கர்ப்பம் விஷயத்தில் ரோகிணி சொன்ன வார்த்தை.. விஜயாவுக்கு ஸ்ருதி கொடுத்த வார்னிங்.. உண்மை உடைந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ரோகிணியிடம் விஜயா உங்க அப்பா இன்னும் வரவில்லையா? என்று மிரட்ட அதற்கு ரோகிணி வாமிட்டிங் எடுத்ததால் ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக விஜயா குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்லி அதை செக் பண்ணுவதற்காக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் மருத்துவமனைக்கு போன ரோகிணி என்ன பதில் சொன்னார் என்பது பற்றியும் விஜயா ஸ்ருதிக்கு போன் போட்டு மீண்டும் வீட்டிற்கு கூப்பிட அதற்கு ஸ்ருதி என்ன பதில் சொன்னார் என்பதையும் பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணியும் மனோஜும் ஆட்டோவில் வந்து இறங்குகின்றனர். அங்கு வித்தியா காத்திருக்கிறார். அதற்கு மனோஜ் இங்கு எதுக்கு இறங்கினா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது வித்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறார். அதோடு வேலை தேடி அதுல பிரமோஷன் வாங்குவீங்கன்னு பார்த்தால் வேலைக்கு போகாமல் அப்போ வா ப்ரமோஷன் வாங்கிட்டீங்க என்று வித்யா மனோஜை கலாய்க்கிறார்.
பிறகு மனோஜ், ரோகிணியை தனியா கூட்டிட்டு போய் ரோகிணி கன்ஃபார்மா நமக்கு குழந்தை வர போகுதா என்று கேட்க அதற்கு ரோகிணி ஹாஸ்பிடல் போனா தானே தெரியும் என்று சொல்ல, அதற்கு மனோஜ் ஒருவேளை கன்ஃபார்ம்னு சொல்லிட்டாங்க நாம என்ன பண்ண என்று கேட்க, அதற்கு ரோகிணி நீ என்ன பண்ணனும்னு நெனச்சிட்டு இருக்க என்று கேட்க அதற்கு மனோஜ் நாம இப்போதைக்கு குழந்தை வேண்டாம் இன்னும் ஒரு வருஷம் கழித்து பெத்துக்கலாம்னு தானே இருந்தோம் அதுக்குள்ள.. என்று இழுக்க,

அதற்கு ரோகிணி நீ இன்னும் கன்ஃபார்ம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி எல்லாம் பேசிட்டு இருக்குற? நீ என் கூட ஹாஸ்பிடலுக்கு வந்தா சரிப்பட்டு வராது. நீ இன்டர்வியூக்கு போ என்று அனுப்பி வைத்து விட்டு நான் வித்யாவோடு ஹாஸ்பிடல் போகிறேன் என்று கிளம்பி போகிறார். பிறகு வித்யாவிடம் நான் கர்ப்பமாக எல்லாம் இல்ல அவங்க எங்க அப்பாவை பத்தி கேட்டுட்டு இருந்ததுனால தான் அவங்ககிட்ட அப்படி நடிச்சேன் என்று உண்மையை உடைக்கிறார்.
அதே நேரத்தில் வீட்டில் விஜயா ரோகிணி கர்ப்பமாய் இருக்கிறார் என்று சந்தோசத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருக்கிறார். அதோடு ரோகிணி முகத்தை பார்க்கும்போது எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை அதை டாக்டர் சொல்லட்டும். அதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து பார்வதி மாங்காயோடு அங்கு வர விஜயா சந்தோஷத்தில் மீனாவை கூப்பிட்டு மாங்காயை எடுத்துட்டு போக சொல்லிக்கொண்டே மாங்காய் இருந்த பையை தூக்கும்போது அது கிழிந்து மாங்காய் எல்லாம் கீழே கொட்டி விடுகிறது.

அந்த நேரத்தில் அங்கே வந்த மீனா மாங்காயில் கால் வைத்து வலுக்கி கொண்டு போக முத்து தாங்கி பிடிக்கிறார். இதை பார்த்து விஜயா காண்டாகிறார். பிறகு ரோகிணியும், மனோஜும் வீட்டிற்கு வர விஜயா டாக்டர் என்ன சொன்னாங்க? கன்ஃபார்ம் தானே என்று கேட்கிறார். ஆனால் ரோகிணி டல்லாவே இருக்க, என்னமா சக்தி இல்லைன்னு சொல்லிட்டாங்களா? குழந்தை பிறக்குறதுக்குள்ள நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கலாம் என்று சொல்ல அதற்கு ரோகிணி கர்ப்பம் இல்லை என்று சொல்ல அதைக் கேட்டு விஜயா ஏமாற்றம் அடைகிறார்.
ஆனால் மனோஜ் சிரித்துக்கொண்டே சந்தோஷமாக நிற்கிறார். மீனா ரோகிணியுடன் நான் கூட ரொம்ப சந்தோசமா எதிர்பார்த்து இருந்தேன் என்று ரோகிணிக்கு ஆறுதல் சொல்ல அதற்கு விஜயா எனக்கு தெரியும் நீ என்ன வேண்டிருப்பேன்னு என்று கோபப்பட, அதற்கு அண்ணாமலை தேவை இல்லாம அவசரப்பட்டு எல்லாத்தையும் பேசுனது நீ தான் என்று திட்டுகிறார். அப்போது மனோஜ் சந்தோசமாய் இருப்பதைப் பற்றி முத்து கோர்த்து விட அதற்கு மனோஜ் எனக்கு கவலை தான்.
ஆனா இன்னைக்கு இல்லன்னா இன்னொரு நாள் நடக்க போகுது என்று ரோகிணியை கூப்பிட்டு ரூமுக்கு போகி விடுகிறார். பிறகு விஜயா எனக்கு ரோகிணி கர்ப்பம் ஆகாதது கூட பிரச்சனை இல்ல, ஆனா அந்த மீனா முதலில் கர்ப்பம் ஆகிடவே கூடாது ஸ்ருதி கர்ப்பமானால் கூட பரவாயில்லை என்று சொல்லிக்கொண்டு ஸ்ருதிக்கு போன் போட்டு உன்னை பார்க்கணும் போல ஞாபகமா இருக்கு என்று சொல்ல அதற்கு ஸ்ருதி தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் எடுத்த போட்டோவை அனுப்பி வச்சு பார்த்துக்கோங்க என்று சொல்கிறார்.

அதோடு முத்து பண்ணுனது தப்பு தான். அவன் பண்ணுனதை பெருசா எடுத்துக்காத நீ வீட்டுக்கு வாமா என்று விஜயா கூப்பிட, அதற்கு ஸ்ருதி என் அப்பாவை அடிச்சவன் இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications