சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடிக்கும் உண்மை! தன்னை பற்றிய உண்மையை சொன்ன ரோகிணி! அதிர்ச்சியில் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி தன்னைப் பற்றிய இன்னொரு உண்மையையும் மீனாவிடம் சொல்லி இருக்கிறார். இதனால் குடும்பத்தில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ரோகிணியிடமிருந்து பணம் வாங்க வேண்டும் என்பதற்காக அவருடைய பழைய பிஏ தினேஷ்தான் கிரிஷை ஸ்கூலில் இருந்து கடத்தி சென்று இருக்கிறார். இதனால் ரோகிணிக்கு போன் போட்டு ரெண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணம் கொடுத்தால் தான் கிரிஷை விடுவேன் என்று சொன்னதால் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

மறுபக்கத்தில் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியாததால் கிரிஷ் காணாமல் போன விஷயத்தை பற்றி போலீசுக்கு சொல்லலாம் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணி சொல்ல வேண்டாம் என்று பதறுகிறார். அப்போது அண்ணாமலையும் ரோகினி சொல்வதுதான் சரி. முதல்ல கிருஷ் பாட்டியிடம் அவனை பற்றி விசாரிங்க என்று சொல்கிறார்.
அடுத்ததாக மீனாவை ரோகிணி தனியாக மாடிக்கு கூட்டிட்டு வந்து கிரிஷை தனக்கு தெரிந்த தன்னுடைய பழைய பிஏ தினேஷ் என்பவர்தான் கடத்தி வைத்திருக்கிறார் என்ற விஷயத்தை சொல்கிறார். அதைக் கேட்டு மீனா அதிர்ச்சியாகி இன்னும் எத்தனை விஷயத்தை சொல்லாமல் மறைத்து வைத்திருக்க என்று திட்டுகிறார்.
அப்போது அந்த பிஏ தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தையும், அதற்கு தான் ஒத்துழைக்கவில்லை என்பதால் தன்னை பற்றி விசாரிக்க வீட்டிற்கு போனபோது தனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சு என்று உண்மை தெரிந்ததால் அதை வைத்து இத்தனை நாட்களாக மிரட்டிக் கொண்டிருக்கிறான் என்ற உண்மை எல்லாம் ரோகிணி சொல்கிறார்.
அப்போது மீனா இந்த நேரத்தில் நீ உன்னுடைய பழைய வாழ்க்கையை பற்றிய விஷயத்தையும் வீட்டில் சொல்லிவிடு என்று சொல்ல, இப்போ சொன்னால் பிரச்சனை பெருசாகிடும் என்று ரோகிணி பதறுகிறார். அதற்கு மீனா யோசித்து விட்டு சரி அப்போ நீ அந்த பிஏவுக்கு போன் பண்ணி மனோஜோட நம்பரை கொடுத்துடு என்று ஐடியா கொடுக்கிறார்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பிஏ.. முத்துக்கு தெரிய வரும் உண்மை!
அதே போல ரோகிணியும் செய்ய, பிஏ மனோஜ்க்கு போன் செய்து 2 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டுகிறார். அப்போது முத்துவும் பக்கத்தில் இருப்பதால் பணத்தை தருகிறேன் என்று எந்த இடத்துக்கு வரணும் என கேட்டு வைக்க சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட விஜயா வழக்கம் போல திட்டிக் கொண்டிருக்கிறார். பணத்தை எல்லாம் கொடுக்க வேண்டாம் என்று அவர் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது, அமைதியாக இருந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டுகிறார்.
இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது என்று திட்டிவிட்டு முத்து எதை சொல்றானோ அதையே செய் என்று மனோஜ்க்கு சொல்கிறார். உடனே மனோஜ் தினேஷ் சொன்ன இடத்திற்கே போகிறார். அங்கு சில அடியாள்கள் வந்து பணத்தை வாங்கும்போது முத்து சரியாக அந்த இடத்திற்கு போய் அவர்களை அடித்து துவைக்கிறார்.
புது வீட்டுக்கு போனதும் விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த சீரியல் நடிகை ஸ்ரேயா- சித்து தம்பதி! குவியும் வாழ்த்து
பிறகு அவர்களை பிடிக்க முயற்சி செய்யும்போது முத்துவிடம் இருந்து அவர்கள் தப்பி ஓடுகின்றனர். அந்த பக்கமாக அருண் வர அருணிடம் அந்த ரெண்டு ரவுடிகளை பிடிக்கணும் என்று சொல்ல, முதலில் அருண் யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து சொன்னதால் அங்கிருந்து வேகமாக அந்த ரவுடிகளை விரட்டி போகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications