சிறகடிக்க ஆசை: மீனாவை ஜெயிக்க சிந்தாமணி போட்ட பிளான்.. ஆப்பு வைக்கும் ஸ்ருதி! குடும்பமே மாறிட்டாங்க! சூப்பர் சீன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோடில், தேர்தலில் போட்டியிடும் மீனா மற்றும் சிந்தாமணி இருவருக்கும் இடையே அதிகமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் மீனாவுக்கு சப்போர்ட் செய்த பலர் சிந்தாமணி பக்கம் போயிருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத சம்பவமும் நடைபெறுகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் சிந்தாமணியை எதிர்த்து போட்டியிடும் மீனா, பிரச்சாரத்திற்காக நோட்டீஸ் அடித்து அதை பூ வியாபாரிகள் எல்லோரிடமும் நேரில் சென்று கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி தன்னுடைய காரில் வந்து இறங்குகிறார். அவர் தன்னுடைய ஆட்கள் மூலம் பெட்டி பெட்டியாக துணிகளை எடுத்து வந்து பூ வியாபாரிகளுக்கு கொடுக்கிறார். அவர்களும் இலவசத்தை பார்த்த உடனே, மீனா கொடுத்த நோட்டீசை கீழே போட்டுவிட்டு சிந்தாமணியிடம் சென்றுவிடுகிறார்கள்.
வருத்தத்தில் மீனா
இதைப்பார்த்த மீனா மிகவும் கவலைப்படுகிறார். என்னடா நம்ம இவ்வளவு பாடுபட்டு நோட்டீஸ் கொடுத்தால், அதைப் படிக்காமல் இவங்க இப்படி இலவசத்துக்காக அலையுறாங்களே என்று வருத்தப்படுகிறார். இதையடுத்து ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் மீனா, அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசிக்கிறார். நம்மளும் மக்களுக்கு கொடுக்கணும், ஆனால் இதுபோன்ற இலவசங்கள் இல்லாமல், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவற்றை கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அப்போது அங்கு இருக்கும் ஸ்வேதா ஒரு ஐடியா சொல்கிறார். அதேபோல் ஸ்ருதியும் தன் பங்கிற்கு ஒரு ஐடியா தருகிறார்.
ஸ்ருதி கொடுத்த அட்வைஸ்
நான் எங்க வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கெல்லாம் டியூசன் எடுக்கிறேன், உங்க சங்கத்தில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கும் டியூசன் ஃப்ரீயாவே எடுக்குறேன் என்று ஸ்வேதா வாக்குறுதி அளிக்கிறார். அதேபோல் ஸ்ருதியும், நான் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்துவேன், உங்க சங்கத்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை கிடைக்க உதவுவேன் என சொல்கிறார்.
மீனாவுக்கு கிடைத்த சப்போர்ட்
இதைப் போலவே சங்கத்தினரிடம் சொல்லுங்க, அப்போ தான் உங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று ரவி மோட்டிவேஷன் செய்கிறார். இந்த ஐடியா மீனாவுக்கு பிடித்து, அவர் மீண்டும் சங்கத்தினரிடம் சென்று, தான் பதவிக்கு வந்தால் என்ன செய்யப் போகிறேன் என்று விளக்கமாக கூறி பிரச்சாரம் செய்கிறார். அவரின் வாக்குறுதிகளை கேட்டதும் பலர் மீனாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பிக்கிறார்கள்.
சிந்தாமணி மகள் கொடுத்த வார்னிங்
இந்த விஷயம் சிந்தாமணிக்கு தெரியவருகிறது. உடனே அவர் பணத்தை எடுத்து தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து, அந்த மீனா இந்த எலெக்ஷன்ல நிற்கக் கூடாது என்று சொல்லுகிறார். அவர் மீனாவுக்கு எதிராக சதி செய்யும் விஷயத்தை அவருடைய மகள் ரேகா பார்த்துவிடுகிறார். அதை பார்த்து ரேகா, சிந்தாமணியிடம் சென்று சண்டை போடுகிறார்.
நீ இந்த எலெக்ஷன்ல நிற்கக் கூடாது என்று ரேகா சொன்னாலும், சிந்தாமணி அதை கேட்காமல், இது என்னோட கெளரவ பிரச்சனை, நான் கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொல்கிறார். அதற்கு ரேகா, உன்னையெல்லாம் திருத்தவே முடியாது, நீ இந்த எலெக்ஷன்ல ஜெயிக்க மாட்ட என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
மீனாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் சிந்தாமணிக்கு பயம் ஏற்படுகிறது. அதனால் மீனாவை இந்த தேர்தலில் நிற்கவிடக் கூடாது என்று அவர் திட்டம் போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications