சிறகடிக்க ஆசை: ரோகிணி வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பிஏ.. முத்துக்கு தெரிய வரும் உண்மை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடில், கிரிஷை பழைய பிஏ கடத்திக்கொண்டு போகிறார். இதனால் ரோகிணி பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வருமா? என்ற ஒரு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடைசியில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மை தெரிந்தும் மீனா குடும்பத்திடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். அதோடு நான் சீக்கிரமா உண்மையை சொல்ல போறேன் என்று சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணி நானே உண்மையை சொல்லுகிறேன் என்று சொல்லி மீனாவை சமாளித்திருக்கிறார். அதே நேரத்தில் மனோஜுடன் தன்னுடைய மகனை நெருங்கி பழக வைக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தான் இன்று யாரும் எதிர் பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிரிஷையும் அவங்க அம்மா கல்யாணியையும் எப்படி துரத்தலாம்? என்று மனோஜ் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்து ரோகிணி என்ன பண்ணுற என்று கேட்க, அதற்கு மனோஜ் உண்மையை சொல்லாமல் மறைத்துவிடுகிறார்.
பிறகு மீனா போன் பண்ணுனாங்க கிரிஷை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வரணுமாம் என்று சொல்ல, அதற்கு மனோஜ் அவனுக்கு வேலை செய்றதுக்கு தான் நாம இருக்கோமா? முத்துதானே அவனை கூட்டிட்டு வந்தான். அப்போ அவன் தானே பாத்துக்கணும் நாம ஏன் கூட்டிட்டு வரணும் அதெல்லாம் வேண்டாம் என்று திட்டுகிறார். ஆனால் அதற்கு பிறகு கல்யாணம் ஆவியை நினைத்து பார்த்து பயந்து போய் வா போகலாம் என்று ரோகினியை கூட்டிக்கொண்டு போகிறார்.
மறுபக்கத்தில் கிரிஷ் ஸ்கூலில் தனியாக இருக்கும்போது அங்கு வரும் ரோகிணியின் பிஏ தினேஷ் கிரிஷிடம் உன்னுடைய அம்மா தான் கூட்டிட்டு வர சொன்னாங்க என்று ஏமாற்றி காரில் கடத்தி செல்கிறார். அதைத்தொடர்ந்து ஸ்கூலுக்கு வந்த ரோகிணியும் மனோஜும் கிரிஷை தேடி விட்டு அவன் எங்கேயும் இல்லை என்பதால் வாட்ச்மேனிடம் கேட்க, அதற்கு அவர் வேறு ஒரு நபருடன் போய்விட்டார் என்று சொல்கிறார்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி தான் கல்யாணி! உண்மையை உளறிய மனோஜ், விஜயா எடுத்த முடிவு! தவிக்கும் மீனா
இதனால் மனோஜ்க்கு சந்தோஷம் வருகிறது. அதனால் ரோகிணியை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுகிறார். பிறகு வீட்டிற்கு வரும் மனோஜ் சந்தோஷமாக வர, விஜயா என்னவென்று கேட்டதும் கிரிஷ் காணாமல் போனதை பற்றி சொல்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்க முத்து விஜயா மீது சந்தேகப்படுகிறார்.
ஏற்கனவே அம்மா தான் கடத்துனாங்க இப்பவும் இவங்க ஏதோ பிளான் பண்ணி அந்த பையனை கடத்தி இருக்காங்க என்று சொன்னதும், அண்ணாமலை விஜயா விடம் உண்மையை சொல்லு என்று மிரட்டுகிறார். அதற்கு விஜயா நான் எல்லாம் அப்படி செய்யவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் ரோகிணிக்கு அவருடைய பிஏ தினேஷ் போன் செய்து கிரிஷை நான் தான் கடத்தி வச்சிருக்கிறேன். இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் விட்டுருவேன் இல்லை என்றால் கிரிஷ் உடன் நேராக வீட்டிற்கு வந்து உண்மையை சொல்லி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பயந்து போன ரோகிணி என் பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை சும்மா விடமாட்டேன் என்று கதறி அழ, தினேஷ் எனக்கு பணம் தான் முக்கியம் என்று மீண்டும் மிரட்டுகிறார்.
இதனால் ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் முத்துவே கிரிஷை தேட ஆள் அனுப்புகிறார். இந்த நிலையில் கிரிஷ் பற்றிய உண்மைகள் முத்துவுக்கு தினேஷ் மூலமாக தான் தெரிய வருமா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. பல மாதங்களாக ரோகிணி நாடகம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அலுத்து போய் இருக்கின்றனர். இந்த வாரமாவது முத்து கண்டுபிடிக்கிறாரா? என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications