சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு ஏற்கனவே குழந்தை.. மீனாவுக்கு தெரிய வந்த உண்மை.. அதிர்ச்சியில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது, இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்கிறார் என்ற உண்மை மீனாவிற்கு தெரிய வந்திருக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜ் கட்டிலில் கால் இடித்துக் கொண்டு வலியில் கத்த, முத்து இன்னொரு காலையும் மிதித்து விடுகிறார். அதனால் விஜயா இந்த கட்டில் இங்க இருக்கக் கூடாது என்று பிரச்சனை செய்ய, அதற்கு முத்து இங்கே போடக்கூடாதுன்னா டைனிங் ஹாலில் போட்டுக்கவா என்று நக்கல் அடிக்கிறார். பிறகு பார்வதி இதுக்கு மேல நான் இங்க இருந்தா என்னையும் சேர்த்து திட்டுவான் வா போயிரலாம் என்று விஜயாவை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.

மறுபக்கத்தில் மீனா பூ கட்டும் தன்னுடைய தோழிகளிடம் முத்து மனம் மாறி பேசிய விஷயத்தை பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். அந்த நேரத்தில் சீதா ஐந்து முழம் பூவை நான் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டுவா அக்கா என்று சொல்ல, அங்கு சென்ற மீனா என்ன விஷயம் என்று கேட்க, அதற்கு இனிமே நாங்க வாங்க போற பூ ஆர்டர் எல்லாம் உன்கிட்ட தான் கொடுக்கப் போறோம் என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். அதோடு இனிமே நீ வீட்டுக்கு காசு தர வேண்டாம் என்று சீதா சொன்னதும் மீனா கண் கலங்குகிறார்.
அந்த நேரத்தில் ஹாஸ்பிடலுக்கு ரோகிணி வர அதை மீனாவும் ரோகிணியும் பார்த்து விடுகின்றனர். ரோகிணி எதற்காக வந்திருக்காங்க என்று கேளு என்று சீதா சொல்ல மீனா வேண்டாம் ஒருமுறை நான் பட்ட பாடு போதும். இனி இவங்களை பற்றி நான் எதுவும் பேச போறது கிடையாது என்று சொல்லி விடுகிறார். அதற்கு சீதா நான் போய் விசாரிக்கிறேன் என்று அங்கு ரிசப்ஷனில் இருந்தவர்களிடம் ரோகிணி எதற்காக ஹாஸ்பிடல் வந்திருக்காங்க என்று கேட்கிறார்.

அவர்கள் ரோகிணி இரண்டாவது குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுக்க வந்து இருக்காங்க என்று சொல்ல, அதைக்கேட்ட சீதா அதிர்ச்சி அடைகிறார். மீனாவிடம் சீதா இந்த விஷயத்தை சொன்னதும் மீனாவும் அதிர்ச்சியாகி விடுகிறார். பிறகு சீதா நான் நர்சிடம் சென்று விசாரிக்கவா? என்று கேட்க, அதற்கு மீனா வேண்டாம் இதற்கு மேல் இதை பற்றி யாரிடமும் கேட்காத என்று சொல்லி விடுகிறார்.
பிறகு மீனா குழப்பத்தோடு வீட்டிற்கு வர அந்த நேரத்தில் முத்து அவசரமாக வீட்டில் இருந்து காரில் கிளம்புகிறார். அப்போது சவாரிக்கு கால் செய்தவர்கள் பிரசவத்திற்கு என்று பேசிக்கொண்டு இருக்க அதை கேட்ட மீனா இரண்டாவது பிரசவமா? அவங்களுக்கு எப்போ முதல் குழந்தை பிறந்திருக்கும் என்று முத்துவிடம் கேட்க முத்து உனக்கு என்ன ஆச்சு என்று திட்டி விட்டு கிளம்பி போகிறார்.
பிறகு அதே குழப்பத்தோடு வீட்டிற்கு வந்த மீனா நடவடிக்கையை பார்த்து விஜயாவும் மீனாவை திட்ட மீனா குழப்பத்தோடு இருக்கிறார். அந்த நேரத்தில் டிவியில் ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்க அதை அதிர்ச்சியாக மீனா பார்த்துக் கொண்டு இருக்கிறார். அப்போது ரோகிணியும் மனோஜும் வீட்டிற்குள் சந்தோசமாக ஸ்வீட்டோடு வருகின்றனர். விஜயாவிடம் ஸ்வீட்டை கொடுக்க விஜயா எதுவும் மகிழ்ச்சியான செய்தியா? என்று கேட்கிறார்.

அதற்கு மனோஜ் ஆமா மகிழ்ச்சி ஆன செய்தி தான் என்று, தன்னுடைய ஷோரூமில் அதிகமான பொருட்கள் விற்பனையானதாக சொல்ல விஜயா இவ்வளவுதானா என்று கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி ஆமாம் இது பெரிய சந்தோஷமான விஷயம் தான். நான் மனோஜ் சேல்ஸ் பண்ணுன கம்பெனியை பற்றி விசாரிச்சுட்டேன். அது நல்ல கம்பெனி தான் என்று சொல்லிக் கொண்டிருக்க நான் கூட நீ கர்ப்பமாக இருக்கேன்னு சொல்ல போறியோனு சந்தோஷப்பட்டுட்டேன் என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications