சிறகடிக்க ஆசை: போட்டியில் ஜெயித்த முத்து, மீனா.. விஜயா சொன்ன வார்த்தை.. அசிங்கப்பட்ட மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். கப்பல்ஸ் ஜோடி போட்டியில் அண்ணாமலை மற்றும் விஜயாவின் மகன்கள் மருமகள்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் முத்து, மீனாவும் ஜெயித்திருக்கின்றனர். நிகழ்ச்சியில் மனோஜ் மற்றும் ரோகிணி அசிங்கப்பட்டு வந்திருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவும் முத்துவும் தங்களுடைய வருமானம் மற்றும் செலவுகள் பற்றி பேசியதை கேட்டு எல்லோரும் கைதட்ட, அதைக் கேட்டு மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அடுத்த சுற்று போட்டிகள் நடக்கிறது. அதில் ஆண்களுக்கு மட்டும் கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒரு இடத்தில் உங்க அம்மாவும் மனைவியும் பிரச்சனையில் இருக்கிறாங்க.

அப்போ நீங்க யாரை காப்பாத்துவீங்க என்று கேட்க, ரவி நான் என்னுடைய அம்மாவை காப்பாற்றுவேன் என்று சொல்ல, மனோஜ் நான் என்னுடைய மனைவியை தான் காப்பாற்றுவேன் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து பேசிய முத்து என்னுடைய மனைவிக்கு நல்லாவே பைக் ஓட்ட தெரியும், அவளிடம் பைக்கை கொடுத்து என்னுடைய அம்மாவை காப்பாற்ற சொல்லி அனுப்பிவிட்டு அந்த இடத்தில் காத்திருப்பேன். என்னுடைய மனைவி என்னுடைய அம்மாவை அங்க விட்டுட்டு என்னை கூப்பிட வருவா என அந்த நம்பிக்கை இருக்கு என்று சொல்ல எல்லோரும் மீண்டும் கைதட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து மூன்றாவது சுற்றிற்கான கேள்வி கேட்கப்படுகிறது. அதில் கணவன் மற்றும் மனைவி இருவரும் வாழ்க்கைக்கு எது அத்தியாவசியம் என்பதை ஆலோசித்து வந்து சொல்லுங்கள் என்று சொல்கின்றனர். அப்போது எல்லோரும் தனி அறையில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் ரோகிணியிடம் முத்துவுக்கு அம்மாவிடம் பாசம் கிடையாது அவன் எப்படி அடிச்சு விட்டானோ அதுபோல நாமும் நம்ம சுற்றி இருக்கிறவங்க நல்லா இருந்தா தான் நாம நல்லா இருக்க முடியும் என்று ஏதாவது அடிச்சு விடுவோம் என்று சொல்கின்றனர்.

முத்துவும் மீனாவும் நம்ம மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அங்க போய் பொய் சொல்லலாம் என்று சொல்லிவிட்டு வருகின்றனர். பிறகு எல்லோரும் மேடைக்கு வந்து தங்களுடைய கருத்துக்களை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரவியும் ஸ்ருதியும் நாங்க பெருசா எதையும் யோசிக்க மாட்டோம். அன்னைக்கு என்ஜாய் பண்ணனும் அவ்வளவுதான் என்று சொல்ல, அதைத்தொடர்ந்து பேசிய மனோஜ் மற்றும் ரோகிணி நம்ம கூட இருக்கிறவங்க எல்லாவற்றையும் நல்லா பாத்துகிட்டு அன்னைக்கு நாள் முழுக்க நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
அதுதான் நமக்கு உண்மையான சேட்டிஸ்பேசன் என்று சொல்கிறார்கள். அடுத்ததாக முத்துவும் மீனாவும் பேசுகின்றனர். அப்போது முத்து சாப்பாடை மட்டும்தான் ஒரு மனிதன் வயிறு நிறைந்ததும் போதும் என்று சொல்லுவான். சின்ன சின்ன விஷயங்கள் தான் ஒரு மனிதனை சந்தோஷமாக வைத்து இருக்கிறது. என்று சொல்கிறார்.
அடுத்ததாக கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் யார் முதலில் சாரி சொல்லுவீங்க என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதில் எல்லோரும் ஒவ்வொரு பதிலை சொல்ல மனோஜ் எனக்கும் ரோகிணிக்கும் சண்டையே வந்தது கிடையாது நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து விடுவோம் என்று சொல்கின்றனர். முத்துவும் மீனாவும் எங்களுக்குள் சில நேரங்களில் சண்டை வரும், சண்டை வந்தால் தான் கணவன் மனைவிக்குள் அன்பு வருகிறது. பிறகு இருவரும் புரிந்து கொண்டால் நாங்கள் மன்னிப்பு கேட்டு விடுவோம் என்று சொல்கின்றனர்.
அதைத் தொடர்ந்து நடுவர்கள் யார் இதில் சிறந்த ஜோடி என்பது அறிவிப்பதற்காக ரவி, மனோஜ், முத்து ஜோடியை மேடையில் நிற்க வைத்து இருக்கின்றனர். அதில் மனோஜ் ஜோடி வேண்டும் என்று ஜெய்ப்பதற்காக பொய் சொல்கிறார்கள் என்று சொன்னதும் மனோஜ் நீங்க போய் ஜட்ஜ்மெண்ட் சொல்றீங்க என்று கோபப்பட அப்படி என்றால் இதை ப்ரூப் பண்ணுவதற்கு இதை கட்டாயம் பண்ணி தான் ஆக வேண்டும் என்று மனோஜ் ரோகினி பேசியதை குறும்படமாக போட்டு காட்டுகின்றனர்.
அடுத்தவர்களுக்கு உதவி பண்ணனும் என்று பொய் சொல்ல பிளான் போட்டது எல்லார் முன்னிலையிலும் போட்டு உடைக்கப்படுகிறது. இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி அவமானத்தில் இருக்கின்றனர். அதற்குப் பிறகு யார் ஜெயித்தது என்று அறிவிக்கப்படுகிறது. அதில் முத்து மீனா பெயரை சொன்னதும் எல்லோரும் கைதட்டுகின்றனர். மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார். பிறகு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு மனோஜும் ரோகிணியும் முதலில் வீட்டிற்கு வர விஜயா அவர்களுக்காக ஆரத்தி கரைந்து வைத்து ரெடியாக இருக்கிறார்.
ஆனால் ரோகிணி நாங்க ஜெயிக்கவில்லை என்று சொல்ல, அடுத்ததாக ஸ்ருதியும் ரவியும் வர அவர்கள் தான் ஜெயித்ததாக விஜயா பெருமைப்பட அவர்களும் நாங்கள் ஜெயிக்கவில்லை என்று கூறுகின்றனர். பிறகு முத்துவும் மீனாவும் மேளதாளத்துடன் வீட்டிற்கு வருகின்றனர். இவர்கள் ஜெயித்ததை பார்த்ததும் விஜயா அதிர்ச்சையாகி நிற்கிறார். மீனாவின் அம்மாவும் தங்கையும் அங்கு வந்திருக்கின்றனர். முத்துவின் நண்பர் செல்வம் மீனாவிற்கும் முத்து விற்கும் மாலை கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications