வீட்டை விட்டு போன ரோகிணி எடுத்த முடிவு.. குடும்பத்திற்கு வந்த அதிர்ச்சி தகவல்.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி பத்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் வேலைக்கு போகாமல் வீட்டில் இத்தனை நாளாக ஏமாற்றிக் கொண்டிருந்த உண்மை தெரிய வந்ததும் ரோகிணி வீட்டை விட்டு கிளம்பி வெளியே போகிறார். அதுவும் தன்னுடைய அம்மா மற்றும் குழந்தை இருக்கும் ஊருக்கு கிளம்பி போயிருக்கிறார்.
இது தெரியாமல் வீட்டில் மொத்த குடும்பமும் ரோகிணியை தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா கிருஷ் மற்றும் அவருடைய அம்மா இருக்கும் ஊருக்கு எதுக்காக ரோகிணி போனாங்க என்று கேள்வி எழுப்ப அதனால் மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது.
அதே நேரத்தில் மனோஜின் பித்தலாட்டங்கள் வீட்டிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இனி அடுத்ததாக ரோகிணி மறைத்த உண்மைகளும் வீட்டிற்கு தெரிய வர இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி அழுது கொண்டே இருக்க அதற்கு அவருடைய தோழி வித்யா நான் போய் காபி போட்டுட்டு வரேன் என்று காபி போட போக அந்த நேரத்தில் ரோகினி யோசித்துக் கொண்டே இருக்கிறார். திடீரென்று கண்ணை துடைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப அந்த நேரத்தில் அங்கு வரும் வித்யா ரோகிணியை காணாமல் மனோஜ்க்கு போன் போட்டு விசாரிக்கிறார்.
மனோஜ் ரோகிணி வெளியே போயிருக்கா என்று சொல்ல அதற்கு வித்யா இங்கே தான் வந்தா அழுதாகிட்டே இருந்தா இப்ப எங்க போனான்னு தெரியல. போன் வேற ஸ்விட்ச் ஆப்னு வருது என்று சொல்ல மனோஜ் பதற்றம் அடைகிறார். பிறகு விஜயாவிடம் ரோகிணி காணாமல் போன விஷயத்தை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் பதறிப் போய் இருக்கின்றனர்.

அப்போது இத்தனை பிரச்சனைக்கும் காரணம் முத்து தான் என்று மனோஜ் முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு வர இருவருக்கும் இடையே அடிதடி ஏற்படுகிறது. அப்போது அண்ணாமலை தடுத்து நிறுத்தி முதலில் ரோகிணியை போய் தேடி கண்டுபிடித்து அவளிடம் மன்னிப்பு கேட்டுட்டு கூட்டிட்டு வா என்று மனோஜ் அனுப்ப நான் எங்கப்பா போய் தேடுவேன் என்று சொல்ல அதற்கு முத்துவையும் அண்ணாமலை கூட அனுப்பி வைக்கிறார்.
அப்போது மனோஜ் ரோகினிக்கு ஃபோன் போட்டுக் கொண்டே இருக்க அதற்கு முத்து சுவிட்ச் ஆப் பண்ணுன போனுக்கு எத்தனை தடவை நீ போன் பண்ணாலும் அது சுவிட்ச் ஆப் என்று தான் சொல்லும். நீ ஒழுங்கா பார்லருக்கு போன் பண்ணி விசாரி என்று சொல்ல, அங்கு இருந்த பெண் இங்கே வந்தாங்க வந்து கலெக்ஷன் பணம் 3 ஆயிரத்தை எடுத்துட்டு எங்கேயோ கிளம்பி போயிட்டாங்க.

குமரிபாளையத்துக்கு பஸ் பற்றி விசாரிச்சாங்க என்று சொல்ல இருவரும் என்னவென்று புரியாமல் இருக்கின்றனர். பிறகு முத்துக்கு மீனா போன் போட்டு என்னவென்று விசாரிக்க முத்து ஏதோ குமரி பாளையத்துக்கு பஸ் பற்றி விசாரிச்சதா சொல்றாங்க என்று சொல்கிறார். அதற்கு மீனா அதாங்க அது க்ரிஷ் அவனோட பாட்டியும் இருக்கிற ஊர் என்று சொல்ல முத்து நீ அந்த கார்டை எடுத்துட்டு சூப்பர் மார்க்கெட் கிட்ட வந்து வெயிட் பண்ணு நீ எங்க கூடவா போய் பாத்துட்டு வந்துடலாம் என்று கூப்பிடுகிறார்.
வரும் வழியில் முத்து மனோஜை வெறுப்பேற்றி பாட்டு படித்துக் கொண்டே வருகிறார். அதற்கு மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு இவன் கூட ஏம்மா என்னை அனுப்பினீங்க. நான் தனியாவே போய் தேடுறேன் என்று சொல்ல, அதற்கு விஜயா இப்போதைக்கு அவனுடைய தயவு கொஞ்சம் தேவை பொறுமையா இரு என்று சமாதானப்படுத்துகிறார். பிறகு மீனா வந்ததும் மனோஜை பின்னாடி அனுப்பிவிட்டு மீனாவை முன்னாடி சீட்டில் உட்கார வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்து எல்லாரும் புருஷன் கிட்ட சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு தானே போவாங்க? இந்த பொண்ணு என்ன குமரிபாளையத்துக்கு போய் இருக்கு என்று கேள்வி கேட்டு அதற்கு அவரே ஒருவேளை பெரிய வக்கீல் ஏதாச்சும் பார்க்க போயிருக்குமோ? இவன் கூட என்னால வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி விவாகரத்து வாங்கத்தான் போயிருக்கும் நினைக்கிறேன் நீயும் நல்லா வக்கிலை பார்த்துக்க என்று மனோஜை வெறுப்பேத்துகிறார்.

அதை தொடர்ந்து மீனா முத்துவை அமைதியா வாங்க இல்லனா மாமாவுக்கு போன் பண்ணி சொல்லிடுவேன் என்று மிரட்ட பிறகு முத்து காரை ஓரமாக நிறுத்தி இரண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிரித்து சாப்பிட்டுக்கொண்டு நான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடல பசிக்குது என்று சொல்கிறார்.
பிறகு மனோஜிடமும் டேய் நீ சாப்டியா என்று கேட்க மனோஜ் வேண்டாம் என்று சொல்ல இப்பவே பசிக்குதுனா சொல்லிரு வேற எங்கேயும் வழியில் காரை நிறுத்த மாட்டேன் என்று முத்து மிரட்டுகிறார். பிறகு மூவரும் ரோகினியை தேடி குமரி பாளையம் வருகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications