சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்ன வார்த்தை.. தலைகுனிந்த ரோகிணி.. மீனா, முத்துவின் காதல் ஜெயித்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பெஸ்ட் கப்பில்ஸ் போட்டியில் கலந்து கொண்ட ரோகிணி, மனோஜ் சொன்ன வார்த்தையால் தலைகுனிக்கிறார். அதுபோல அனைவரும் முன்பும் ரவிக்கு ஸ்ருதி அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் சில சுவாரசியமான காட்சிகளும் இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பல பஞ்சாயத்து வீட்டில் இருந்தாலும் அண்ணாமலையையும் மூன்று மகன்களும் தங்களுடைய மனைவியோடு சேர்ந்து பெஸ்ட் கப்பல்ஸ் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே நேற்று வெளியான ப்ரோமோவில் ரோகிணியிடம் அங்கிருந்த நடுவர்கள் கேள்வி கேட்கும் போது ரோகிணி நான் அம்பதாயிரம் சம்பாதிக்கிறேன் ஆனால் வீட்டில் 20,000 தான் கொடுக்கிறேன் 30000 எனக்கு செலவுக்கு எடுத்துக் கொள்கிறேன். நான் எனக்கு பார்லர் டெவலப்மெண்டுக்காக கொஞ்சம் செலவு செய்வேன், பிறகு என்னுடைய பர்சனல் செலவிற்கும் செலவு செய்வேன். அதோடு பிளாக் மெயில் செய்தவர்களுக்கும் பணம் கொடுக்கணுமே என்று சொல்ல அதை கேட்டு நடுவர்களும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
அது போல முத்துவின் மீனாவும் யாரு பிளாக்மெயில் பண்றாங்க என்று அதிர்ச்சியில் இருந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் சிறந்த ஜோடி யாரு என்ற காம்பெடிஷன் நடக்கிறது. அதில் எல்லா பெண்களும் அவர்களுக்கு தெரிந்த தொழிலை அங்கு மேடையில் செய்கின்றனர். அப்போது மீனா கண்ணை கட்டிக் கொண்டே பூக்களை கட்டுகிறார். ரோகினி மேக்கப் செய்து கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த ரவுண்டு நடைபெறுகிறது அதில் ரோகிணியும் மனோஜூம் முதலில் கலந்து கொள்கின்றனர். அப்போது மனோஜ் ரோகிணிடம் நான் என்னுடைய மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறச்சதே கிடையாது என்று சொல்ல, அதைக் கேட்டு ரோகிணி தலைகுனிகிறார். அதைத் தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி கலந்து கொள்கின்றனர்.
அதில் ஸ்ருதியின் கைகளை பிடித்தபடி ரவி எங்க அப்பாவுக்கு நாங்க மூணு பசங்க அதே மாதிரி எங்களுக்கு மூணு குழந்தைகள் பிறக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்று சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி மேடையில் எழுந்து நிற்கிறார். ஆனால் என்ன சொல்லி இருக்கிறார் என்பது ப்ரோமோவில் காட்ட வில்லை. இவர்களை தொடர்ந்து முத்துவும் மீனாவும் அந்த ரவுண்டில் கலந்து கொள்கின்றனர்.
அப்போது மீனா முத்துவின் கைகளைப் பிடித்து, என் அப்பா என்ன எப்படி பார்த்துக்கிட்டார்களோ அதே மாதிரி தான் இவரும் என்னை பாத்துக்கிறாரு. எனக்கு வேற எதுவுமே வேண்டாம் எனக்கு புருஷனாக இவர் மட்டும் இருந்தால் போதும் வேறு எதுவும் வேண்டாம் என்று சொல்ல, அங்கிருந்த எல்லோரும் கைதட்டுகின்றனர். இந்த கலகலப்பான ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கும் நிலையில் அடுத்த வாரம் பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications