சிறகடிக்க ஆசை: மீனா உண்மையை மறைத்ததால் முத்து செய்த விபரீதம்.. விஜயாவிடம் உண்மைய உளறிய மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா எதற்காக கிரிஷையை தத்தெடுக்க வேண்டாம் என்று சொன்னார் என சந்தேகப்படும் முத்து குடித்து கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மனோஜ் கிரிஷை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக போட்ட பிளானை ரோகினி தடுக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜும் அவருடைய பிஏவும் கிரிஷை மும்பைக்கு அனுப்ப திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகினி அவர்களை திட்டி மனோஜின் மனதை மாற்றுகிறார். பிறகு முத்துக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அந்தப் பையனை இந்த வீட்டுக்கு முத்து தான் கூட்டிட்டு வந்து இருக்கான். ஏற்கனவே உங்க அம்மா அவனை வெளியே அனுப்புறதுக்காக போட்ட பிளான் என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியும்ல என்று சொன்னதும் மனோஜ் பயப்படுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ஆனாலும் எதுக்காக அந்த பையனை அனுப்பக்கூடாது என்று சொல்கிறாய் என்று மீண்டும் மீண்டும் கேட்டு அதற்கு ரோகிணி சமாளித்துக் கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ் கல்யாணி ஆவிக்கு பயப்படுவதை பார்த்து ரோகிணி சிரித்துக்கொண்டே அங்கிருந்து போகிறார். அதைத்தொடர்ந்து ரவி ஸ்ருதிக்கு வீடியோ கால் செய்து போட்டியில் வெற்றி பெற்றதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஸ்ருதியின் அம்மா வந்து மாப்பிள்ளை போட்டி என்று சொல்லிக்கொண்டு நீத்து உடன் பீச்சில் சென்று கொண்டிருப்பதாக தகவல் கேள்விப்பட்டேன் என்று சொல்கிறார். உடனே ஸ்ருதி ரவி நீத்துடன் தான் போய் இருக்கிறான் அப்போ அங்க பீச்சிலையும் ஒன்ன தானே இருப்பாங்க என்று கேசுவலாக சொல்ல, ஸ்ருதி அம்மா ஒரு அளவுக்குதான் கணவருக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று திட்டிவிட்டு போகிறார்.

மறுபக்கத்தில் முத்து கார் செட்டில் வைத்து தன்னுடைய நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருக்கிறார். மீனா ஏன் கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று சொன்னான்னு தெரியலையே என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு செல்வம் சிஸ்டர் அப்படி சொன்னாங்கன்னா அதில் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று சொல்ல, முத்து எல்லாரும் மாறிட்டாங்க ஆரம்பத்தில் மீனாதான் அந்த பையனை தத்து எடுக்கணும்னு சொன்னது.

ஆனால் அதற்காக ப்ரொசீஜர் ஸ்டார்ட் பண்ணனும் போது வேண்டான்னு சொல்லிட்டா. ஆனா மீனா இப்படி எல்லாம் மாறுவா என்று நான் நினைச்சு கூட பாக்கல என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு செல்வம் நீ குடிக்க மாட்டேன் என்று சொன்னதால தானே மீனா சிஸ்டர் வீட்டுக்கே வந்தாங்க இப்ப உட்கார்ந்து குடிச்சிட்டு இருக்குற என்று கேட்க, அவளுக்காக தான் நான் குடியை விட்டேன் ஆனால் அவள் உண்மையை மறைக்குறா என்று முத்து குடித்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக மனோஜ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் அந்த கிரிஷ் பையனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப ஒரு நல்ல பிளான் கிடைச்சது. ஆனால் ரோகிணி தான் வேண்டாம்னு சொல்லிட்டா என்று சொல்ல விஜயா கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி நீ ஏற்கனவே போட்டோ பிளான் சொதப்பிடிச்சு. அப்போது மாமா ரொம்ப கோபப்பட்டார். இப்போ ஏதாவது செஞ்சா மாமா ரொம்ப கோபப்பட்டு உங்களை வீட்டை விட்டு துரத்திடுவாரு‌.

முத்துவும் மீனாவும் அவங்க பங்குக்கு பேசுவாங்க அதனால தான் இப்போதைக்கு எதுவும் பண்ண கூடாதுன்னு சொன்னேன் என்று சமாளிக்கிறார். பிறகு மனோஜ் ரூமுக்குள் போனதும் கல்யாணி ஆவி வந்தது போல ரோகிணி நாடகம் போட்டு மனோஜை மிரட்டுகிறார். என்னையும் என்னுடைய பையனையும் பிரிக்க நினைச்சா நான் எப்பவும் வருவேன், இனி எந்த பிளானும் போடக்கூடாது என்று சொல்ல, மனோஜ் பயத்தில் இனி எதுவும் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+