சிறகடிக்க ஆசை: அப்போ சத்யா திருந்தலையா? புது கூட்டணி உருவாகி இருக்கு.. இனி முத்துவின் நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா கேரக்டரில் நடிக்கும் திவாகர் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. அதாவது திவாகர் சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னோடு நடிக்கும் நடிகர்களோடு சேர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து இருக்கும் நிலையில் அந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. காரணம் ஒவ்வொரு முறையும் ரோகிணி மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார். நேற்றைய எபிசோடில் கூட சிட்டியிடம் வசீகரன் பற்றி ரோகினி பேசி இருந்த நிலையில் சிட்டி ரோகினியை வைத்து முத்துவை பழிவாங்க வேண்டும் என்று வசீகரனை கூப்பிட்டு ரோகினிக்காக மிரட்டி இருந்தார்.

அதோடு சிட்டியிடம் இருந்து தப்பித்த வசீகரன் தெருவில் போன பாட்டி மீது பைக்கை மோதி விட்டு நிற்காமல் போக அந்த பக்கமாக வந்த முத்து வசீகரனை துரத்தி போய் இருந்தார். இதனால் வசீகரன் முத்துவிடம் சிக்கினால் ரோகிணி பற்றிய உண்மை தெரிய வருமா? என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இன்றும் வழக்கம் போல ஏமாற்றம்தான் கிடைத்தது.
முத்து கையில் வசீகரன் மாட்டியதுமே அந்த நேரத்தில் அங்கு போலீஸ் வந்து வசீகரனை கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். வழக்கம் போல இந்த முறையும் ரோகிணி தப்பித்து விட்டார். அதே நேரத்தில் முத்துவிற்கு எதிராக சத்தியா எப்போதும் பிரச்சனை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று சிட்டியிடம் நான் இனி முத்து விஷயத்தை தலையிட போவது கிடையாது, நான் தான் அவருடைய அம்மாவின் பணத்தை திருடினேன் என்று தெரிந்தும் வீட்டில் இதுவரைக்கும் சொல்லவில்லை.
ஆனால் நான் அவரை ஒவ்வொரு முறையும் கேவலப்படுத்த வேண்டும் என்று பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறேன். அது வீட்டில் தேவையில்லாத பிரச்சனையாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இனி நான் முத்து விஷயத்தை எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்லி இருந்தார். இதனால் சத்யா திருந்தி திருந்தி விட்டார் போல என்று தெரிந்தது.
சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்த போட்டோ.. வாசலில் நிறுத்தி விஜயா கேட்ட கேள்வி.. ஆடி போன குடும்பம்
ஆனால் இன்று சத்யாவாக நடிக்கும் திவாகர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னுடைய வாழ்க்கையில் மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி செல்வம், சிட்டி மற்றும் வசீகரனை காட்டியிருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வைத்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகித்து விடலாம். அந்த வரிசையில் இப்போது திவாகர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் இவங்க எல்லாரும் ஒரே குரூப் ஆக சேரப் போகிறார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications