போனை எடுத்து பார்த்த மீனாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. ஸ்ருதியின் அம்மாவால் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் மீனா, ரோகினி, ஸ்ருதி மூவரும் கல்யாணத்துக்கு பிறகு தங்களுடைய கணவர் மாறிவிட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இவர்களின் நடவடிக்கையை பார்த்து விஜயாவுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது.
அதைத்தொடர்ந்து ஸ்ருதியின் அம்மா வாங்கி கொடுத்த கிப்ட் வவுச்சரால் ஸ்ருதி மற்றும் ரவி இடையே பிரச்சனை வெடிக்கிறது. அதுபோல மனோஜும் ரோகினி இடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் விஜயாவின் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா, ரோகினி, ஸ்ருதி எல்லோரும் கிச்சனில் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோம் இப்போ எப்படி இருக்கோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஸ்ருதி நாம இங்கே பீல் பண்ணி பேசிக் கொண்டிருப்பது போலத்தான் மேலேயும் அவங்களும் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அங்கு சிரிப்பு சத்தம் கேட்டு இவர்களை மேலும் கோபப்படுத்துகிறது.

பிறகு அடுத்த நாள் காலையில் மனோஜ் மாடியிலிருந்து எழுந்து வர விஜயா பதட்டத்தில் என்ன ஆச்சு உனக்கும் ரோகிணிக்கு எதுவும் பிரச்சனையா என்று கேட்க அதற்கு மனோஜ் எதுவுமே சொல்லாமல் ரூமுக்குள் போகிறார். அதனால் பயந்து போன விஜயா அண்ணாமலை இடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார். பிறகு ரோகினி இடம் வந்து உனக்கும் மனோஜுக்கும் எதுவும் பிரச்சனையா என்று கேட்க அதற்கு ரோகிணி அப்படி எதுவும் இல்ல ஆண்ட்டி என்று சமாளிக்கிறார்.
பிறகு மனோஜ் ஹோட்டலில் வேலை செய்த விஷயத்தை சொல்லிவிட்டு ரோகிணியிடம் இனி நான் எனக்கு தகுந்த வேலைக்கு தான் போவேன். நீ சொன்ன வார்த்தைக்காக தான் நன் ஹோட்டலுக்கு எல்லாம் வேலைக்கு போனேன். ஆனா அங்க எனக்கு மரியாதை கிடைக்கல என்று சொல்ல அதனால் ரோகிணி கோவப்படுகிறார். மறுபக்கத்தில் முத்து மாடியில் இருந்து வர விஜயா எதுவுமே கேட்காமல் இருக்கிறார்.

பிறகு ரூமுக்கு வந்த முத்து சத்யாவின் வீடியோவை ஃபோனில் பார்த்து கோபத்தில் பெட்டில் குத்திக் கொண்டிருக்கிறார். அதை அந்த பக்கமாக வந்த மீனா பார்த்துவிட்டு முத்து குளிக்க போனதும் போனை எடுக்கிறார். ஆனால் குளிக்க போன முத்து மீண்டும் வந்து அடுத்தவங்களோட போனை எடுக்கறியே என்று திட்டிவிட்டு மீனா விடமிருந்து போனை பிடுங்கி கொண்டு போகிறார். இன்னொரு பக்கம் ரவியும் மொட்டை மாடியில் இருந்து வர விஜயா மீண்டும் பதறுகிறார்.
ரதியிடமும் என்ன ஆச்சு என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் ஆனால் ரவி அதை கண்டு கொள்ளாமல் மீனாவிடம் வந்து ஸ்ருதி ரொம்ப பீல் பண்ணி இருப்பா சாப்பிடாம இருந்திருப்பா என்று வருத்தப்படுகிறார். அதற்கு மீனா அப்படியெல்லாம் எதுவும் நடக்கல என்று சொல்கிறார். ஆனாலும் ரவி நம்பாமல் பேசிக்கொண்டே இருக்க ரூமுக்கு போய் பாருங்க என்று மீனா சொல்ல அங்கே ரூமுக்கு வந்தால் ஸ்ருதி பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பதை பார்த்து ரவி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதைப் பற்றி விஜயா என்ன ஆச்சுன்னு தெரியலையே வீட்ல எல்லாரும் ஒவ்வொரு பக்கமா சண்டை போட்டு முறுக்கிக்கிட்டு அலையறாங்க என்று அண்ணாமலை இடம் புலம்பிக் கொண்டிருக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications