சிறகடிக்க ஆசை: பணத்தோடு, ரோகிணியின் அப்பா ரகசியத்தையும் உடைத்த ஜீவா.. விஜயா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் ஏற்கனவே மனோஜ் மற்றும் ரோகிணியிடம் பணம் கொடுத்த விஷயத்தை ஜீவா குடும்பத்தினர் இடம் சொல்கிறார். அப்போது ரோகிணியின் அப்பா விசயமும் தெரிய வருகிறது.
ஒரு வழியாக ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த தருணம் இன்று நடைபெற்றது. ஆனால் சில எதிர்பார்க்காத சம்பவங்களும் நடைபெற்றது. நாம நினைத்தது ஒன்று சிறகடிக்க சீரியலில் இன்று நடந்தது வேறு விதமாகவும் இருந்தது. அதாவது இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து இன்று ஒரு பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று அங்கிருந்த டேபிளை எடுத்து போட்டு கோர்ட்டு செட்டப்பில் மனோஜை நிற்க வைக்கிறார்.

அதை பார்த்து கோபமான மனோஜ் எதுக்குடா இப்ப இப்படி பண்ணிட்டு இருக்க, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு என்று திட்ட, அதற்கு அவசரப்படாத இந்த வீட்டுக்குள் ரெண்டு குற்றவாளிகள் இருக்காங்க ஒரு குற்றவாளியை முதலில் விசாரிச்சிடலாம் என்று தன்னுடைய விசாரணையை தொடங்குகிறார். அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச 27 லட்சம் ரூபாயை இவன் எடுத்துட்டு ஓடிட்டான்.
அதை இவன் கிட்ட இருந்து ஒரு பொண்ணு ஏமாத்திட்டு கனடா போனதெல்லாம் ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தான். ஆனால் இப்போ இன்னொரு விஷயம் சொல்ல போறேன். அந்த பொண்ணு கிட்ட இருந்து நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடியே 27 லட்சத்துக்கு வட்டி போட்டு முப்பது லட்சமாக வாங்கிட்டாங்க. அதை நம்ம கிட்ட இருந்து மறைச்சிருக்காங்க என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

அதற்கு மனோஜ் இவன் பொய் சொல்றான் என்று வழக்கம்போல சாதிக்கிறார். ஆனால் ரோகிணி அய்யோ இவன் கண்டுபிடித்துவிட்டானே என்று அதிர்ச்சி அடைந்தாலும் இவன்கிட்ட சாட்சி எல்லாம் இருக்க போறது கிடையாது என்று எங்க மேல பொய் குற்றச்சாட்டு வைக்கிறீங்க உங்ககிட்ட சாட்சி இருக்கா என்று கேட்க, அதற்கு முத்து நீங்க நல்லா கேள்வி கேட்டீங்க. என்கிட்ட சாட்சி இருக்கு என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அதற்கு ரோகிணி இவரே ஒரு ஆளை செட் பண்ணி இந்த மாதிரி சொல்ல சொல்லுவாரு என்று திமிரா பேச, அதற்கு மீனா என் புருஷன் அப்படி எல்லாம் செய்ய சொல்றவரு கிடையாது என்று முத்துக்காக சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கும் போது கொஞ்சம் இரு மீனா நான் இப்போ ஒரு சாட்சியை கூட்டிட்டு வரேன் என்று ஜீவா என கூப்பிட்டதும் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

ஜீவா வீட்டு வாசலில் நிற்கின்றார். அப்போது அண்ணாமலை இடம் மனோஜை ஏமாத்துனது நான்தான் என்று சொன்னதும் விஜயா அவரை திட்டுகிறார். அதற்கு என்ன மன்னிச்சிடுங்க அங்கிள் உங்க பையன் உங்ககிட்ட இருந்து பணத்தை ஏமாத்திட்டு தூக்கிட்டு ஓடணும்னு நினைச்சாரு. நான் அவருகிட்ட இருந்து தூக்கிட்டு போயிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது விஜயா இவகிட்ட எதுக்கு பேசுறீங்க?
ரவி போலீசுக்கு போன் பண்ணு என்று சொல்ல, எதுக்கு போன் பண்ணனும் நான்தான் உங்க பையன் கிட்ட வாங்குன பணத்தை கொடுத்துட்டேனே அதுவும் வட்டியோட எப்பவோ குடுத்துட்டேன். போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு தான் கொடுத்தேன் என்று அந்த பேப்பரையும், மனோஜ்க்கு அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுன பில்லையும் கொடுக்கிறார்.

அதை ஸ்ருதியும் ரவியும் செக் பண்ணி பார்த்துவிட்டு உண்மைதான் என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அப்போது ஜீவா தான் பியூட்டி பார்லருக்கு போன விஷயமும் அங்கு வச்சு ரோகிணி இடம் மாட்டிக்கொண்டதும் பிறகு போலீஸிடம் வைத்து பணத்தை வாங்கிய விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதனால் மொத்த உண்மையையும் உடைந்து விட்டதால் மனோஜ் ரோகிணியும் பேச முடியாமல் இருக்கின்றனர்.
அப்போது ஜீவா இப்ப கூட மனோஜுக்காக இங்க வரல. உங்க மகன் முத்துவுக்காக தான் வந்தேன் என்று சொல்லி உண்மையை சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். மொத்த உண்மையையும் வீட்டுக்கு தெரிந்ததும் மனோஜ் அப்படியே ரோகினி மீது பழியை தூக்கி போட்டு விடுகிறார்.
நான் இந்த பணத்தை வீட்டுக்கு கொடுத்துவிடலாம் என்று சொன்னேன். ரோகிணி தான் பிசினஸ் பண்ணலாம்னு எனக்கு ஐடியா கொடுத்து ரெஸ்டாரன்ட் தொடங்க வைத்தா என்று சொன்னதும் விஜயா கோபத்தில் முறைத்து பார்க்கிறார். அதோடு விஜயா ரோகிணியிடம் நீ பிசினஸ் தொடங்குவதற்கு உங்க அப்பா தந்த பணம் தானு சொல்லி என்னை ஏமாத்திட்டியே என்று கேள்வி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications