சிறகடிக்க ஆசை: ஸ்ருதி அம்மாவிடம் மீனா கேட்ட கேள்வி.. காப்பாற்ற போய் இப்படி ஒரு பிரச்சனையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அது ஸ்ருதி மீது ஆசிட் அடிக்க பிஜூ முயற்சி செய்தபோது மீனா, ஸ்ருதி உயிரை காப்பாற்றி இருக்கிறார்.

அதே நேரத்தில் மீண்டும் மீனா முத்து பேச்சை மீறி ஸ்ருதியின் அம்மா அப்பாவை பார்த்து பேசியிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதியும், மீனாவும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஸ்ருதி ரவி மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார். எப்போதுமே என்னை பற்றி யோசிக்கவே மாட்டேன் என்று தன் குடும்பத்தை பற்றியே ரவி யோசிச்சிட்டு இருக்கிறார் என்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அதற்கு மீனா அவர் குடும்பத்தை பற்றி பேசுவதில்லை என்ன தப்பு இருக்கு, எல்லாரும் சேர்ந்து இருக்கணும்னு அவர் நினைக்கிறார் என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு ஸ்ருதி நீங்களும் அத்தை வீட்டில் இருக்கீங்க ஆனால் உங்கள உங்க ஹஸ்பண்டும் உங்க மாமியாரும் யாருமே மதிக்கிறது இல்லை.
எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க. ஆனா என்னால எல்லாம் இப்படி எல்லாம் வாழ முடியாது. யாரையும் சமாளித்து போகவும் முடியாது என்று கறாராக பேச அதை பார்த்து கடுப்பான மீனா அப்ப நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, யாரையும் சமாளித்து போக முடியாது என்றால் எதுக்கு உங்களுக்கு திருமண வாழ்க்கை.
உங்க ஆசை மட்டும் நிறைவேறினால் சரி என்று நினைக்கிற உங்களுக்கு நான் என்ன சொல்லி சொன்னாலும் புரியாது என்று கோபமாக சொல்லிவிட்டு கிளம்பி போக அதற்கு ஸ்ருதியை பின்னாடியே போய் மீனாவை சமாதானம் செய்வதற்காக போய்க் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதிக்கு பேசி முடித்து வைத்த பிஜு ஸ்ருதியை அடியாள்களோடு மறித்து அவர் மீது ஆசிட் அடிப்பதற்காக பக்கத்தில் போக அப்போது மீனா கற்களை வைத்து எறிந்து பிஜூவின் கையில் இருந்த ஆசிட்டை உடைக்கிறார்.
பிறகு மீனாவை அங்கிருந்து காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிட்டு போய் டீ போட்டுக் கொடுத்து ஸ்ருதிக்கு அட்வைஸ் கொடுக்கிறார். குடும்பம் சேர்ந்து இருப்பதால் எவ்வளவு நன்மை என்று பார்த்தீர்களா? இப்ப நான் இல்லாட்டி உங்களை யார் காப்பாற்றுவாங்க என்று மீனா கேட்க, அதற்கு ஸ்ருதி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.
மேலும் மீனா கவலைப்படாதீங்க நான் உங்க வீட்டுல பேசிக்கிறேன். நான் சொன்னா மாமா கேப்பாரு என்று பேசிக் கொண்டிருக்கும் போது ரவியும் வந்து ஸ்ரிதியை ஆறுதல் படுத்துகிறார். அதைத் தொடர்ந்து மீனா ஸ்ருதி வீட்டுக்கு சென்று ஸ்ருதியின் அம்மா, அப்பாவிடம் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்ல, அவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது ஸ்ருதி அப்பா எங்களை வேண்டாம் என்று அசிங்கப்படுத்திட்டு போனாவதானே அவளுக்கு இப்ப என்ன ஆனா எங்களுக்கு என்ன என்று பேச அதற்கு மீனா அவரையும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. ஏற்கனவே மீனா முத்துவிடம் சொல்லாமல் ஸ்ருதியை நம்பி போனதான் தான் ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்தார். இப்போது மீண்டும் மீனா அதையே செய்திருப்பதால் இனி அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications