விஜயாவை பற்றி பேசி கண் கலங்கிய முத்து.. எதிர்பாராத உண்மை வெளிப்பட்டது.. நெகிழ வைத்த தருணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பம் நடைபெற்று இருக்கிறது.
அதாவது பொங்கல் விளையாட்டு போட்டியில் எல்லோரும் உண்மையை சொல்லும் விளையாட்டை ஸ்ருதி தொடங்கி வைத்திருக்க அப்போது முத்து தன்னுடைய அம்மா மீது தனக்கு இருக்கும் பாசத்தை காட்டி அனைவரையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இன்று வெளியான சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும். காரணம் இன்றைய எபிசோடில் டேர் ஆர் ட்ரூத் கேம் விளையாட்டை தொடங்கியிருந்ததால் இதில் ரோகினி பற்றிய உண்மைகள் வெளியே வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் அதற்கு நேர் மாறாக முத்து விஜயாவை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஏற்கனவே விஜயா முத்துவிடம் மட்டும் ஓரவஞ்சனை காட்டுவதை பார்த்து ஒருவேளை விஜயாவிற்கு முத்து மகனாக இருக்காதோ அண்ணாமலையின் மூத்த மனைவியின் பிள்ளையாக முத்து இருப்பாரோ அதனால் தான் விஜயா இப்படி நடந்து கொள்கிறாரோ என்ற கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல சில வீடுகளில் இப்போதும் மூன்று பிள்ளைகள் இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு பிள்ளையை அம்மாவுக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. ஒரு பிள்ளையை அதிகமாக பிடிக்கிறது. அது போல விஜயா நடந்து கொள்கிறாரா என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.
ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் முத்து, இதே பொங்கல் நாளில் தானே அம்மாவும் அப்பாவும் என்னை கொண்டு வந்து பாட்டி உங்ககிட்ட விட்டுட்டு போனாங்க, அந்த நாளை என்னால மறக்கவே முடியாது. ஆரம்பத்தில் எல்லாம் அம்மா என்ன ரொம்பவும் பாசமா பார்த்துக்கிட்டாங்க. எப்பவுமே எனக்கு அவங்க தான் தெய்வமா தெரிஞ்சாங்க. அவங்க கூட இருந்த நாட்கள் எல்லாம் என்னால் மறக்க முடியாது என்று உருக்கமாக முத்து சொல்லி இருக்கிறார்.

இதனால் நாளை அல்லது அடுத்த நாள் எபிசோட்டில் முத்துவை எதற்கு குழந்தையாக இருக்கும்போது விஜயாவிற்கு பிடிக்காமல் போனது என்பது பற்றி தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கனவே இன்றைய எபிசோடில் உறியடி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாட்டி ஆண்கள் எல்லோரும் விஜயா அணி என்றும்,

பெண்கள் எல்லோரும் அண்ணாமலை அணி என்றும் பிரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் முத்து மட்டும் தான் பானையை அடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில் தன்னை தூக்கி எல்லோரும் வெற்றியை கொண்டாடிய போது என்னை விட்டுட்டு நம்ம அணி தலைவியை தூக்கி கொண்டாடுவோம் என்று விஜயாவை தூக்கி கொண்டாடும் போது கூட விஜயா ஓர பார்வையால் முத்துவை பார்த்து நெகிழ்ந்து போயிருந்தார்.
இந்த நிலையில் இப்போது வெளியான ப்ரோமோவிலும் தன்னுடைய பாசத்தை முத்து காட்டி இருக்கும் நிலையில் இனி விஜயா மனம் மாறப்போகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications