சிறகடிக்க ஆசை: பண திமிரில் ஆடிய விஜயாவை அடக்கிய ஸ்ருதி.. செய்தி சேனலில் அதிர்ச்சி கொடுத்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் ஸ்ருதி மற்றும் ரவியை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று போய் இருந்த விஜயாவுக்கு ஸ்ருதி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் ஸ்ருதியை காப்பாற்றியதற்காக மீனாவை செய்தி சேனல்கள் பேட்டி எடுக்க அதை பார்த்து முத்து குழப்பம் அடைகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா ஸ்ருதியின் அம்மா மற்றும் அப்பாவிடம் உங்க பொண்ணு லைஃபுக்கு பாதுகாப்பு இல்லை. நீங்க கல்யாணம் பண்ணி வைக்க இருந்த பையன் ஆசிட் ஊத்த வந்துட்டான். தனக்கு ஒரு பொண்ணு கிடைக்கலன்னா அந்த பொண்ணு நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்துட்டீங்களே? என்று சொல்ல, அதனால் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் பீல் பண்ணுகின்றனர்.
அப்போது மீனா இப்போ ரவியும் ஸ்ருதியும் நல்லாதான் இருக்காங்க, நீங்க போய் உங்க பொண்ண பாருங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். பிறகு முத்துவும் செல்வமும் சவாரிக்காக ஒரு இடத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அங்கு வரும் மீனா இன்னைக்கு ஒரு விஷயம் நடந்துச்சு. அதை பற்றி உங்க கிட்ட சொல்லணும் என்று சொல்கிறார். அதோடு ஸ்ருதி எனக்கு போன் பண்ணி வர சொன்னாங்க.
அதனால நான் போனேன். அங்க ஒரு பையன் அவங்க மேல ஆசிட் உத்த வந்தான். நான் தான் காப்பாத்துவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு முத்து பதறி போய் உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றது என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே சில மீடியாக காரர்கள் வந்து மீனாவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று சொல்லகிறார்கள்.
அதை பார்த்து அதிர்ச்சியான முத்து இவ என்ன சாதனை பண்ணிட்டா பேட்டி எடுக்க என்று கேட்க, அதற்கு அவர்கள் ஒரு பொண்ணு மேல ஆசிட் ஊற்ற ஒரு நபர் வந்தப்போ அவன கல்லால் அடிச்சு விரட்டி இருக்கிறார். அங்கு அவ்வளவு ஆம்பளைங்க இருந்து இவங்க தைரியமா செஞ்சிருக்காங்க என்று அந்த வீடியோவை முத்துவிடம் காண்பிக்கின்றனர். அதற்கு மீனா நான் என்ன பெருசா செஞ்சுட்டேன்.
அதுவும் என் புருஷன் இப்படித்தான் ஒரு சண்டைன்னா முன்னாடி நிப்பாரு. அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் இன்று தைரியம் எனக்கு வந்தது என்று முத்துவை காண்பிக்கிறார். இதனால் சந்தோஷமாக முத்து என் பொண்டாட்டியும் ரொம்ப திறமைசாலி தான் என்று அவர்களிடம் பேட்டி கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மாவிடம் மீனா கேட்ட கேள்வி.. காப்பாற்ற போய் இப்படி ஒரு பிரச்சனையா?
அதை தொடர்ந்து மறுபக்கத்தில் பார்வதி விஜய் வீட்டிற்கு வந்து உன் மருமகள் சாதனை பண்ணி இருக்கா என்று மீனாவுடைய வீடியோவை காண்பித்து இதுதான் நல்ல நேரம் இப்ப போய் ஸ்ருதிகிட்ட நீங்க தனியா இருக்கிறதால தான் இவ்ளோ பிரச்சனை நம்ம வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடலாம் என்று ஐடியா கொடுக்க பார்வதியும் விஜயாவும் ரவி வீட்டுக்கு போகின்றனர். அங்கு ரவி அம்மாவை பார்த்து உடனே ஸ்ருதி அம்மா வந்திருக்காங்க வா என்று கூப்பிட ஸ்ருதியும் வாங்க ஆன்ட்டி என்று வரவேற்று உள்ளே போய் டீ போட சொல்கிறார்.
பிறகு விஜயா முன்பு ஸ்ருதி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க, அதை பார்த்து ரவி காலை இறக்கு என்று மெசேஜ் பண்ணி சொல்கிறார். அதை பார்த்ததும் ஸ்ருதி காலை எடுத்துக்கிறார். அப்போது விஜயா நீங்க ஏன் தனியா இருக்கணும். நம்ம வீட்டுக்கு வாங்க என்று விஜயா ஸ்ருதியை கூப்பிட அதற்கு ஸ்ருதி எனக்கு இப்ப அங்க வர ஐடியா இல்லை. அதுவும் முத்து இருக்கிற வீட்டுக்கு என்னால வர முடியாது.
அவர் ஏற்கனவே என்னை இன்சல்ட் பண்ணி இருக்காரு. அது மாதிரி என்னை இதுவரைக்கும் யாரும் பேசினதே கிடையாது. ஆனால் நீங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுறீங்க. உங்களுக்காக வேணா நான் வீட்டுக்கு வரத பத்தி யோசிக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications