முத்து மீது பழி போட்ட மொத்த குடும்பம்.. ஆனால் மீனா செய்ததை பாருங்க.. செம அதிரடி காட்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 13ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் முத்துக்கு சப்போர்ட் செய்து மீனா, விஜயா மற்றும் ரோகினியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதுவரைக்கும் அமைதியாக இருந்த மீனா இன்று பதிலுக்கு பதில் பேச ரோகிணியும் விஜயாவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அதுபோல ரோகிணி தன்னுடைய புருஷன் வேலை பார்க்கவில்லை என்றால் யாரும் இனி கிண்டல் செய்யக்கூடாது என்று சொன்ன நிலையில் முத்துவின் டிரைவர் வேலையை குறைத்து பேசியதால் மீண்டும் வீட்டிற்குள் பிரச்சனை வந்திருக்கிறது.

அதோடு தப்பு செய்த மனோஜை விட்டு விட்டு மொத்த குடும்பமும் முத்துவை டார்கெட் செய்து அவர் மீது பழியை போட முத்து கோபப்பட்டு பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று எபிசோடில் ஆரம்பத்தில் மொத்த குடும்பமும் தப்பு செய்த மனோஜை விட்டுவிட்டு முத்துவை திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அண்ணாமலை நீ செய்கிற நல்லது எல்லாம் கோவத்துல வெளியே தெரியாம போயிடுது. முதல்ல உன் கோபத்தை அடக்கு, முதலில் என்ன பேசுறோம் என்பதை யோசித்து பேசு என்று திட்டுகிறார். அதுபோல இனி மனோஜ் பற்றி எதுவும் பேச கூடாது என்று கண்டிஷன் போடுகிறார்.
அதனால் ரோகினி ரூமுக்கு செல்ல, மனோஜ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ரோகினியை சமாதானம் செய்கிறார். அதோடு இனிமே இப்படி பண்ணாத உன்மேல வச்சிருக்கிற நம்பிக்கையை உடைக்காத. இனிமேல் இதுபோல நடந்தா நான் ஒரேடியா போயிடுவேன் என்று ரோகினி சொல்ல அதற்கு மனோஜ் உன்கிட்ட உண்மைய சொல்லலாம்னு தான் சொன்னேன். ஆனா அம்மா தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல,
இதை ரூமுக்கு வெளியே ஓட்டு கேட்டுக் கொண்டிருந்த விஜயா ரூமுக்குள் ஓடிப்போய் நான் உன் மனசு கஷ்டப்படக்கூடாதுனு தாம்மா அப்படி சொன்னேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்த கட்டத்தில் மறுநாள் காலையில் மனோஜ் இன்டர்வியூ கிளம்ப அப்போது ரோகிணி மேட்ச்ஸிங் ட்ரெஸ்ஸிங் எடுத்துக் கொடுத்து அனுப்புகிறார்.
வெளியே வந்ததும் முத்து மனோஜிடம் இன்னைக்கு இன்டர்வியூ போய் பாரு கிடைத்தால் சரி இல்லன்னா செட்டுக்கு வந்துரு ரெண்டு கார் இருக்கு, எடுத்து ஓட்டலாம் முப்பதாயிரம் கிடைக்கும் என்று கலாய்க்க, அதற்கு ரோகிணி அவர் கார் ஓட்ட உங்கள மாதிரி படிக்காதவரா? என்று சொல்ல அப்போது மீனா குறுக்கே வந்து கார் ஓட்டுவது ஒன்னும் கேவலமான வேலை கிடையாது. அவர் ஒன்னும் வேலை இல்லைன்னு பார்க்கல படுத்து தூங்கல என்று மனோஜை அவமானப்படுத்துகிறார்.
அதோடு மனோஜ் படிச்ச படிப்புக்கு பெரிய வேலை கிடைக்கும் அவனை தேடி வேலை வந்து கொடுப்பாங்க என்று விஜயா சொல்ல அதற்கு முத்து அப்போ இவ்வளவு நாளா அட்ரஸ் தெரியாம இருந்தாங்களா? இல்ல டிகிரி முடிக்காமல் இருந்தானா? என்று பதிலடி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை அண்ணாமலை இடம் போக அவர் மீனா சொல்றது சரிதான் எந்த வேலையும் கெளரவ குறைச்சல் கிடையாது என்று மனோஜ் நல்ல வேலை தேடிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு முத்துவும் சாப்பிட்டுவிட்டு கிளம்பிதும் விஜயா, மீனாவை கூப்பிட்டு அவன் அவ்வளவு பேசுறான் அடக்கி வைக்க மாட்டியா? என்று திட்ட அதற்கு நான் வீட்டுக்கு இப்போதான் வந்து இருக்கேன். ஆனா நீங்க இதை ஏற்கனவே பண்ணி இருக்கலாமே என்று பதிலடி கொடுக்க, அப்போது ரோகிணியும் விஜயாவோடு சேர்ந்து கொண்டு நீங்க எதுக்கு எனக்கும் என் புருஷனுக்கும் குறுக்க வந்தீங்க என்று கேட்க அதற்கு மீனா குறுக்க வந்தது நீங்கதான்,
நீங்க டிரைவர் வேலையை பத்தி தப்பா பேசியதால்தான் நான் வந்தேன் என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கடுத்து விஜயா பூக்கடை வைத்திருப்பது பற்றி தப்பா பேச அதற்கு மீனா என் மரியாதையை காப்பாற்றுவதற்காக தான் என்னுடைய சொந்த கால்ல நிக்கணும்னு என் புருஷன் வச்சு கொடுத்தாரு என்ற பதிலடி கொடுத்து கெத்தாக கடைக்கு கிளம்பி போகிறார். அதை பார்த்து காண்டாக விஜயா முத்து கொடுக்கிற இடத்தில்தான் இவா இவ்வளவு ஆடுறா, இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications