சிறகடிக்க ஆசை: கண் கலங்கும் மீனா.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி.. ட்ரீட் வச்சி கொண்டாடும் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 30ம் தேதி எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் ஸ்ருதியை ரவியோடு வீட்டிற்கு வர வைப்பதுக்காக விஜயா முயற்சி செய்து கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதியின் அம்மாவும் வந்து விடுகிறார்.

அதே நேரத்தில் மீனா தைரியமாக ஸ்ருதி உயிரை காப்பாற்றியதற்காக முத்து எல்லோருக்கும் ட்ரீட் வைத்து கொண்டாடுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவி ஸ்ருதியை வீட்டிற்கு வர வைப்பதற்காக விஜயா பேச வந்திருக்கிறார். அப்போது ஸ்ருதியிடம் விஜயா நீங்க தனியா இருந்து கஷ்டப்படணுமா? நம்ம வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி ஆன்ட்டி நீங்க சூப்பர். எங்க அம்மா கூட இவ்வளவு நாள் எங்களை வந்து கூப்பிடல. ஆனா நீங்க வந்து கூப்பிட்டு இருக்கீங்க.
இருந்தாலும் முத்து இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு உங்களுக்காக வேணும்னா நான் அங்கு வருவது பற்றி யோசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதியின் அம்மா சுதா ஸ்ருதி வீட்டிற்கு வருகிறார். அம்மா வந்து சந்தோஷத்தில் ஸ்ருதி அம்மாவை கூட்டிக்கொண்டு வந்து அமர வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை: பண திமிரில் ஆடிய விஜயாவை அடக்கிய ஸ்ருதி.. செய்தி சேனலில் அதிர்ச்சி கொடுத்த மீனா
அப்போது பிஜு செய்த வேலை எனக்கு இப்பதான் தெரிஞ்சது. உனக்கு ஒன்னும் ஆகலையே என்று சுதா ஸ்ருதியிடம் விசாரிக்கிறார். அடுத்து விஜயா, பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் அவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டீங்களா? எனக்கு என் பையன் மேல அக்கறை இருக்காதனால்தான் நான் என் வீட்டுக்கு கூப்பிட வந்திருக்கிறேன்.
உங்கள் பெண்ணையும் சேர்த்து தான் நான் கூப்பிடுகிறேன். என் புருஷன் கொஞ்சம் கோவமா தான் இருக்காரு. இருந்தாலும் நீங்களும் உங்க புருஷனும் வந்து எங்க வீட்டில விட்டுட்டு போங்க என்று சொல்கிறார். அதற்கு சுதாவும் சரி நான் அவர்கிட்ட பேசுறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரவி எல்லோருக்கும் சமைத்துக் கொண்டிருக்கிறார்.
டாப் 10 தமிழ் சீரியல்கள்: முதல் இடத்தில் இந்த சீரியலா? கடைசி இடத்துக்கு வந்த முக்கிய சீரியல்
அடுத்ததாக மீனா முத்துவிற்காக சமைத்து எடுத்துக்கொண்டு கார் ஸ்டாண்டுக்கு போகிறார். அங்கே முத்துவின் நண்பர்கள் கார் திரும்ப கிடைச்சிருக்கு. அது போல உன் மனைவியும் டிவியில் வந்திருக்காங்க இதனால் ட்ரீட் வை என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் ட்ரீட் வை என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மீனா கொண்டு வந்த சாப்பாடை நண்பர்களிடம் முத்து கொடுத்து விட்டு வா நாம வேறு ஒரு இடத்துக்கு போகலாம் என்று மீனாவை காரில் கூட்டிக்கொண்டு போகிறார்.
அங்கு மீனாவின் அம்மாவும் தங்கச்சியும் இருக்கின்றனர். அப்போது மீனா பெரிய சாதனை பண்ணி இருக்கா. அதனால அவளுக்கு கண்ணு பட்டு இருக்கும் என்று அத்தை உனக்கு சுத்தி போட சொன்னாங்க அதனால்தான் கோவிலுக்கு கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல, பிறகு ஐயர் மீனாவுக்கு சுத்தி போட்டு உங்க அப்பா உன்ன பத்தி தான் நிறைய என்கிட்ட பேசுவாரு..
இப்ப இந்த விஷயத்தை பார்க்க அவர் இல்லையே என்று ஐயர் சொல்ல அப்பாவை நினைத்து மீனா கண்கலங்கி எமோஷனல் ஆகிறார். அப்போது முத்து உங்க அப்பா இங்கே தான் எங்கேயாவது இருந்து உங்கள பார்த்து சந்தோஷப்படுவார் என்று ஆறுதல் சொல்லி மீனாவை கூட்டிட்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications