தூக்கத்தில் வேலையை உளறிய மனோஜ்.. வீட்டை விட்டு போக போறது யார்? குடும்பத்தில் மீண்டும் வெடித்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பிப்ரவரி 9ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அந்த வகையில் மனோஜ் தான் வெயிட்டராக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தை வீட்டில் மறைத்து வைத்திருக்கும் நிலையில் ரோகிணி முன்பு தூக்கத்தில் புலம்பிவிடுகிறார்.
மறுபக்கத்தில் ரோகினி வாங்கிட்டு வந்த சாப்பாடு முத்து எடுத்து சாப்பிட்டதால் விஜயா வீட்டில் மீண்டும் பிரச்சனை வெடிக்கிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து யார் வெளியே போக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கிச்சனில் மீனா சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வரும் விஜயா நீ விட்ட சவாலில் ஜெயிச்சுட்டேன்னு இப்படி ஆடாத, என்று திட்டிக் கொண்டிருக்க அதற்கு மீனா நான் எதுக்கு உங்களை வெறுப்பேத்தணும்? அவர் கையால நான் தாலி கட்டிக்க வேண்டும் என்று ஆசையா இருந்து அதனால கட்டிக்கிட்டேன் அவ்வளவுதான் என்று முகத்தில் அடித்தது போல பதில் கொடுக்கிறார்.
அதை தொடர்ந்து கல்யாணத்தில் எடுத்த போட்டோக்களை முத்து அண்ணாமலையிடம் காட்ட அதை பார்த்த அண்ணாமலை நல்லா இருக்குன்னு சொல்ல அதைத் தொடர்ந்து ரவியும் போட்டோ சூப்பரா இருக்குன்னு சொல்லிக் கொண்டிருக்கும் பொது ஸ்ருதி போட்டோல மீனா அழகா இருக்கீங்க என்று சொல்கிறார். அடுத்ததாக மனோஜ் போட்டோவை பார்த்ததும் கிளாரிட்டியே இல்லையடா என்று வழக்கம்போல வாயை கொடுத்து முத்துவிடம் திட்டு வாங்குகிறார்.
பிறகு நான் இந்த போட்டோவை பிரேம் போட்டு ஹாலில் மாட்ட போறேன் என்று முத்து சொல்ல அதற்கு விஜயா ஹால்ல மாட்டக்கூடாது என்று சொல்ல அதற்கு அண்ணாமலை ஏன் ஹாலில் மாட்டினால் என்ன தப்பு என்று கேட்க அதற்கு விஜயா அங்கு இடம் இல்லையே என்று சொல்ல அதற்கு முத்து இந்த ஓடுகாலி போட்டா எல்லாம் மாட்டி இருக்கும்போது எங்க போட்டோ மாட்டுனா என்ன தப்பு என்று கேட்டு, நான் முதலில் சின்னதா தான் பிரேம் போட்டு மாட்டணும்னு நினைச்சேன்.

ஆனா இப்போ பெருசா பிரேம் போட்டு மாட்ட போறேன் என்று விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு இரவு முத்துவும் மீனாவும் தங்களுடைய ரூமில் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அடுத்த ரூமில் ஸ்ருதியும் ரவியும் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஸ்ருதியிடம் ரவி தோற்றுப் போனதால் ரவியை ஸ்ருதி கலாய்த்து சிரித்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக மனோஜ் தூங்கிக் கொண்டிருக்க ரோகினி நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது வெயிட்டர் போல மனோஜ் ஹோட்டலில் என்னவெல்லாம் இருக்கிறது என்று ஒப்பிக்க அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாகி அவரை எழுப்ப அப்போ மனோஜ் சாயங்காலம் பஜார்ல நடந்து போயிட்டு இருக்கும்போது ஒரு கடையில வடையை போடுவதை பார்த்தேன். அதை சாப்பிடலாம்னு போகும்போது உன்னை கூப்பிடாம எனக்கு சாப்பிட மனசு வரல.
அந்த நேரத்தில் அங்கிருந்த மெனு கார்டில் இருந்ததை படித்தோன் அது என் மனசுல பதிஞ்சுடுச்சு என்று சமாளிக்க பிறகு ரோகிணியும் மனோஜும் கிச்சு முச்சு முட்டி சந்தோஷப்பட்டு சிரித்துக் கொண்டிருக்க மூன்று ரூமில் இருந்து சத்தம் வருவதால் விஜயா தூங்க முடியாமல் அண்ணாமலையிடம் எழுப்பி புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்த நாள் காலையில் பூக்கடையில் மீனா இருக்கும்போது ரோகிணி வெளியே போயிட்டு ஏதோ பார்சலில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
அதை டேபிளில் வைத்துக் கொண்டு மனோஜை கூட்டிக்கொண்டு வருவதற்குள் அங்கு வரும் முத்து மீனாதான் இதை வாங்கி வைத்திருப்பார் என்று நினைத்து பார்சலை பிரித்து சாப்பிட அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பிறகு மனோஜ் ஏண்டா யாரு வாங்கிட்டு வந்தது என்று கேட்டு சாப்பிட மாட்டியா? இது எங்களுக்காக வாங்கிட்டு வந்தது அதை எப்படி நீ சாப்பிடலாம் என்று சண்டை போட அதற்கு முத்துக்கள் டேபிள் மேல இருந்துச்சு சாப்பிட்டேன் என்று அசால்ட்டாக சொல்ல அங்கு வாக்குவாதம் நடைபெறுகிறது.

அப்போது அண்ணாமலை வர அவர் என்ன பிரச்சனை என்று விசாரிக்க அங்கு வந்த மீனா அண்ணாமலை இடம் நான் வாங்கி வைத்தது என்று தெரியாமல் சாப்பிட்டு விட்டார் என்று சொல்ல அதற்கு விஜயா இவன் வம்பு இழுக்குறதுக்காகவே இப்படி பண்றான் .என்னைக்கு இவனுக்கு மீனா வெளியில சாப்பாடு வாங்கி கொடுத்தா? இவன் வேணும்னு இப்படி பண்ணிட்டு இருக்கிறான் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் முத்து நான் மொத்த சாப்பாடையும் சாப்பிடாமல் எழுந்திரிக்க மாட்டேன் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications