Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மனோஜிடம் கிரிஷ் காட்டிய ஆதாரம்.. விஜயாவிடம் சிக்கும் ரோகிணி! முத்து கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மைகளை மீனா மறைப்பதால் முத்து கோபப்படுகிறார். அதே நேரத்தில் ரோகினி கிரிஷை வைத்து புது ஆட்டத்தை ஆடுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

ரோகிணியின் மகன்தான் கிரிஷ் என்ற உண்மை தெரிந்ததால் மீனா கிரிஷை தத்தெடுக்க முடியாது என்று சொல்கிறார். ஆனால் முத்து உண்மை தெரியாமல் எதற்காக வேண்டாம் என்று சொல்கிறார் என்று குழப்பத்தில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இருக்கிறார். அதே நேரத்தில் மனோஜை மீண்டும் மிரட்டுவதற்காக ரோகிணி கல்யாணி ஆவி தனக்குள் வந்தது போல நேற்றைய எபிசோடில் மிரட்டி இருந்தார்.

Siragadikka aasai serial vijay tv

இனி என்னையும் என்னுடைய மகனையும் பிரித்தால் நான் கண்டிப்பாக வருவேன், உன்னுடைய அம்மாவை கொன்று விடுவேன் என்று சொல்லி இருந்தார். பிறகு மயக்கம் போட்டு விழுந்தது போல ரோகிணி நடிக்க, மனோஜ் அவரை எழுப்பியதும் எனக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று உண்மையை சொல்லாமல் மறைக்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதிக்கு ரவி போன் செய்கிறார். நான் வருவதற்கு சில நாட்கள் ஆகும் இங்கு உணவை பற்றி ஆராய்ச்சி செய்யப் போகிறேன் என்று சொன்னதும் ஸ்ருதி அதை தவறாக எடுத்துக் கொள்ளாமல் ஓகே என்று சொல்கிறார். ஏற்கனவே ரவி நீத்துவுடன் சமையல் போட்டியில் கலந்து கொள்ளப் போனது ஸ்ருதியின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக வீட்டிற்கு முத்து குடித்துவிட்டு வந்து மீனாவிடம் நீ எதற்காக கிரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்றால் அந்த காரணத்தை சொல்லு என்று சண்டை போடுகிறார். அதற்கு மீனா போதையில் கேட்டால் என்ன புரியும் நான் நாளைக்கு சொல்லுறேன் என்று சொல்கிறார். உடனே முத்து கோபமாகி இனி நான் உன் கூட பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு மாடிக்கு போய் விடுகிறார். முத்து சாப்பிடாமல் போனதால் மீனா வருத்தத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ரோகிணி அங்கு வர மீனா ரோகிணியை கூப்பிட்டு திட்டுகிறார். உன்னால எங்களுக்குள்ள தான் பிரச்சனை வருது. நான் எவ்வளவு கஷ்டப்பட முடியும் என்று கேட்டு மரியாதையா சீக்கிரமா உண்மையை சொல்லிடு என்று மிரட்டுகிறார். அதற்கு ரோகிணி மீனா உங்க நிலைமை எனக்கு புரியுது என்னை மன்னிச்சிடுங்க. நான் சீக்கிரமா வீட்ல விஷயத்தை சொல்லுறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் விஜயா அங்கு வந்து இவர்கள் இருவரும் இருட்டுக்குள் நின்று பேசுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இரண்டு பேரும் என்ன பேசுறீங்க என்று கேட்க, ரோகிணி கிரிஷ் பற்றி பேசினோம் என்று சமாளிக்க, அதை நம்பும் விஜயாவும் அங்கிருந்து போய் விடுகிறார். இதனால் மீனா உன்னால மட்டும் எப்படி இப்படி நிமிடத்திற்கு நிமிடம் பொய் சொல்லி ஏமாற்ற முடியுது? கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம நீ மட்டும் எப்படி இவ்வளவு பொய் சொல்லுற என்று திட்ட, இதனால் ரோகிணி ஏண்டா மீனா கிட்ட மாட்டுனோம் என்று நொந்து கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து மனோஜின் மனதை மாற்றுவதற்காக ரோகிணி சில திட்டம் போடுகிறார். அதிலும் மனோஜ் உருவத்தை படமாக வரைந்து அதை கிரிஷ் வரைந்ததாக சொல்லி மனோஜிடம் காட்ட சொல்கிறார். அம்மா சொன்னது போலவே கிரிஷ் மனோஜிடம் கொண்டு போய் நானே வரைந்தேன் என்று நாடகம் போட்டு காட்ட, அதை நம்பும் மனோஜ் அழகா இருக்குடா, நல்ல வரையுற என்று பாராட்டுகிறார்.

பிறகு கிரிஷ் அந்தப் படத்தை எல்லாரிடமும் காட்டி நன்றாக இருக்கா என்று கேட்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் கிரிஷை பாராட்டுகின்றனர். விஜயா மட்டும் என்ன இது மூக்கு கோணலா இருக்கு என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரோகிணி தனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று அடுத்தவர்களை மாட்டி விடுபவர் தான்.

இப்போது மீனாவும் ரோகிணியின் உண்மையை தெரிந்தும் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இனி ரோகிணி மீனாவை மாட்டி விடப் போகிறாரா? அல்லது மீனா ரோகிணியை மாட்டி விடப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+