சிறகடிக்க ஆசையில் ரோகிணியின் மகன் பற்றிய உண்மை உடைந்தது.. மீனா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் க்ரிஷ் பிறந்தநாளுக்கு ரோகிணிக்கு வந்திருக்கும் நிலையில் அதே இடத்திற்கு முத்துவும் மீனாவும் வந்திருக்கின்றனர். அவர்களிடம் கிரிஷ் பற்றிய உண்மைகளை ரோகிணியின் அம்மா சொல்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து, மீனாவிற்கு ஒரு புடவையை பரிசு கொடுத்திருந்த நிலையில் இன்னொரு பார்சல் இருக்க, அதை மீனா பிரித்துப் பார்க்கப் போகும்போது இது ஒரு சின்ன பையனுக்கு வாங்கி இருக்கிறேன் என்று சொல்ல நமக்கு தான் பையனே இல்லையே அப்புறம் எதற்கு என்று மீனா கேட்க, இல்ல இந்த டிரஸ்ஸை பார்த்தேன். அழகா இருந்தது அதனால நான் இதை கிரிஷ்க்கு வாங்கினேன். இதை போய் கொடுத்துட்டு வரலாம் என்று சொல்ல மீனாவும் சரி என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த கட்டத்தில் ரவி ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு கோபமாக வரும் ஸ்ருதியின் அம்மா நீங்க ரெஸ்டாரன்ட் திறந்த பிறகு தான் குழந்தை விஷயத்தில் முடிவு எடுப்பேன் என்று சொல்லி இருக்கீங்களா? என்று கேட்க, அதற்கு ரவி நான் ரெஸ்டாரண்ட் திறந்த பிறகு என்னுடைய வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல,
அதற்கு நாங்க தான் உதவி பண்ணுவோமே என்று சொல்ல.. இல்லை நான் லோனுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்கிறேன் அது ரெடி ஆனதும் நான் ரெஸ்டாரண்ட் திறந்து விடுவேன் என்று சொல்ல, ஒரு பிளாங்க் செக்கை கையில் கொடுத்து இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போக ரவி கோபமாக ஸ்ருதியின் டப்பிங் ஆபீசுக்கு வருகிறார்.
அங்கு ஸ்ருதி முகத்தில் அந்த பிளைன் செக்கை தூக்கி வீசிவிட்டு கோபமாக ரவி கிளம்பி போக, செக்கை பார்த்ததும் ஸ்ருதி ரவியிடம் இது என்னவென்று கேட்க அதற்கு ரவி நான் எத்தனை முறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன் வீட்டில் நடக்கிற விஷயத்தெல்லாம் உங்க அம்மாவிடம் சொல்லாதே என்று இப்போ அவங்க எனக்கு பிளைன் சேக் தந்து ரெஸ்டாரண்ட் தொடக்க சொல்றாங்க, நான் என்னுடைய அப்பாவிடமே பணம் கேட்க மாட்டேன் என்று கோபப்படுகிறார்.
ஸ்ருதி நானே எங்க அப்பா அம்மாவிடம் பணம் கேட்க மாட்டேன். நான் உனக்காக அவர்களிடம் பணம் கேட்பேனா? அவங்க நாம நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக ஏதோ செய்றாங்க அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு கோபமாக கிளம்பி போகிறார். அடுத்த கட்டத்தில் க்ரிஷ் ரோகிணிக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். ரோகிணி வந்ததும் என்னுடைய கிளாஸ் பசங்க எல்லாரும் வருவாங்க, அவங்களிடம் நீ தான் என்னுடைய அம்மா என்று சொல்லப் போறேன் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அதற்கு இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சு சொல்லுறேன் அப்போ எல்லாரிடமும் சொல்லலாம் என்று சொல்ல ரோகிணியின் அம்மா அவன் உன் கூடவே இருக்க ஆசைப்படுகிறான் என்று சொல்ல ரோகிணி அதுக்குன்னு ஒரு காலம் வரும் அப்போ எல்லாம் நடக்கும் என்று சொல்கிறார். பிறகு கேக் வெட்டுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் கிரிஷ் தன்னுடைய நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது முத்துவும், மீனாவும் அங்கு வர அவர்களை பார்த்து கிருஷ் அதிர்ச்சியாகி நிற்கிறார். பிறகு தாங்கள் வாங்கிக் கொண்டு வந்த ட்ரெஸ்ஸை கொடுத்து கேக் வெட்டலாம் என்று ரெடியாகும்போது கிரிஷ் அம்மா அம்மா என்று ரோகிணியை தேடிக் கொண்டிருக்க, முத்து ரோகிணியின் அம்மாவை வாங்க அம்மா கொஞ்சம் உங்களிடம் பேச வேண்டும் என்று தனியாக கூட்டிட்டு போய் க்ரிஷ் ஓட அத்தைக்கு போன் போட்டு தாங்க நாங்க அவங்களிடம் பேசுகிறோம் என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணியின் அம்மா என்னை மன்னிச்சிருங்க நான் உங்களிடம் ஒரு உண்மையை மறைச்சிட்டேன். கிரிஷ் என்னுடைய மகனின் குழந்தை கிடையாது. என்னுடைய மகளின் பையன் தான். கிரிஷ்க்கு இந்த உண்மை தெரியாது என்று சொல்ல, ஏன் எதனால சொல்லல என்று முத்துவும் மீனாவும் கேட்க, நான் என்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக என்னுடைய மகளை ஒரு பணக்காரருக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.
அவர் என் பொண்ண விட அதிகமான வயது உடையவர். கல்யாணமான கொஞ்ச நாளிலேயே கிரிஷ் பிறந்ததும் அவர் இறந்து விட்டார் என்று சொல்ல முத்து மீனாவும் அதிர்ச்சியடைகின்றனர். இதை எல்லாம் ரோகிணியும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications