சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு விஜயா கொடுத்த பனிஷ்மென்ட்.. முத்து பிடித்த பாயிண்ட்! மனம் மாறும் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய உண்மைகள் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் விஜயா எதிர்பார்க்காத பனிஷ்மென்ட் கொடுக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜின் சட்டையை பிடித்து ஜீவாவிடம் இருந்து பணம் வாங்கிய உண்மையை என்கிட்ட ஏன் மறைச்ச என்று கேட்க, அதற்கு மனோஜ் இதெல்லாம் ரோகிணி கொடுத்த ஐடியா தான்மா என்று ரோகிணியை கோர்த்து விடுகிறார். உடனே விஜயா ரோகிணியை கன்னத்தில் அறைகிறார்.

எதுக்குடி இந்த விஷயத்தை என்கிட்ட மறைச்சே... என்று கேட்க மனோஜ் படித்திருக்கிறானே தவிர அவனுக்கு எந்த வேலைக்கும் போக தெரியல. நான் இதை பண்ணவில்லை என்றால் அவன் இன்னும் பார்க்கல தான் படுத்து தூங்கிட்டு இருந்திருப்பான். இது மட்டுமில்லாமல் நிறைய ஜாப் ஆப்பர் வந்தது நான் சொல்லியும் அவர் ஓனரா தான் இருப்பேன்னு சொல்லி எங்கேயுமே வரல.
அதனாலதான் நான் இப்படி, பண்ணுனேன் என்று சொல்ல அதற்கு விஜயா அந்த பணத்தை நீ என்கிட்ட கொடுத்து இருந்தா நான் பண்ணி இருப்பேனே என்று கேட்க, அதற்கு நீங்க அம்மாவா எதுவுமே பண்ணலையே என்று ரோகிணி சொன்னதும் நான் அம்மாவா எதுவும் பண்ணலையா? என்று இன்னொரு அறை விடுகிறார். உடனே ரோகிணி திரும்பி பார்க்க மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார்.

அப்போது ஸ்ருதி ரெண்டு பேருமே தப்பு பண்ணி இருக்காங்க ஒருத்தருக்கு மேல மட்டும் நீங்க பனிஷ்மென்ட் கொடுக்கணுமா? என்று சொன்னதும் முத்து, பல குரல் சொன்னதுதான் கரெக்ட் என்று சொல்கிறார். இதனால் கோபமான விஜயா பாருடி உன்னால என்னை எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்காதுன்னு நான் பெருமையா பேசிட்டு இருந்தேன்.
ஆனா நீ என் மூஞ்சில கரியை பூசிட்டல என்று மீண்டும் அடிக்க போக, அண்ணாமலை விஜயாவை தடுத்து நிறுத்துகிறார். பிறகு ரோகிணியை ரூமுக்குள் போக சொல்லி விஜயாவை சமாதானப்படுத்துகிறார். அதற்கு விஜயா என்னமோ இவ இல்லனா என் புள்ளையை வளர்த்திருக்கவே மாட்டேங்குற மாதிரி இவ பேசுறா.. அவனை படிக்க வைத்து வளர்த்தது யாரு என்று கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கும் போது மனோஜ் ரூமுக்கு போக முயற்சி செய்கிறார்.

அதற்கு விஜயா அவரை தடுத்து நீ அங்க போக கூடாது போய் உட்காரு என்று மிரட்டுகிறார். பிறகு மீனா ரூமுக்கு போய் ரோகிணியை சமாதானம் செய்ய போகும்போது மீனாவையும் போகக்கூடாது என்று விஜயா திட்டுகிறார். உள்ளே ரோகிணி அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா கிச்சனுக்கு சென்று டீ போட்டுக் கொண்டிருக்க முத்து இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலையே அம்மா பார்லர் அம்மாவை அடிப்பாங்கனு நான் நினைக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு மீனா நீங்க ஆதாரம் கொண்டு வரலைன்னா அவங்க இதுவரைக்கும் நம்பி இருக்க மாட்டாங்க. நீங்க தான் பொய் சொல்லி இருப்பிங்கன்னு அப்படியே மாற்றிவிட்டு இருப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதியும் ரவியும் வருகிறார்கள். அவர்களும் ஆண்டி அடிப்பாங்கன்னு நாங்க நினைக்கல, அதுவும் இல்லாம அடிக்கணும்னு முடிவு பண்ணி இருந்தா ரெண்டு பேரையும் அடிச்சிருக்கணும் அவங்க புள்ளையை மட்டும் சேவ் பண்ணிட்டு அடுத்த வீட்டு பொண்ணு மேல மட்டும் பழியை தூக்கி போட்டு கோவத்தை காட்டுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் பிரிட்ஜை திறக்க வந்து இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து, ஆக மொத்தம் ஜீவாவும் இவனுக்கு திறமை இல்லைன்னு சொல்லிட்டு விட்டுட்டு போயிட்டா. அதே மாதிரி இப்ப இவன் பொண்டாட்டியும் இவனுக்கு திறமை இல்லைன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி இருந்தாலும் ரோகிணி அடி வாங்கும் போது இவர் அமைதியா அவங்க மேல மொத்த பழியும் தூக்கி போட்டுட்டு நின்னுட்டு இருக்கிறார் வொர்ஸ்ட் ஹஸ்பெண்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் கேட்ட மனோஜ் ரோகிணியை பார்க்க ரூமுக்குள் போகிறார். அங்கு ரோகினியை கூப்பிட அதற்கு ரோகிணி கோபப்பட்டு நீ எனக்கு சப்போட்டா கூட இல்லை இதுதான் நல்ல புருஷனுக்கு அழகா என்று திட்டுகிறார். அதற்கு மனோஜ் நீ என்னை முட்டாள் போல பேசுனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நீ அப்படி பேசியிருக்க கூடாதுன்னு சொல்ல, அதற்கு ரோகிணி நான் உண்மையை தானே சொன்னேன். நீ என்னை கல்யாணம் பண்ணின பிறகு கூட வேலை வெட்டிக்கு போகாம தானே இருந்த என்று பதிலடி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications