குடும்பத்திற்கு முத்து கொடுத்த அதிர்ச்சி.. போலீசில் விஜயாவை மாட்டி விட துணிந்த ரவி.. எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் ஜனவரி மூன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி தனக்கு பணம் கொடுத்து வேலைக்காரியாக மாற்றிவிட்டார் என்று மீனா பீல் பண்ண அதற்கு முத்து முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் முத்து செய்த செயலை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா, ஸ்ருதி கொடுத்த 2000 ரூபாய் பணத்தை முத்துவிடம் கொடுத்து எல்லோரும் சொல்றது சரிதான் நான் இந்த வீட்ல கூட்டவும் சமைக்கவும் தா சரி, எல்லாரும் படிச்சிருக்காங்க வேலைக்கு போறாங்க ஆனா நான் அப்படி கிடையாதுல்ல. பூ கட்டுவது ஒரு பெரிய வேலைன்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனால் அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு இப்போ புரிஞ்சுகிட்டேன் என்று பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்க அதற்கு முத்து ஆறுதல் கூறுகிறார். பிறகு மீனா முத்துவிடம் ஸ்ருதி கொடுத்த 2000 ரூபாயை கொடுத்து எனக்கு அவங்க முகத்துல அடிச்ச மாதிரி திருப்பி கொடுக்க மனசு வரல. அதனால நீங்க ரவி கிட்ட கொடுத்துடுங்க என்று கொடுத்து விடுகிறார்.

அடுத்த நாள் காலையில் 5 மணிக்கு எழுந்து முத்து மீனாவின் அம்மா வீட்டிற்கு போய் கதவைத் தட்ட அவர்கள் இந்த நேரத்தில் யார் வந்து கதவை தட்டுனது? ஒருவேளை கந்து வட்டிக்காரன் ஜெயில்ல இருந்து திரும்பி வந்துட்டானோ என்று பயத்தில் அவனை அடிப்பதற்காக கட்டையை எடுத்துக்கொண்டு ரெடியாக நிற்கின்றனர்.
பிறகு கதவை திறந்ததும் முத்து நிற்பதை பார்த்து மாப்பிள்ளை நீங்களா இந்த நேரத்தில் வந்திருக்கீங்க என்று கேட்க, ஆமா எல்லாரும் ஒரு இடத்துக்கு போகணும் சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பி வாங்க என்று முத்து சொல்கிறார். அதேபோல இந்திரா, சத்யா எல்லோரும் கிளம்பி முத்துவுடன் வருகின்றனர். வீட்டிற்கு வந்த முத்து மீனாவையும் சீக்கிரம் குளிச்சிட்டு வெளிய போற மாதிரி புது புடவை கட்டிட்டு ரெடி ஆகு என்று சொல்கிறார்.

மீனா எங்கேயாவது வெளியே போறோமா என்று கேட்பதற்கு அதுக்கெல்லாம் அப்புறமா பதில் சொல்றேன் நீ ரெடி ஆகு என்று சொல்கிறார். அடுத்ததாக அவங்க அம்மா, அப்பா, மனோஜ், ரவி, ரோகிணி எல்லாரையும் கதவைத் தட்டி சீக்கிரம் கிளம்பி ரெடி ஆகுங்க ஒரு இடத்துக்கு போகணும் என்று சொல்கிறார். எல்லாரும் முத்து என்ன இப்படி காலம் காத்தால டார்ச்சர் பண்றாரு என்று திட்டிவிட்டு பிறகு ரெடியாகின்றனர்.

அதைத் தொடர்ந்து எல்லாரும் ரெடி ஆகி கீழே வரும்போது மீனா கீழே அவங்க அம்மா அப்பா சத்யா அவரோடு பூ கட்டும் நண்பர்கள் எல்லோரும் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்போது விஜயா இவங்கள பார்க்க தான் காலம் காத்தால நம்மளை கிளப்பி கீழே வர சொன்னானா? வாங்க போகலாம் என்று முகத்தை திருப்பிக் கொண்டு கிளம்ப, அதற்கு அண்ணாமலை விஜயாவை இருக்க சொல்லி விட்டு இந்திராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

பிறகு முத்து எல்லாரையும் வெளியே கூட்டிட்டு போகிறார். அப்போது வீட்டு வாசலில் கடை இருப்பதை பார்த்ததும் மனோஜ் என்ன நம்ம வீட்டு முன்னாடி யார் கடை போட்டு இருக்காங்க? நான் போலீஸ்க்கு ஃபோன் பண்ணுகிறேன் என்று போனை எடுக்கிறார். அதற்கு முத்து பண்ணு நீ போலீசுக்கு போன் பண்ணுனா அம்மாவை தான் அவங்க கைது பண்ணுவாங்க என்று முத்து ஷாக் கொடுக்கிறார்.
பிறகு அங்கிருக்கும் தார்பாயை எடுக்க அதில் மாதர் குல தலைவி விஜயா மலர் அங்காடி என்ற பெயரில் பூக்கடை வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு மேலும் உரிமையாளர் மீனா என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். இதை பார்த்து அண்ணாமலையும் மகிழ்ச்சி அடைகிறார். அதோடு முத்து விடாமல் அந்த கடையை ஸ்ருதியை வைத்து திறந்து வைக்க சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சியடைகிறார்கள்.
கடையை திறந்து வைத்ததும் ஸ்ருதியிடம் 2200 ரூபாய் பணத்தையும் முத்து கொடுத்து விட ஸ்ருதி முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டிற்கு போகிறார். அதுபோல விஜயாவும் கோபத்தில் என்ன செய்வது என்று குழப்பத்தில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது












Click it and Unblock the Notifications