சிறகடிக்க ஆசை: அண்ணாமலை குடும்பத்தை பிரிக்க துருப்பு ஆகும் ஸ்ருதி.. மீனாவை மாட்டிவிடும் ரோகினி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 1ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதியின் அம்மா, அப்பாவிடம் அண்ணாமலை குடும்பத்தை ஸ்ருதியை வைத்து தான் நாம பிரிக்கணும் என்று பிளான் போடுகிறார்.

அதே நேரத்தில் மீனா செய்த செயலை எல்லோரும் பாராட்டுவதால் கடுப்பாகும் ரோகினி அதை வைத்து விஜயாவை ஏத்தி விடுகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மீனாவை பீஜூவை கல்லால் அடித்த இடத்திற்கு கூட்டிட்டு போய் இந்த செங்கலால் தானே நீ அந்த சாதனையை பண்ணுன. பொதுவாக சாதனை பண்ணுனவங்களுக்கெல்லாம் ஷீல்ட் ஏதாவது கொடுப்பாங்கல்ல. அந்த மாதிரி நான் இந்த செங்கலை நெனச்சுக்கிறேன் என்று அந்த செங்கலை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு காரில் வருகின்றனர்.
சிறகடிக்க ஆசை: கண் கலங்கும் மீனா.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி.. ட்ரீட் வச்சி கொண்டாடும் முத்து
அதைஅடுத்து ஸ்ருதியின் அம்மா சுதா வாசுதேவனிடம் நான் இன்னைக்கு ஸ்ருதியை பார்க்க போயிருந்தேன். அங்க அந்த அண்ணாமலையோட பொண்டாட்டி எனக்கு சரிசமமாக உட்கார்ந்து பேசிக்கிட்டு, என்னை சம்மந்தி என்று கூப்பிடுறா, உங்ககிட்ட கைகட்டி வேலை பார்த்த அந்த அண்ணாமலை இப்போ நம்மளுக்கு சம்மந்தியாகிவிட்டான். அந்த அண்ணாமலை நிம்மதியா இருக்கக்கூடாது.
ஸ்ருதியையும் ரவியையும் நம்ம பக்கம் இழுத்துட்டு பையனை பிரிஞ்சி அண்ணாமலை கஷ்டப்படணும். அவனை நாம பழிவாங்கணும். அதுக்கு முதல் விஷயமா ஸ்ருதியை அவங்க வீட்டுக்கு அனுப்பனும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு வாசுதேவன் நீ ஏதாவது பண்ணிக்கோ. நான் அண்ணாமலை வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அடுத்ததாக ரோகிணி வீட்டிற்கு வந்து விஜயாவிடம் எங்கே நம்ம வீட்டு வாசலில் பிரஸ் மீடியா எல்லாம் இருப்பாங்க என்று நினைத்து என்று சொல்ல அதற்கு விஜயா எதற்கு என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி, மீனாதான் பெரிய சாதனை பண்ணி இருக்காங்கல்ல. இதுவரைக்கும் அவங்க புருஷன் தான் அடிதடி சண்டை என்று போயிட்டு இருந்தாங்க. இப்போ மீனாவும் சேர்ந்து பண்ணுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றார்.
அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் வருகின்றனர். அப்போது மீனாவை பார்த்ததும் அண்ணாமலை ரொம்ப பெரிய விஷயம் பண்ணி இருக்கமா என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி, ரவி பொண்டாட்டி இருக்கிற இடத்துக்கு மீனா எதுக்கு போனாங்க என்று கேட்க, அதற்கு முத்து அந்த பக்கமா பூ கொடுக்க மீனா போயிருக்காங்க என்று மீனாவை பொய் சொல்லி காப்பாற்றுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications