ரோகினிக்கு செம பதிலடி கொடுத்த மீனா.. ஸ்ருதி செய்த செயலால் கோபத்தில் முத்து.. விஜயாவுக்கு வந்த ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் மீனாவிடம் ரோகிணி மனோஜின் துணிகளை துவைக்க சொன்னதற்கு பதிலடி கொடுத்து அவமானப்படுத்தி இருக்கிறார்.
அப்போது மீனாவுக்காக சப்போர்ட்டுக்கு வந்த ஸ்ருதி செய்த செயலால் முத்து கோபப்பட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதி மார்டன் உடை அணிந்து கொண்டு வந்திருப்பதை பார்க்க முடியாமல் அண்ணாமலை முகத்தை திருப்பிக் கொண்டு இருக்க, மீனா ஸ்ருதியை தனியாக அழைத்து சென்று பொறுமையாக எடுத்து சொல்ல அதற்கு ஸ்ருதி சரி நான் உங்களுக்காக இந்த டிரஸ்சை மாத்திக்கிறேன் என்று சொல்லி கிளம்பி போகிறார்.
அதை பார்த்ததும் விஜயா மற்றும் ரோகினி ஷாக் ஆகிறார்கள். அதைத் தொடர்ந்து மீனா துணி துவைக்க போகும் போது விஜயா இந்தா இது எல்லாம் அவரோட துணி துவைச்சிடு என்று எடுத்துக் கொடுக்க அதற்கு மீனா சரி என்று கிளம்ப, பிறகு ரோகிணி மனோஜ் துணிகளை எடுத்துட்டு வந்து இதை கொஞ்சம் துவச்சிருங்க நாளைக்கு மனோஜ்க்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொல்ல,
அதற்கு மீனா நான் உங்க புருஷனுக்காக எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி அவருடைய டிரஸ்ஸை கொஞ்சம் எடுத்துட்டு வந்து மீனா கையில் கொடுக்க, அப்போது மீனா ஏற்கனவே நிறைய துணி வச்சிருப்பதை பார்த்து சாரி மீனா நீங்க இவ்வளவு துணி வச்சிருக்கீங்க, இதுல நான் வேற கொண்டு வந்து இருக்கேன்.

எனக்கு கையில துவைக்க தெரியாது. ஆன்ட்டி நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று விஜயாவை சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். காலையில் இருந்து மீனா எல்லா வேலையும் செஞ்சுட்டு இருக்காங்க, அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்ல என்று ஸ்ருதி சப்போர்ட் செய்ய அதற்கு விஜயா இதையெல்லாம் மீனா ஈஸியா செஞ்சிடுவா. இதை செஞ்சிட்டு வேற வேலை இருக்கு அவளுக்கு. அவள் என்ன ஆபிசுக்கு போக போறா என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.

அதற்கு ஸ்ருதி, ரோகிணி நீங்களாவது ஹெல்ப் பண்ணலாம்னு சொல்ல நான் ஒன்னும் சும்மா இல்ல ஸ்ருதி, நான் பார்லர் போய்ட்டு நாள் முழுக்க நின்னுட்டு வரேன் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து நாம செய்றதும் ஒரு வேலை தான். ஆனால் மீனா எல்லா வேலையும் மதியத்துக்குள்ள செஞ்சு முடிச்சிட்டு படுத்து தூங்கலாம், அதுக்கு டைம் இருக்கு. நமக்கு அப்படி இல்லை ஏழு எட்டு மணி நேரம் நின்னு வேலை பார்க்கணும் என்று ரோகினி சொல்கிறார்.

அதற்கு அப்போ வீட்டு வேலைக்கு ஒரு ஆளு வெச்சிடலாம் இல்ல என கேட்க, மீனா கல்யாணம் ஆகி நான் வரதுக்கு முன்னாடி வரைக்கும் ஆள் இருந்தாங்க என்று போட்டுக் கொடுக்க, அப்புறம் ஏன் அவங்க வரல என்று கேட்க அவளுக்கு ஏதோ உடம்பு முடியலன்னு வராமல் நின்னுட்டா என்று விஜயா சொல்கிறார். அதற்கு ஸ்ருதி, சரி அதை விடுங்க நீங்க வேணும்னா மீனா செய்ற வேலையை அங்கீகாரம் படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால் நான் அப்படி இருக்க முடியாது இருங்க வரேன் என்று சொல்லிட்டு ரூமுக்கு போய் அங்கிருந்து ஒரு 2000 பணத்தை எடுத்துட்டு வந்து மீனா கையில் கொடுக்க மீனா இது எதற்கு உங்களுக்கு எதுவும் பொருள் வாங்கணுமா என்று கேட்க, அதற்கு இல்ல இந்த பணம் உங்களுக்கு தான் நீங்க பார்க்கிற வேலைக்கு என்று சொல்லி உங்களுக்குன்னு ஏதாவது செலவு இருக்கும்ல்ல அதுக்கு பயன்படுத்திக்கோங்க என்று கொடுக்கிறார்.

அதற்கு கண் கலங்கியபடியே மீனா எல்லாரும் என்னை இந்த வீட்ல வேலை வாங்கிட்டே இருப்பாங்க நான் இந்த வீட்டில் இருக்கிறவர்கள் மேல இருக்கிற அக்கறையினால செய்றேன். ஆனா நீங்க பணத்தை கொடுத்து என்னை முழுசா வேலைக்காரியாகவே பாக்குறீங்களா? என்று கேள்வி கேட்க அப்படி பாக்கல அன்னைக்கு கூட ரோகிணி ஆன்ட்டிக்கு பாக்கெட் மணி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க.

அவங்க என்ன ஆன்ட்டிய வேலைக்காரியாவா பாக்குறாங்க. அந்த மாதிரி தான் இதுவும் நான் உங்களை சிஸ்டரா நினைச்சு தான் கொடுக்கிறேன் என்று கையில் பணத்தை கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார். விஜயா இதுக்கு தான் நீ அவகிட்ட இவ்வளவு அன்பாக நடந்துக்கிட்டியா? அவகிட்ட இருந்து பணத்தைக் கறக்க தான் இந்த வேலையா என்று ஏளனமாக பேசுகிறார்.
அதற்கு ரோகினி எனக்கு இது தெரியாம போயிடுச்சு... டிரஸ் கொடுக்கும் போதே கொஞ்சம் பணத்தையும் சேர்த்து கொடுத்து இருந்தா எதுவும் பேசாமல் வேலை செஞ்சுட்டு இருப்பாங்க என்று அவமானப்படுத்துகிறார். அதற்குப் பிறகு இரவு ரவி வீட்டிற்கு வந்ததும் ஸ்ருதியிடம் எதுக்கு நீ அன்னிக்குக்கு பணம் கொடுத்தா? உனக்கு அது தப்பா தெரியலையா என்று கேட்க,
அதற்கு ஸ்ருதி நான் மீனாவை என்னுடைய ஓன்சிஸ்டரா தான் பார்க்கிறேன். அதனால் தான் அவங்களுக்கு செலவுக்குனு பணம் கொடுத்தேன் என்று தன்னுடைய கருத்தில் உறுதியாக இருக்கிறார். அடுத்ததாக முத்து ரூமுக்கு வந்ததும் மீனா டல்லாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்கிறார். அதற்கு மீனா நீங்க சொன்னது சரிதான். எல்லாரும் என்னை இந்த வீட்ல வேலைக்காரியா தான் பாக்குறாங்க.
அவ்வளவுதான் எனக்கு இந்த வீட்ல இருக்குற மதிப்பு என்று சொல்லி ஸ்ருதி கொடுத்த பணத்தை கொடுத்து செஞ்ச வேலைக்கு சம்பளம் கொடுத்தாங்க என்று கூறுகிறார். முத்து யார் கொடுத்தது என்று கேட்க ஸ்ருதி கொடுத்தாங்க என்று மீனா சொன்னதும் அந்த விஷப்பாட்டில் பண்ண வேலையா இது என்று முத்து கோவப்பட மீனா கண்கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications