்காக மன்னிப்பு கேட்க, அவர் அதெல்லாம் பிரச்சனை இல்லை. என்னை காப்பாற்றியதற்காக தேங்க்ஸ் என்று சொல்ல, மனோஜ் தனக்கு உதவியதற்கு தேங்க்ஸ் என்று சொல்கிறார் பிறகு ரோகிணி உங்களுக்கு ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன் என்று வெளியே கிளம்புகிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications