மீனாவுக்கு தெரிய வந்த உண்மை.. கலங்கி நிற்கும் முத்து.. செல்வம் கொடுத்த அதிர்ச்சி! எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் சத்யா கீழே விழுந்து கையில் அடிபடவில்லை அவருடைய கையை யாரோ முறித்துவிடுகிறார்கள் என்ற உண்மையை டாக்டர் மூலம் மீனா தெரிந்து கொள்கிறார்.
அதே நேரத்தில் சத்யா அவமானப்படுத்தியதால் கோபத்தில் முத்து மீண்டும் குடிக்க தொடங்குகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சத்யா எனக்கு அட்வைஸ் பண்ணுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க அதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அவமானப்படுத்த முத்து கோபமாக அங்கிருந்து வெளியேறுகிறார். அதைத் தொடர்ந்து கார் செட்டுக்கு வந்த முத்து அங்கிருந்த சரக்கை எடுத்து தண்ணி ஊத்தாமலே குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வம் என்னாச்சுடா என்று கேட்க அதற்கு சத்யா அவமானப்படுத்தி பேசியதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறார்.
அதோடு நான் டிரைவராக இருந்தா கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும் என்னால என் பொண்டாட்டிக்கு எதுவுமே செய்ய முடியாதுன்னு சொல்றான். நேர்மையாய் இருக்கிறது தப்பா? என்று முத்து அழுது கொண்டிருக்கிறார். அதோடு மீனாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவ எப்படி தாங்குவா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் ஹாஸ்பிடலில் ஸ்கேன் ரிப்போர்ட் வருகிறது.

அதில் சத்யாவின் கையெழும்பு உடைந்து இருப்பதாகவும் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மீனா ஹாஸ்பிடலுக்கு வந்ததும் சீதாவும் அம்மாவும் சொல்கின்றனர். அதோடு முப்பதாயிரம் பணம் கட்ட வேண்டும் என்று சொல்லி பணத்துக்கு என்ன பண்ணுதுன்னு தெரியல நம்ம கிட்ட 18,000 தான் இருக்கு என்று அழுது புலம்பி கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா முத்துவுக்கு போன் போட முத்து போனை எடுக்க மறுக்கிறார்.

பிறகு மீனா தெரிந்தவர்களுக்கு எல்லாம் போன் போட்டு பார்க்க எல்லோரும் பணம் இல்லை என்று சொல்லிவிடுகின்றனர். அப்போது டாக்டரிடம் பேசிப் பார்த்தால் ஏதாவது உதவி கிடைக்கும் என்று மீனா டாக்டரிடம் பேச அவர் கொஞ்சம் கொஞ்சமா பணம் கட்டுற மாதிரி ஏற்பாடு செய்து கொடுக்கிறார். அதோடு சத்யா பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் அடிபடல சண்டையில் யாரோ கைய புடிச்சு முறுக்கி இருக்காங்க என்று சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார்.

அதைத் தொடர்ந்து சத்யாவுக்கு ஆபரேஷன் நடைபெற்று நார்மல் வார்டுக்கு வந்ததும் சத்யாவிடம் மீனா உன்னை யார் அடிச்சது என்று கேட்க அதற்கு முதலில் சத்யா இல்ல நான் பைக்கில் இருந்து கீழே விழுந்துட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஆமா பைக்ல இருந்து கீழே விழல என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications