சிறகடிக்க ஆசை : ரோகினி அப்பா பற்றி பேசி மாட்டிகொண்ட மாமா.. முத்து செய்த செயல்.. அதிர்ச்சியில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தன்னுடைய மாமாவாக நடிப்பதற்காக கறிக்கடைக்காரரை செட் பண்ணி வைத்திருக்க அவர் வீட்டிற்கு வந்து மொத்த குடும்பத்தின் முன்பும் ரோகிணியின் அப்பாவை பற்றி பேசி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் முத்துவும் செல்வமும் ரோகிணியின் மாமா சரக்கு வாங்கிட்டு வந்திருப்பார் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே கறிக்கடைக்காரர் பெரிய குடிகாரராக இருக்கும் நிலையில் முத்து மற்றும் செல்வத்திடம் அவர் சிக்கும்போது மொத்த உண்மைகளும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December January 23th episode Uncle Rohini is stuck talking about dad

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா ரோகினியின் மாமாவை வரவேற்பதற்காக பரபரப்பாக அங்கே இங்கே ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனாவிடம் ஆரத்தி கரைச்சு வச்சாச்சா கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்புறம் திடீர் என்று ரோகிணியின் மாமாவை எங்க தங்க வைக்கிறது என்று யோசனை விஜயாவுக்கு வர ஆளாளுக்கு ஒவ்வொரு ஐடியா சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது மனோஜ் ரவியோட ரூம் பெருசா இருக்கு அங்கேயே கொடுத்து விடுங்க என்று ஐடியா கொடுக்க அதற்கு ரவி அப்போ நாங்க எங்க போய் தூங்குறது என்று வாக்குவாதம் செய்கிறார். அதற்கு முத்து இரண்டு ஓடுகாலிகலும் இங்க வந்து ரூமை பத்தி பேசிகிட்டு இருக்கு பாரு என்று திட்டுகிறார். அதை தொடர்ந்து ரோகிணி எங்க ரூம்மை கொடுக்கிறோம் என்று சொல்ல அதற்கு மனோஜ் அடைகிறார்கள் பிறகு சரி என்று சொல்லிவிடுகிறார்.

siragadikka aasai serial December January 23th episode Uncle Rohini is stuck talking about dad

அடுத்ததாக வெளியே ஒரு கார் வந்ததும் விஜயா மாமா வந்து விட்டார் என்று உள்ளே ஓடுகிறார். பிறகு எல்லாரையும் அழைத்துக் கொண்டு வெளியே வர காரில் இருந்து ஓவர் பில்டப் போடு மாமா இறங்குகிறார். எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு அங்கு இருக்கும் வயல்வெளிகளை பார்த்து அவர் வாய்ப்பிளக்க அவரை ரோகிணி ஆக்சன் மோடுக்கு மாற்றுகிறார். பிறகு ரோகிணி எல்லாரையும் மாமாவுக்கு அறிமுகம் செய்கிறார்.

அப்போது விஜயாவை இதுதான் என்னுடைய மாமியார் என்று அறிமுகம் செய்ய அதற்கு மாமா இவங்க தான் அம்மா மாதிரி ன்னு சொன்னியே அவங்களா என்று கேட்க அதற்கு விஜயா சந்தோஷப்படுகிறார். பிறகு ரோகிணி மீனா மற்றும் ஸ்ருதி என மூன்று பேரும் ஆரத்தி எடுத்து மாமாவை உள்ளே அழைத்து செல்கின்றனர். அப்போது அண்ணாமலை அப்பா வந்திருந்தா சந்தோஷமாக இருக்கும் என்று சொல்ல, அதற்கு மாமா அவர்தான் சின்ன வயசுலயே போயிட்டாரே...

siragadikka aasai serial December January 23th episode Uncle Rohini is stuck talking about dad

பீடி இழுத்து இழுத்து டிபி வந்து செத்து போயிட்டாரு என்று சொல்ல, இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியாகி குழப்பத்தில் இருக்கின்றனர். அப்போது ரோகிணி என்னோட அப்பாவை கேட்டாங்க என்று கதையை மாற்ற அதற்கு மாமா அவர் ரொம்ப பிசியா இருக்காரு, நிற்க்க கூட நேரம் இல்லாம ஓடிக்கிட்டே இருக்காரு. அதனால் தான் என்னை அனுப்பி வச்சாரு என்று சமாளிக்கிறார். அதோடு ரோகிணி அப்பா மாப்பிள்ளைக்கு சீர் செய்ய டிரஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்து அனுப்பி இருக்காங்க.

siragadikka aasai serial December January 23th episode Uncle Rohini is stuck talking about dad

மாப்பிள்ளைக்கு ஆம்லெட் போட சொன்னாரு என்று மாமா குழப்ப, எல்லோரும் என்னது ஆம்லெட் போட சொன்னாரா? என்று அதிர்ச்சியடைய அதற்கு ரோகிணி அப்பா பிரேஸ்லெட் வாங்கி கொடுத்திருப்பதாக தான் சொன்னாரு. அதைத்தான் மாமா இப்படி பண்ணியா சொல்றாரு என்று சமாளிக்கிறார். மறுபக்கத்தில் முத்துவும் செல்வமும் இளநீர் கொண்டுட்டு வர அப்போது செல்வம் வந்திருக்கிறவரு மலேசியாவில் இருந்து வந்திருக்காரு.

siragadikka aasai serial December January 23th episode Uncle Rohini is stuck talking about dad

கண்டிப்பா சரக்கு வாங்கிட்டு வந்திருப்பார். வெளிநாட்டு சரக்கு வேற லெவல்ல இருக்கும். அவர்கிட்ட கொஞ்சம் அடக்கிவாசித்து சரக்கு வாங்கு என்று சொல்லி முத்துவை உள்ளே அழைச்சிட்டு போகிறார். அப்போது ரோகினி மாமா தட்டில் எல்லாவற்றையும் வைத்து மனோஜ் ரோகிணியை மட்டும் அல்லாமல் அனைவரையும் கூப்பிடுகிறார். அதோடு விஜயாவை பார்த்து நீங்களும் வாங்க ஆன்ட்டி என்று கூப்பிட விஜயா அதிர்ச்சியாகிறார். அப்போது நீங்க பாக்குறதுக்கு ரொம்ப யங்கா இருக்கீங்க, உங்களை சம்பந்தி என்று கூப்பிட மனசு வரல என்று சொல்ல விஜயா வெட்கப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+