சிறகடிக்க ஆசை: ரோகிணி மகனை பற்றி வீட்டில் பேசிய முத்து.. மீனாவுக்கு இந்த அவமானம் தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகிணியின் மகனை தத்தெடுப்பது பற்றி முத்துவும் மீனாவும் முக்கிய முடிவு எடுத்து இருக்கின்றனர். அதே நேரத்தில் ரோகிணி தன்னுடைய வீட்டிற்கு முத்துவும் மீனாவும் வரக்கூடாது என்று அம்மாவிடம் மிரட்டி இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி அம்மாவை தனியாக அழைத்து சென்ற முத்துவும் மீனாவும் க்ரிஷ் பற்றி விசாரிக்க அவர் உண்மையை சொல்கிறார். அதனால் கோபமான முத்து உங்க பெண்ணிடம் பேச வேண்டும் என்று கேட்க ரோகிணியின் அம்மா சமாளித்து விடுகிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டுகின்றனர். ஆனால் க்ரிஷ் ரோகிணியை பார்க்காமல் வருத்தப்படுகிறார்.

முத்து க்ரிஷை சிரிக்க வைக்கிறார். அப்போது ரோகிணி தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு அவர்களை எப்படியாவது இங்கிருந்து வெளியே அனுப்பிவிடு என்று திட்டுகிறார். உடனே அவரும் முத்துவிடமும் மீனாவிடமும் சமாளித்து அவர்களை வெளியே அனுப்பி வைக்கிறார். பிறகு வீட்டிற்குள் வந்த ரோகிணி தன்னுடைய மகனோடு பிறந்தநாள் கேக் வெட்டுகிறார். ஆனாலும் அம்மாவை கூப்பிட்டு முத்துவும் மீனாவும் இங்கே வரக்கூடாது என்று திட்டுகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். முத்துவும் மீனாவும் காரில் வரும்போது க்ரிஷை நினைத்து வருத்தப்பட்டு கொண்டே வருகின்றனர். அப்போது மீனா க்ரிஷையை தத்தெடுக்கலாம் என்று சொல்ல, முத்து நான் மனசில் நினைத்ததை என் பொண்டாட்டி சொல்லிட்டா என்று சொல்ல குடும்பத்தார்கள் இது பற்றி என்ன சொல்வார்கள் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

சிறகடிக்க ஆசையில் ரோகிணியின் மகன் பற்றிய உண்மை உடைந்தது.. மீனா எடுத்த முடிவு
பிறகு மீனா முத்துவை ஒரு கோயிலுக்கு கூட்டிட்டு போயி அங்கு க்ரிஷை தத்து எடுக்கலாமா? வேண்டாமா? என்று இரண்டு பேப்பரில் எழுதி போட்டு சாமி முன்பு வைத்து பார்க்கிறார். அதில் வேண்டாம் என்று வருகிறது. அதை பார்த்து முத்து இதை எல்லாம் நம்ப வேண்டாம் என்று மீனாவை வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றார். அதைத்தொடர்ந்து மறுபக்கத்தில் விஜயா தொடங்கிய டான்ஸ் கிளாஸில் சேர்வதற்கு அதிகமான நபர்கள் வந்திருக்கின்றனர்.

அதை பார்த்து விஜயா சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் டான்ஸ் கிளாஸ்க்கு ஒரு பணக்கார வீட்டு பொண்ணு வருகின்றார். அவரைத் தொடர்ந்து அவருடைய காதலரும் வருகிறார். இனி இவர்களால்தான் விஜயாவிற்கு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் க்ரிஷ் பற்றி வீட்டில் பேசி இருக்கிறார். அதற்கு குடும்பத்தினர் என்ன ரியாக்ஷன் கொடுத்தார்கள் என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications