சிறகடிக்க ஆசை: முத்துவிடம் சிக்கிய கறிக்கடைக்காரர்.. விஜயாவுக்கு ரோகினியால் கிடைத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 24ஆம் தேதி எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் மீது முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. அதோடு முத்து அவரை சிக்க வைப்பதற்காக புது பிளான் போட்டிருக்கிறார்.
அதே நேரத்தில் கறிக்கடைக்காரரால் தான் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் ரோகிணி அவரை விரைவாக வீட்டில் இருந்து அனுப்பி வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் விஜயாவை பார்த்ததும் கறிக்கடைக்காரர் உங்களை எனக்கு சம்மந்தின்னு கூப்பிடவே மனசே வரல நீங்க அவ்வளவு யூத்தா இருக்கீங்க என்று சொல்ல, அதற்கு விஜயா வெட்கப்பட்டு நிற்கிறார். பிறகு ரோகிணி ஓட அப்பா 100 தட்டு சீர்வரிசை தான் வைக்க சொன்னாரு. ஆனால் நிறைய பேருக்கு பீட்சா கிடைக்கல, அதனால வர முடியல என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.

அதற்கு ரோகிணி மாமா விசாவை தான் பண்ணா இப்படி சொல்றது என்று சமாளிக்கிறார். அதற்குப் பிறகு உள்ள அந்த நேரத்தில் உள்ளே ஒரு முத்துவை பார்த்ததும் அவர் கையில் இளநீர் வைத்திருப்பதை பார்த்ததும் கறிக்கடைக்காரர் இளநீர் வெட்டுற பையன் என்று சொல்ல, அதற்கு முத்து யாரைப் பார்த்து இளநீர் வெட்டுற பையன்னு சொன்னீங்க என்று கோபப்பட, அதற்கு ரோகிணி கையில் இளநீருடன் இருக்கிறதுனால அப்படி சொல்லிட்டாரு என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு அண்ணாமலை இது என்னுடைய இரண்டாவது பையன் என்று சொல்ல, அதற்கு பாப்பா சொன்ன குடிகாரமுத்து இவர்தானா என்று கேட்டதும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது ரோகிணி வீட்டில் நடந்த சில விஷயங்களை மாமா கிட்ட சொன்னேன் அதனால அவர் இப்படி கேட்டுட்டாரு யாரும் எதுவும் மனசு வச்சுக்க வேண்டாம் என்று மன்னிப்பு கேட்கிறார். அப்போது ஸ்ருதி நீங்க மலேசியாவில் எங்க இருக்கிறீங்க என்னுடைய பிரண்டும் மலேசியாவில் தான் இருக்கா என்ற பிரண்ட் இருக்கிற இடத்தை குறிப்பிட்டு கேட்கிறார்.
அதற்கு கறிக்கடைக்காரர் இந்த பொண்ணு என்னமா சாப்பாடு பேரை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கு என்று மீண்டும் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். அப்போது முத்து இளநீர் வெட்டுவதற்காக அருவாவை கேட்க அப்போது மீனா அருவா எடுத்துக்கொண்டு கொடுக்கிறார். ஆனால் அந்த கத்தி ஷார்ப்பாக இல்லையே என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க அதற்கு கறிக்கடைக்காரர் கத்தியை சாணை பிடிக்கணும் என்ற வார்த்தையை சொல்லிவிட்டு பிறகு சமாளிக்கிறார்.

அப்போது முத்துவும் செல்வமும் இவரை பார்த்தா மலேசியாவில் இருந்து வந்த மாதிரியே இல்லை. இவரை குடிக்க வச்சாதான் இவர்கிட்ட இருந்து உண்மையை வாங்கணும் என்று பிளான் போடுகின்றனர். அதைத்தொடர்ந்து ரோகிணி அவரை ரூமுக்குள் அழைத்து சென்று நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரி டயலாக் பேசினா போதும் கிளம்புற வரைக்கும் அதை தவிர வேற எதுவும் பேசக்கூடாது என்று வார்னிங் கொடுக்கிறார்.

பிறகு வெளியே கறிக்கடைகாரர் வரும்போது விஜயா, ரோகினி ஸ்ருதியோடு காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த கறிக்கடைக்காரர் வெட்டிட்டு இருந்தா நாளைக்கு தான் சமைப்பீங்க போல, கொடுங்க நான் வெட்டுறேன் நம்ம வீட்டு வேலையை நாம தானே செய்யணும் என கத்தியை தீட்டி சரசரவென வெட்டி தள்ள இதை எல்லாரும் பார்த்து இவர் என்ன கறிக்கடையில் கொத்துக்கறி போடுற மாதிரி பண்ணுறாரே என்று சொல்ல ரோகிணி ஷாக் ஆகின்றார்.

ஆனால் விஜயா இவர் காய்கறி வெட்டி தள்ளுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது ரோகினி இவர் இருந்தா மாட்டிருவோம் போல என்று நீங்க வெந்நீர் கேட்டிங்களே போட்டு வச்சிருக்கேன் வாங்க என்று கூட்டிக்கொண்டு போகிறார். அதனால் முத்துவுக்கு சந்தேகம் அதிகமாகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications